5 October 2014

143 ன்னா I LOVE YOU ,144 ன்னா?+இரண்டாம் பிறந்த நாள் !

  -------------------------------------------------------------------------------------------------------
முதலில் எல்லோரும் ஜோரா கையைத் தட்டுங்க ...
இன்று ,ஜோக்காளியின் இரண்டாவது பிறந்த நாள் !
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

 திருடனுக்கும் இது தெரிஞ்சுப் போச்சா ?               

                        ''என்னங்க ,நேற்று நம்ம வீட்டுக்கு வந்த திருடன் ,உங்களை 'நீயெல்லாம் ஆம்பளை'யான்னு கேட்டானே ...ஏன் ?''
           '' பீரோ சாவி  என் கிட்டே இருக்கு ,லாக்கர் சாவி உன்கிட்டே இருக்குங்கிறதைச் சொன்னேன் !''


ஜோக்காளியின் முதல் கன்னி பதிவு இதுதான்.....

தினசிரி ஜோக் !!!

அன்னிய நேரடி முதலீடு நாட்டுக்கு ...வீட்டுக்கு ?  


உங்க அண்ணன் கல்யாணம் ஆனவுடனே சூப்பர் மார்க்கெட் ஆரம்பிச்சுட்டானே ,எப்படி ?

எல்லாம் அண்ணியின் நேரடி முதலீடு தான் !!!! 

இனி , 2012 வருடம் வந்த பதிவுகளையும்  தினசரி போட்டு உங்கள் கழுத்தறுக்கப் போறேன் ,ஜாக்கிரதை !

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

143 ன்னா I LOVE YOU ,144 ன்னா...?

             ''நீ அந்த பொண்ணு கிட்டே 143 ன்னு சொன்னதுக்கு ,அவங்க வீ ட்டிலே அவளுக்கு 144  போட்டுட்டாங்களா, என்னடா சொல்ற ?''
              ''ஐ லவ் யு ன்னு சொன்னேன் , அவளை வீட்டை  விட்டு வெளியே போகக்கூடாதுன்னு  தடை உத்தரவு போட்டுட்டாங்களே !'' 

இசை கேட்டால் புவி அசைந்தாடுமா ?

மன்னர் அக்பர் அவையில் இசைக் கலைஞராக இருந்த தான்சேன் 
தீபக் ராகத்தை  பாடியபோது ...
மெழுகுவர்த்திகள் தானாக எரிந்தனவாம் ...
மேக் மல்ஹார் ராகத்தைப் பாடி மழையை வரவழைத்தாராம்...
நம்ம சிவாஜியும் தான்சேன் வேடமணிந்து பாடி ...
கோமா நிலையில் இருந்த ராணியை உயிர்த்தெழ வைக்கிறார் ...
இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்ற அந்த பாடல் அமைந்த  ராகத்தின் பெயர் ...
'எமன் 'கல்யாணியாம்,நம்ப முடிகிறதா ?  

26 comments:

  1. 01. பொண்டாட்டி கிட்டே சாவி இருக்குன்னு சொன்னதுல உள்குத்து இருக்கோ.....

    02. அதாவது வந்க தட்சினையிலயா ?

    03. அப்படீனாக்கா வோ? 145 ன்னா ?

    04. உமன் என்றால் ? எமனும் வாயப்பொழப்பானோ ?

    ReplyDelete
    Replies
    1. 1 நீங்க சொல்றதிலும் ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுதே )

      2வரதட்சனை எவ்வளவு என்று கூட்டிக் கழிச்சுப் பார்த்துக்குங்க )

      3. 420யை வேண்டுமானால் தெரியும் ,145 யா )

      4.அப்படித்தான் தோணுது )

      நன்றி

      Delete
  2. வாழ்த்துகள் சார்..

    ReplyDelete
    Replies
    1. இரண்டாம் ஆண்டு பிறந்த நாளை தெரிந்து கொண்டு சுடச் சுட வாழ்த்து சொல்லி வலைச் சரத்திலும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி !

      Delete
  3. வலைப் பூவின் இரண்டாம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி !

