10 October 2014

தேவதைகள் உலா வரும் நேரம் ?

-----------------------------------------------------------------------
 இப்படி சொல்லி தப்பிக்க நினைக்கிறாரோ ?  
            
                 ''கைதாகி இருக்கிற தலைவர் மேல் நீதிபதி காட்டமா இருக்காரே ,ஏன் ?''
                    ''பிணை நீங்க தராவிட்டாலும் பரவாயில்லை .சுப்ரீம் கோர்ட்டில்  வாங்கிக்கிறதுக்காவது  என்னை வெளியே விடுங்க என்று கேட்டாராம் !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்.....

காண்டம் என்றால் ஆங்கில அர்த்தமே வேறு !

             ''பதுங்கு குழியை பார்வையிட்ட மன்னர் ...இதென்ன ஒதுங்கு குழியான்னு  கோபமா சத்தம் போடுறாரே ,ஏன் ?''
               ''உள்ளே நாலு காண்டம் கிடக்குறதை பார்த்துட்டாரே !''


காதலிக்கவும் இனி கற்றுக் கொள்ளலாம் !

இன்னும் சில வருடங்களில் ...
டாக்டர் வக்கீல் ஆடிட்டர் போல் 
காதல் ஸ்பெசலிஸ்ட்களும் கடை திறக்க இருக்கிறார்கள் ...
குறைந்து விடுமா ?ஒரு தலைக் காதல்...
மறைந்து விடுமா ?ஆசிட் வீச்சுக்கள்...
காதலர்கள் தற்கொலைகள் காணாமல் 
போய்விடுமா? 
விடை காண காத்திருப்போம் ...
2014ம் ஆண்டு முதல் கொல்கத்தா பிரெசிடென்சி 
பல்கலைகழகம் 'காதல் 'படிப்பை துவங்குகிறது !
காதல் ஏன் வருகிறது ?
காதலின் நன்மை தீமைகள் என்னவென்று 
சொல்லித்தரப் போகிறார்களாம் !
இந்த படிப்பில் சேர காதலித்து  இருக்க வேண்டுமா ?
காதலில் தோற்றவர்களுக்கு கட்டண சலுகை உண்டாவென்று இனிமேல் தெரிய வரும் !
புதுப் பாடப் பிரிவில் ...
கள்ளக் காதல்,காமசூத்ரா விளக்கங்களும் தந்தால் நாட்டிற்கு மிகவும் நல்லது !

சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!

மருமகள் துடிப்பது ....நடிப்பா?

                  ''உன்  மாமியாருக்கு இரக்கமே இல்லையா ,ஏன்?''

                ''நான் காக்கா வலிப்புலே துடிக்கிறப்போ கூட ,தன் இடுப்புலே 
இருக்கிற இரும்பு சாவியை என் கையிலே தரவே இல்லையே!''

'சிரி'கவிதை!

தேவதைகள் உலா வரும் நேரம் !

அந்தி மாலை ,விளக்கேற்றும் நேரம் ..
தேவதைகள்  உலா வரும் நேரம் என 
கதவு ஜன்னலை திறந்து வைத்ததெல்லாம் 
அந்தகாலம் !
தேவை இல்லாத பூச்சிகள் எல்லாம் நுழையுமென 
எல்லாவற்றையும் இழுத்து மூடுவது 
இந்தகாலம் !

30 comments:

  1. ரசித்தேன்.தம.1

    ReplyDelete
    Replies
    1. உண்மையாவா ?
      நன்றி

      Delete
  2. மாமியாருக்கு தெரியும் மருமகள் இடுப்பு சாவியை வாங்குறதுக்காத்தான் நடிக்கிறா என்று.

    கவிதை சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. முன்பு அப்படி வாங்கிய அனுபவமோ ?)
      நன்றி

      Delete
  3. வணக்கம்
    இரசித்தேன் நினைத்து நினைத்து சிரித்தேன்...
    த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நினைத்து நினைத்து சிரித்ததற்கு நன்றி !

      Delete
  4. ரெண்டு சிரி கவிதையும் ரொம்ப சிந்திக்க வைத்துவிட்டன:((
    முதல் ஜோக் செம டைம்லி பாஸ்:))

    ReplyDelete
    Replies
    1. அப்படியா )
      நன்றி

      Delete
  5. அருமையான தலைப்பு.. ரசித்தேன்..

