4 October 2014

பேக்கரி கடையிலுமா நடிகை பெயர் ?

 ---------------------------------------------------------------------------------------------------  

இவரோட கொள்'கை'ப் பிடிப்பு யாருக்கு வரும் ?

 
             ''பிச்சைப் போடும் போது இடது கையை  பின்னாலே  வைச்சுக்கிறீங்களே ,ஏன்?''
                ''வலது கை கொடுப்பது  இடது கைக்கு தெரியக் கூடாதுன்னு நினைக்கிறவன் நான்  !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

பேக்கரி கடையிலுமா  நடிகை பெயர் ?

             ''காலத்திற்கேற்ற மாதிரி விளம்பரம் பண்றதாலே ,வியாபாரம் ஓஹோன்னு இருக்கா ,எப்படி ?''
                 'இன்றைய ஸ்பெசல் 'சமந்தா ரொட்டி 'ன்னு போட்டேன் ,பய புள்ளைங்க அள்ளிகிட்டு போயிட்டாங்களே!''

இந்தியா சுய காலில் நிற்பது எப்போது ?

யானைக்கும் அடி சறுக்கும் ...
அமெரிக்காவில் எட்டு லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ...
தென்னையில் தேள் கொட்டினால் பனையில் நெறி கட்டணுமே...
இங்கே ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு அமெரிக்க பொருளாதாரச் சரிவு தான் காரணம் என்றார்கள் !
உலக தாதா அமெரிக்க யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளட்டும் ...
அந்த மண் நம் தலையிலும் விழும் என்றால்... 
நாம் கடைப் பிடிப்பது சுய சார்பு பொருளாதாரக் கொள்கைதானா ?

33 comments:

  1. 01. அப்படீனாக்கா, இடது கண்ணுக்கும் வலது கண்ணுக்கும் தெரியலாமா ?

    02. நம்ம நாட்டான்தான் சமைஞ்ச ரொட்டினு போட்டாலும் அள்ளிக்கி்ட்டு போவாங்களே...

    03. அரசியல்வாதிகள் 1000 கோடி, 1500 கோடினு அடிச்சுக்கிட்டு போயி ஸ்விஸ்ல கொட்டிக்கிட்டு வந்தாங்கன்னா அப்புறம் எப்படி சுயகாலில் நிற்பது நொண்டிக்காலுதான்.

    ReplyDelete
    Replies
    1. 1.இனிமேல் கண்ணை மூடிக்கிட்டு தரச் சொல்லிடலாமா ?அவர் மனைவி ஒத்துக்கணுமே ௦

      2.பூஞ்சான் பிடிச்ச ரொட்டியைக் கூட விடலைன்னு கேள்வி பட்டேன் )

      3.2020 ல் நாடு வல்லரசு ஆகிவிடும்னு சொல்றாங்களே ,ஒருக் 'கால் ' ஆகுமா )
      நன்றி

      Delete
  2. முதல் ரெண்டும் சிரிக்க வைத்தது.... மற்றது சிந்திக்க வைத்தது ஜி.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னதில் தவறே இல்லை )
      நன்றி

      Delete
  3. இது தான் நான் அடிக்கடி ஓட்டுப் போடும் போது இடக்கையை கீழ
    தொங்கப் போடுவதற்கான காரணம் :)

    ReplyDelete
    Replies
    1. நம்ம வோட்டு ,கையிலே காசு வாயிலே தோசை சமாச்சாரம் ஆச்சே )
      நன்றி

      Delete
  4. தத்துவம், தந்திரம், வழிகாட்டல் என மூன்று பதிவுகளும் நன்று,
    சிறந்த நகைச்சுவைப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவை என்பதற்கு பதிலாய் ,நீங்க சொன்ன மாதிரியே பதிவு லேபிளில் போடலாம் போலிருக்கே )
      நன்றி

      Delete
  5. ஹஹாஹஹஹஹஹ்ஹ...

    சமந்தாவ இப்படி ரொட்டியாக்கிட்டீங்களே ஜி! ஹ்ஹஹ்ஹஹ்ஹ்

    சிந்திக்க வைக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. அவுகளைப் பார்த்தா ஜாம் தடவுன ரொட்டி மாதிரிதானே இருக்காக )
      நன்றி

      Delete
  6. ஹ ஹா ஹா
    சுய சார்பு சிரிபொலி..