      Delete
  4. வணக்கம் சார்,
    உங்கள் பதிவை வலைச்சரத்தில் இணைத்துள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றேன்...நன்றி

    ReplyDelete
    Replies
    1. இன்று காலையில் கைப் பேசியில் தங்களுடன் உரையாடி என் நன்றியைச் சொல்ல சந்தர்ப்பம் கிடைத்ததை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறேன் !

      Delete
  5. சிரிப்புடன் சிந்தனையும் கலந்து
    மனமது மகிழந்து மிதக்க
    மற்றவர்க்கு இன்பம் ஈந்த ஜோக்காளிக்கு
    இனிய இரண்டாம் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    ரசித்தேன்...நன்றி

    ReplyDelete
    Replies
    1. கவிதையில் நனைய வைத்து வாழ்த்தியமைக்கு நன்றி !

      Delete
  6. வாழ்த்துகள் பாஸ்! ஆஹா! இனி நாலு ஜோக்ஸா!!! இதுக்கு நாங்க சந்தோசபடுவோம் பாஸ்!
    143 , 144, பாவம் பாஸ் அந்த பொண்ணு:(((

    ReplyDelete
    Replies
    1. சந்தோசம் நிலைத்திருக்க வாழ்த்தியமைக்கு நன்றி !

      தடை போட்டாலும் ,பெத்தவங்களை பாவம் என்றாக்கி ஓடத்தானே போகிறாள் )
      நன்றி

      Delete
  7. ஜோக்காளி...அவர்கள் இரண்டாவது பிறந்த நாளில்... ஜோக்கா...இருக்க.... எல்லாம்வல்ல பகவான்ஜீயை கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வேண்டுதலை நிறைவேற்றினோம் (அதென்ன பன்மைன்னு கேட்கக்கூடாது ..சாமி கண்ணைக் குத்திடும் ))
      நன்றி

      Delete
  8. தம நான்கு
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்தி த ம சாக்லேட் கொடுத்ததற்கு நன்றி !

      Delete
  9. சூப்பர் ஜோக்ஸ்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சுரேஷ் ஜி !

      Delete
  10. இரண்டாம் ஆண்டு நிறைவு பதிவுக்கு பொருத்தமாய் இரண்டாவது வாக்கு அளித்தமைக்கு நன்றி !

    ReplyDelete
  11. பிறந்த நாள் வாழ்த்துக்கள்! தாமதத்திற்கு மன்னிக்கவும்! ஜோரா கை தட்டிட்டியோம் ஜோக்காளிக்கு! பல வருடங்கள் காண ஜோக்காளியை வாழ்த்துகின்றோம்....

    143, 144 மிகவும் ரசித்தோம்! சூப்பர் டைம்லி விட்....ஜி!

    ReplyDelete
    Replies
    1. 48 மணி நேரத்திற்குள் கமென்ட் போடுவது ஒன்றும் தாமதமில்லை .இதில் மன்னிக்கவும் ஒன்றுமில்லை .

      டைம்லி விட்டா )

      நன்றி

      Delete
  12. பிறந்த நாள் வாழ்த்துக்கள். தாமதமாக சொன்னதற்கு மன்னிக்கவும்.
    இரண்டாவது பிறந்த நாள் என்றால் - இரண்டாவது நூற்றாண்டு பிறந்த நாள் என்று எடுத்துக்கொள்ளவா?

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்து சொன்னதே மகிழ்ச்சிக்குரியதாச்சே !

      யாருக்குமே வராத சந்தேகம் உங்களுக்கு வந்ததும் மகிழ்ச்சிக்குரியதே)

      நன்றி

      Delete
  13. 143 மேட்டர் , சூப்பர்ணா !

    'எமன்' கல்யாணிய இப்போதான் கேள்வி படறேன் .

    'அண்ணி'ய முதலீடு வித்தைலாம் அருமை

    ReplyDelete
    Replies
    1. எமனை , நானும்தான் கேள்வி பட்டதும் அசந்து போனேன் )

      சர்க்காருக்கே முதலீடு ஐடியா கொடுப்பாங்க போலிருக்கே )

      நன்றி !

      Delete
  14. இரண்டாம் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் , இருநூறாம் பிறந்தநாளுக்கு , அட்வான்ஸ் வாழ்த்துகள் ஜி ...

    ReplyDelete