    ReplyDelete
    Replies
    1. காபி ரைட் வாங்கி வைத்துக் கொள்ளட்டுமா ?)
      நன்றி

      Delete
  6. தேவதைகள் வரும் நேரம் அருமை...

    ReplyDelete
    Replies
    1. அந்தி மாலை நேரம் அழகுதானே )
      நன்றி

      Delete
  7. ஹாஹாஹா,......எலாமே!

    உஷார் மாமியார் போல!.....அவருக்குத் தெரியாதா என்ன மருமகளைப் பற்றி! இவரும் ஒரு காலத்தில் மருமகள்தானே! நண்டின் கால் நண்டறியும்!!!!

    ஜி, இப்போதெல்லாம் காதலுக்கும் கவுன்சலிங்க் வந்துவிட்டதே! பல வார, மாத இதழ்களில் கூட காதல் பற்றிய யோசனைகளுக்கு, வாசகர்களுக்கு கவுன்சலிங்க் செய்கின்றார்களே! அதற்கான கடைகளும் (ஆங்கிலத்தில் டாக்டர் ஷாப் என்று சொல்லுவதால்) இருக்கின்றதாகத்தன் கேள்வி!!!



    ReplyDelete
    Replies
    1. # நண்டின் கால் நண்டறியும்!!!!#
      சரியாக சொன்னீர்கள் ,மருமகள் நினைப்பு முன்னாள் மருமகளுக்கு தெரியாதா என்ன )

      சொல்லித் தெரியுமா .இந்த காதல் கலையும்)
      நன்றி

      Delete
  8. ஜி அந்த தேவதைகள் உலாவரும் நேரம் ஆஹா!!

    ReplyDelete
    Replies
    1. அந்த நேரத்து கொசுக்கடியை நீங்கள் அனுபவித்ததில்லை போலிருக்கே )
      நன்றி

      Delete
  9. //புதுப் பாடப் பிரிவில் ...
    கள்ளக் காதல்,காமசூத்ரா விளக்கங்களும் தந்தால் நாட்டிற்கு மிகவும் நல்லது !//

    இவை காரணமாக நடைபெறும் வெட்டு, குத்து, கொலைகள் பற்றியும் பாடம் நடத்தலாம்!

    ReplyDelete
    Replies
    1. இவைத்தவிர வேறென்ன முக்கிய பாடம் இருக்கப் போகிறது )
      நன்றி

      Delete
  10. //மருமகள் துடிப்பது ....நடிப்பா?//

    நடிப்பேதான்!

    ReplyDelete
    Replies
    1. புதிய பறவையில் சிவாஜி ,கன்னடத்துக் கிளியிடம் 'அதெல்லாம் நடிப்பா 'ன்னு உணர்ச்சி பொங்க கேட்டதுதான் நினைவுக்கு வருகிறது )
      நன்றி

      Delete
  11. எப்படியாவது ஏமாற்றியோ அல்லது யாராவது ஏமாந்தோ கிடைத்தால் தான் உண்டு, பிணை!

    ReplyDelete
    Replies
    1. ஜெயிக்கப் போறது யாரு ?பொறுத்திருந்து பார்ப்போமே )
      நன்றி

      Delete
  12. Replies
    1. என்னாச்சு ,லாப்டாப்பை கொண்டுவரலியா ,செல்மூலமாவே கமெண்ட்போடுற மாதிரி இருக்கே !
      எப்படி அடுத்த பதிவைப் போடப்போறீங்க )
      நன்றி

      Delete
  13. எல்லாமே அருமை. பதுங்கு குழி, ஒதுங்கு குழி.... ஹா..ஹா...ஹா...!

    ReplyDelete
    Replies
    1. இதுக்காவது பயன்படுதேன்னு சந்தோசப் படுறதை விட்டுட்டு இதென்ன கேள்வி )
      நன்றி

      Delete
  14. தேவதை உலா வருவது , நடந்தா... பைக்கிலா..அல்லது பறந்தா...???

    ReplyDelete
    Replies
    1. காலிருந்தும் ,இறக்கை இல்லாமல் பறந்து )
      நன்றி

      Delete
  15. காண்டம் என்றால் ஆங்கில அர்த்தமே......... வேறுன்னா...... தமிழ்ல என்ன அர்த்தம்...ஹி ‘ ஹி..

    ReplyDelete
    Replies
    1. படிக்கலைன்னாலும் சுந்தர 'காண்டம் 'னு கேள்வி பட்டிருக்கேனே )ஹி..ஹி ..
      நன்றி

      Delete