25 October 2014

பொம்பள டாக்டரையும் நம்ப முடியலே!

---------------------------------------------------------------------------------
 வம்பு பிடிச்ச ஆட்டோ டிரைவர் !                 
              '' ஆஸ்பத்திரி  வாசலில் இறக்கி விட்டுட்டு காசு  கேட்கிறே,பிறகேன்  'பிரசவத்துக்கு இலவசம்'னு ஆட்டோவிலே எழுதிஇருக்கே?''
               ''ஆட்டோவில் பிரசவம் ஆனால்தான் இலவசம் !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்....

சமர்த்துப் பேச்சால் கணவனை ஜெயிக்கலாம்...ஆனால் ?

             ''இந்த ஒரு கீரைக்கட்டை ஐந்து ரூபாய்னு சொல்றீயே ,நேற்றுக்கூட இரண்டு ரூபாய்னு தானே சொன்னே ?''
              ''இப்பவும் ஒண்ணும் மோசம் போயிடலே.. .அந்த கீரைக்கட்டு இப்பவும் இருக்கு ,ஒரு ரூபாய்க்கே தர்றேன் ,வாங்கிகிறீங்களா ?''

பொம்பள டாக்டரையும் நம்ப முடியலே! 

கோவிலபாக்கம்  சகோதரிகள் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள் ...
சூலமங்கலம் சகோதரிகளைத் தெரியும் ...
யாரிந்த புது சகோதரிகள் ?
ஐந்து வருசமா நடிச்சுக்கிட்டு  இருந்திருக்காங்க ...
ஒரு படத்தில் கூடப் பார்த்ததில்லையேன்னு நீங்க கேட்கிறது எனக்கும் புரியுது !
அவங்க படத்தில் நடிக்கலே...
நிஜத்திலே 'வசூல் ராணி MBBS 'களாய் கிளினிக் வைத்து நடத்தி வந்திருக்கிறார்கள் ...
ஒரிஜினல் டாக்டர்களே செய்யத் தயங்கும்
கருக்கலைப்புக் கூட செய்து இருப்பதாக புகார் வந்து உள்ளதாம் ...
இந்த புண்ணிய காரியங்களை ஒரு வருஷம் ,இரண்டு வருசமல்ல ...
ஐந்து ஆண்டுகளாய் செய்துள்ளார்கள் ...
பத்தாவதுகூடப் படிக்காத சமீனா அன்ட் 'சபீனா' சகோதரிகள் சென்னை மாநகரத்திலேயே ...
போலி டாக்டர்களாய்  கொடிகட்டிப் பறக்க முடியும் என்றால் ...
கிராமங்களில் நிலை என்ன என்பதை யாராவது 'சபீனா'வாய்  விளக்கி சொன்னால் நல்லது !
தமிழகத்தில் இன்னும் ஐந்தாயிரம் போலி டாக்டர்கள் இருப்பதாக அபாயச் 'சங்கு ' ஊதுகிறார் ஒரிஜினல்  டாக்டர்கள் சங்கத் தலைவர் !

சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்..

வரக்கூடாத அந்நியன்!

"புருஷனோட சொற்ப  வருமானத்திலே இவ்வளவு ஆடம்பரமா அவ இருக்க காரணம் அன்னிய முதலீடா ?''

" ஆமா ,ஒரு அந்நியன் நடமாட்டம் அந்த வீட்டிலே அடிக்கடிதெரியுதே ! "

24 comments:

  1. சமூக அவலங்களை
    அள்ளிக்கொட்டிய
    சிறந்த பதிவு
    எப்போது
    சமூகம் விழித்துக் கொள்ளும்!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நம் வாழ்நாளில் சமூகம் விழித்துக் கொள்ளும்போல் தெரியவில்லை )
      நன்றி

      Delete
    3. உங்கள் சிறப்பு பதிவை படித்தேன் ,ரசித்தேன் !
      நன்றி

      Delete
  2. ஆட்டோவில் பிரசவம் ஆனால் மட்டுமே இலவசம்! - அடக் கொடுமையே!

    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை,கிளீனிங் சார்ஜ் கேட்காமல் விட்டாரே )
      நன்றி

      Delete
  3. இது நல்ல மோசடிதான்..பிரசவத்துக்கு இலவசமுன்னு சொல்லி...ஆட்டோவில் பிரசவம் ஆகலைன்னு காசு கேட்பது.....அட.கொங்கா..மங்கா....

    ReplyDelete
    Replies
    1. இப்படி கேட்கவில்லை எந்த ஆட்டோ டிரைவரும் ! just funதான் !
      நல்லமனம் கொண்ட அவர்கள் வாழ்க !
      நன்றி

      Delete
  4. வசூல் ராஜாக்களுக்கு வருமானம் குறைந்துவிட்டதால் போலி டாக்டர் அஸ்திவாரத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள்...சபாஷ் சரியான பொட்டி

    ReplyDelete
    Replies
    1. இந்த போலி மருத்துவர்களைத்தான் மக்களும் கைராசி டாக்டர் கொண்டாய் இருப்பார்கள் :)
      நன்றி

      Delete
  5. அடேடே.. இப்படி ஒன்னு இருக்கா..

    ஆட்டோ வாசகத்தப் பாத்து ஏமாறக்கூடாதோ...

    ReplyDelete
    Replies
    1. எப்படிப்பட்ட விழிப்புணர்ச்சி பதிவு இது :)
      நன்றி

      Delete
  6. அடப்பாவி!

    கோவிலம்பக்கம் சகோதரிகள் தகவல் தெரிந்தது...போலிகளின் அட்டகாசம் தாங்க முடியல....

    ReplyDelete
    Replies
    1. விடுங்கள் ஜி ,கற்பனயில் வந்த ஆட்டோ டிரைவர்கள் தானே ;)
      நன்றி

      Delete
  7. Replies
    1. இதற்காகவே அபுதாபியில் இருந்து வந்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துகள்!
      நன்றி

      Delete
  8. Replies
    1. நேரில் சிறிது நேரத்திற்கு முன்னால் உங்களை சந்திக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி ,கில்லர் ஜி !
      நன்றி

      Delete
  9. ஆட்டோ ஜோக்.... பிரமாதம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மேடம் !

      Delete
  10. முதல் இரண்டும் வித்தியாசமான சிந்தனை. அருமை.
    நீங்களும் அந்த மருத்துவமணிக்கு சென்று வந்தீர்களாமே!!!

    ReplyDelete
    Replies
    1. நான் போயிட்டு வந்தது யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சுகிட்டிருக்கேன் ,உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா :)
      நன்றி

      Delete