27 October 2014

ஒட்டு கேட்பது பெண்கள் குணம் மட்டுமல்ல !

---------------------------------------------------------------------------------
 நேற்று ,இங்கே மதுரையில் சிறப்பாக நடந்த பதிவர் திருவிழாவில் ஜோக்காளிக்கு வந்த வாழ்வு :)

இனியும் தொண்டர்களை ஏமாற்ற முடியாதோ ?             
           ''ஆண்ட பரம்பரை ஆள நினைப்பதில் என்ன குறைன்னு தொண்டர்களிடம் கேட்டது தப்பாப் போச்சா ,ஏன் தலைவா ?''
             ''ஆளும் கட்சி முதல்வரின் காலை நக்கிட்டு இருந்தா ஆள முடியாது ,நீங்க வேணா வாழ முடியும்னு திருப்பித் தாக்குறாங்களே !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்....

கிளி மூக்கு பொண்ணுக்கு மூக்குடைந்த மாப்பிள்ளையா ?

               ''தரகரே ,நீங்க சொன்ன பையன் ...எல்லா விசயத்திலேயும் மூக்கை நுழைச்சி 'மூக்குடை'படுவாராமே ,உண்மையா ?''
               ''அப்படின்னா மூக்கிலே தழும்பு இருக்குமே ,நீங்களே நேரிலே பார்த்து முடிவு பண்ணுங்க !''

ஒட்டு கேட்பது பெண்கள் குணம் மட்டுமல்ல !

அடுத்தவர் பேசுவதை ஒட்டுகேட்பது பெண்கள் குணம் என்றுதான் நம் தமிழ் திரைப்படங்களில் காட்டி வந்து இருக்கிறார்கள்...
அமெரிக்க வெள்ளை மாளிகைக்கும் ,ராணுவ மையமான பென்டகனுக்கும் அந்த குணம் உண்டென்று தெரிய வந்துள்ளது ...
உலகில் உள்ள முக்கிய தலைவர்கள் முப்பத்தைந்து பேரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப் பட்டுள்ளது ...
இதனால் கொதிப்படைந்த ஜெர்மன் தன் கண்டனத்தை தெரிவிக்க ...
இனிமேல் இப்படி நடக்காதென்று உறுதி  அளித்துள்ளார் ஒபாமா !
ஏற்கனவே பேஸ்புக் ,கூகுள்,யாகூ இணைய தளங்கள் மூலமாய் நம் அனைவரின் அந்தரங்கத்திலும் 'கழுகு'மூக்கை நுழைத்தது அம்பலமானது...
அமெரிக்கா தனி மனித சுதந்திரத்தை ...மிகவும் மதிக்கும் நாடல்ல ...
மிதிக்கும் நாடு என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது !
இந்த கேடு கேட்ட காரியத்திற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டிய நம் இந்தியா ...
நம் பிரதமருக்கு செல்போனும் இல்லை ,இ மெயில் முகவரியும் இல்லை ...
ஒட்டு கேட்டிருப்பதற்கு வழியே இல்லை என இயலாமையை பறைசாற்றிக் கொண்டுள்ளது !

சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்..
143ன்னா I love you ஆச்சே !
               ''எந்த  வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருட  காந்தி ஜெயந்தியை காதலர்கள் கொண்டாட காரணம் என்ன?''
              ''காதலர்களுக்கு பிடித்த '143'வது காந்தி ஜெயந்தி  ஆச்சே இது !''\


31 comments:

  1. ஜோக்காளிக்கு வாழ்வு வழங்கிறரா
    ஜோக்காளிக்கு பரிசில் வழங்கிறரா
    எங்கள் புலவர் ஐயா?
    பதிவர் சந்திப்பு நிகழ்ந்தாலும்
    ஜோக்காளிக்கு விடுமுறை இல்லைப் போலும்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. பதிவர் சந்திப்பு நடைபெற நான் செய்த உதவிகளை பாராட்டும் முகமாக ,நினைவுப் பரிசினை திரு .ரத்னவேல் நடராசன் அவர்கள் வழங்கும் காட்சிதான் அது !

      விடுமுறையா ,அது எதற்கு ?என்னால் எத்தனை நாளைக்கு தினசரி தொடர்ச்சியாக பதிவுகளை போடமுடியும் என்று ஆராய்ச்சி செய்துக் கொண்டிருக்கிறேன் !
      நன்றி !

      Delete
    2. இனிய வாழ்த்துகள்
      தொடரட்டும் தங்கள் பணி
      தங்களைத் தொடருவதே எங்கள் பணி

      Delete
    3. பணி சிறக்க வாழ்த்துகள்:)

      Delete
  2. ஜோக்காளிக்கு எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்! என்ன இது அநியாயம் ஜோக்காளியின் சின்னமாகிய அந்த ரகசிய கூலிங்க் க்ளாஸ் இல்லாமலா?!!!!! மேடையேறுதல்?!!!!! கண்டனம்!!!!!! ஹ்ஹஹஹ....

    எல்லா ஜோக்குத் துணுக்குகளும் ஹாஹஹ ரகம்!!!!

    ReplyDelete
    Replies
    1. நேற்று வெயிலின் தாக்கம் குறைந்து குளுமையான காற்று வீசியதால் கூலிங் கிளாசுக்கு வேலையில்லாமல் போய்விட்டது :)

      வாழ்த்துக்கு நன்றி !