    ReplyDelete
    Replies
    1. சுய சார்பு சுடரொளின்னு சொல்லும் படியா எந்த தலைவரும் நமக்கு கிடைக்காதது நமது துரதிர்ஷ்டம் தான் !
      நன்றி

      Delete
  7. 1.மூக்கு கொஞ்சம் புடப்பா இருந்தா இப்படிதான் சிந்திக்க தோன்றுமாம் ://
    2.சமந்தா ரொட்டியா???!!!
    3. ஏனோ இந்த ஜோக் அழுகை வரவழைக்குது பாஸ் அவ்வவ்வ்வ்வ்
    தம 4

    ReplyDelete
    Replies
    1. 1.நேற்று ,சொக்கன்ஜி முன் நெற்றி ஏறி இருக்கிற ரகசியத்தை போட்டு உடைக்கிறார் ,நீங்க.....என் போட்டோவை மாற்ற வேண்டிய நேரம் வந்திருச்சு )
      2.ஜாம் ரொட்டி கிடைக்கும்னா ஒரு பயலும் வாங்க வர மாட்டேங்கிறார்களே)
      3.யானை அள்ளிப் போட்டுகிட்ட மண்ணுலே கொஞ்சம் உங்க கண்ணுலே விழுந்திருக்கும் ,அதான் அழுகை வருது )
      நன்றி

      Delete
  8. வணக்கம்
    இரசிக்கவைக்கும் நகைச்சுவை.... சமந்தா ரொட்டி சரி.. அடுத்த ரொட்டி என்னவாக இருக்கும்.? த.ம4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரொட்டி இல்லே ,தொட்டுகிட்டு சாப்பிட அமலா 'பால் ' ரெடி )
      நன்றி

      Delete
    2. டைரக்டர் விஜய் சண்டைக்கு வரப்போறாரு பாஸ்:)))#அமலா பால்

      Delete
    3. டைரக்டர் விஜய் டேக் இட் ஈசி பாலிசி ஹோல்டராச்சே,ஒன்னும் கோவிச்சுக்க மாட்டார் )

      Delete
  9. என்ன ஒரு கொள்கைப் பிடிப்பு!

    என்ன ஒரு ரசிகர்கள்!

    என்ன ஒரு கருத்து!

    ReplyDelete
    Replies
    1. என்ன ஒரு ரசனைன்னு சொல்லத் தோணுது உங்க கமெண்டைப் படித்தால் )
      நன்றி

      Delete
  10. நல்ல கொள்கைப் பிடிப்பு தான்

    வேற எதுல அப் டு டேட்டோ இல்லையோ சினிமாவுல அப் டு டேட்டா இருக்காங்க..

    சுய சார்பு எப்போ வரும்..? 2020 வாவது வருமா..? பார்க்கலாம்.

    தம 7

    ReplyDelete
    Replies
    1. உதவின்னா இப்படி அல்லவோ செய்யணும் )

      பொழைக்க கற்றுக்கிட்டாங்க )

      2020 வருசம்தான் உறுதியா வரும் .....?)

      நன்றி

      Delete
  11. அன்புள்ள அய்யா திரு.பகவானஜீ அவர்க்ளே,

    வணக்கம். ''பிச்சைப் போடும் போது இடது கையை பின்னாலே வைச்சுக்கிறீங்களே ,ஏன்?''
    ''வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக் கூடாதுன்னு நினைக்கிறவன் நான் !''

    -உண்மையிலே சோக்கு...சோக்குதான்... வாய்விட்டு சிரித்தேன். மனித மனங்களுக்க இலவச மருத்துவம் செய்யும் தங்களுக்கு வாழ்த்துகள்.
    எனது ‘வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து எனது படைப்புகளைப் பார்துப் கருத்திட அன்புடன் வேண்டுகிறேன்.
    நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. இலவச சேவை தொடர ஊக்குவித்த உங்களுக்கு நன்றி !
      தங்களின் தளத்தின் தொடராளி ஆகிவிட்டான் இந்த ஜோக்காளி)
      நன்றி

      Delete
    2. அய்யா,
      எனது வலைப்பூ பாலோயராக தாங்கள் வருகை புரிந்தமைக்கு நெஞ்சார நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. நீங்களும் என்னைத் தொடரலாமே ...தினசரி அரட்டை அடிக்க வரலாமே ?

      Delete
  12. Replies
    1. தாமதம் என்றாலும் தவறாமல் வருகை தரும் கரந்தையாருக்கு நன்றி )

      Delete
  13. சமந்தா ரொட்டி! வித்தியாசமா ஜோக்கறீங்க! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்கும் பிடித்த ரொட்டியாச்சே இது )
      நன்றி

      Delete