      Delete
  3. வணக்கம் சார்.உங்களை விழாவில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..நன்றி

    ReplyDelete
    Replies
    1. பதிவர் விழாவில் உங்களின் 'ஒரு கோப்பை மனிதம் 'புத்தகம் வெளியீட்டு விழா சிறப்பாக அமைந்ததில் எனக்கும் மகிழ்ச்சி !
      நன்றி

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  4. விருதுக்கு வாழ்த்துகள்.

    மற்ற நகைச்சுவைகளையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களையும் எதிர்ப்பார்த்தேன் ஸ்ரீராம் ஜி !
      வாழ்த்துக்கு நன்றி !

      Delete
  5. கூலிங் கிளாஸ் இல்லாமல் ஜோக்காளியை அடையாளம் தெரியவில்லை!
    வரமுடியாமல் போன வருத்தம் இன்னும் மனதில் இருக்கிறது.
    விருது வாங்கியதற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. சென்ற வருடம் சென்னை பதிவர் சந்திப்பில் தங்களை சந்தித்தது நினைவுக்கு வருகிறது மேடம் ! வருகிற ஆண்டில் புதுக் கோட்டையில் நடக்க இருக்கிறது ,நிச்சயம் சிந்திப்போம் !
      வாழ்த்துக்கு நன்றி !

      Delete
  6. ஆளே மாறீட்டீங்க இந்த வருசம்! ஜோக்ஸ் கலக்கல்! இந்த முறை வர முடியாமல் போனதில் எனக்கு வருத்தம்தான்!

    ReplyDelete
    Replies
    1. கடந்த சென்னை பதிவர் சந்திப்பின் போது நான் போட்டு நீங்கள் பார்த்த , என் புகைப்படத்திற்கும் ,இன்றைய புகைப் படத்திற்கும் அவ்வளவு வித்தியாசமா உள்ளது :)
      அடுத்து புதுக்கோட்டையில் சந்திக்கத்தான் போகிறோம் !
      நன்றி !

      Delete
  7. ஆளே மாறீட்டீங்க இந்த வருசம்! ஜோக்ஸ் கலக்கல்! இந்த முறை வர முடியாமல் போனதில் எனக்கு வருத்தம்தான்!

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் ரொம்பத்தான் மாறிட்டேன் போலிருக்கு ,வியப்பில் மறுபடியில் அதே கமெண்ட் போடும் அளவிற்கு :)
      நன்றி

      Delete
  8. பதிவர் திருவிழாப் படம் பார்த்து.....
    இப்படிச் சின்னக் குழந்தையா
    இத்தனை நகைச்சுவைப் பகிடி எழுதுவது.....!!!!!!!
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. அபுதாபியில் இருந்து வந்திருந்த கில்லர்ஜீயும் நேற்று நேரில் முதன் முதலில் என்னைப் பார்த்ததும் ,உங்களைப் போன்றே ஆச்சரியப் பட்டார் !
      உங்கள் காதைக் கொஞ்சம் அருகில் கொண்டு வாருங்கள் ,ஒரு ரகசியம் சொல்றேன் ....இந்த சின்னக் குழந்தைக்கும் வயது அரை நூற்றாண்டு மேலாகி விட்டது :)
      நன்றி !

      Delete
  9. பதிவர் சந்திப்பில் தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. தங்களைப் போன்றோரின் முயற்சியால் விழா இனிதே நடந்ததில் என்னைப் போன்றோர் பெரிதும் பயன் பெற்றோம். நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்களை சந்தித்ததில் நானும் பயன்பெறுகிறேன் ,உங்கள் தளத்தின் தொடராளி ஆகிவிட்டேனே :)
      நன்றி !

      Delete
  10. Replies
    1. தமிழன் மற்றும் தமிழ் வாசியுடன் இணைந்து அசத்திட்டோம் என்பதே சரியாய் இருக்கும் ,பாஸ் !
      நன்றி !

      Delete
  11. கொஞ்ச நேரம் நான் யோசித்துக் கொண்டிருந்தேன் யார் என்று பின்னர் கண்டு பிடித்து விட்டேன் இபொழுது தான் தெரிகிறது கூலின் கிளாஸ் மிஸ்ஸிங் அது தான் கஷ்டப்பட்டேன். அனைத்து ஜோக்ஸ் சும் ரசித்தேன். நன்றி தொடர வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. நான் என்னை இனிமேலும் மறைத்து கொள்ள முடியாது போலிருக்கு நண்பர்கள் சுட்டு தள்ளிய புகைப் படங்களை பகிர்த்து வருகிறார்களே :)
      நன்றி

      Delete
  12. பதிவர் சந்திப்பில் உங்கள் பங்களிப்பு - வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நான் மதுரை மண்ணின் மைந்தனாச்சே ,என்னாலான பங்களிப்பை செய்தேன் :)
      நன்றி

      Delete
  13. பதிவர்கள் பலரை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. முதல் முறை என்றாலும் நீண்ட நாள் பழகிய நண்பர்கள் போல் நாம் சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி அய்யா !
      நன்றி

      Delete
  14. சே...செல்போனும் .ஈ....ஈ..மெயிலும் இல்லாத பிரதமறு...... ஒரு பிரதமறா......???

    ReplyDelete
    Replies
    1. அந்த காங்கிரஸ் பிரதமருக்கு செல்போன் ,ஈ மெயிலுக்கு பதிலா சோனியா ஜியும்.ராகுல் ஜியும் இர்ந்தார்களே :)
      நன்றி

      Delete