13 October 2014

எலைட் பார் விளம்பரத்திலே பஞ்ச் டயலாக்கா ?

----------------------------------------------------------------------
நெருப்பென்றால் சுடும் ,ஆனால் ..?

''நெருப்புன்னா  வாய் வெந்துடாது என்பதை உங்க வாத்தியார் பொருத்தமாச் சொன்னாரா,எப்படி  ?''
''பட்டாசுக் கடையிலே நெருப்புக் கோழி புகுந்தாலும் ஒண்ணும் ஆகாதுன்னுதான் !''
 சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்.....

எலைட் பார் விளம்பரத்திலே பஞ்ச் டயலாக்கா ?

              ''பேப்பரில் வந்த ,ஏசி  வசதியுடன் கூடிய   டாஸ்மாக் எலைட்  பார் விளம்பரத்திலே பஞ்ச் டயலாக்கா ,எப்படி ?''
             ''போருக்கு போகாதவன் அரசனும் இல்லை .பாருக்கு வராதவன் குடிமகனும் இல்லைன்னுதான் !''

ஜெயிக்கப் போறது கொள்கையா ?காசு பணமா ?

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இருந்து வாக்காளர்களுக்கு ...
ஓட்டு போட்டதற்கான ஒப்புகைச் சீட்டை தேர்தல் கமிஷன் தரவிருக்கிறதாம்!
அதிலே எந்த கட்சிக்கு ஓட்டுபோட்டுள்ளார்கள் என்ற விபரமும் இருந்தால் பேமென்ட்டுக்கு வசதியாய் இருக்கும் என ஓட்டை விற்கும் இந்நாட்டு மன்னர்களும் ,கட்சிகளும் எதிர்ப்பார்க்கிறார்கள் !
இதுவரை குதிரை பேரம் MLA,MPகளுடன் தான் நடந்து கொண்டுள்ளது ...
இனிமேல்  வாக்காளர்களுடணும் நடக்கும் !வாழ்க 'பண'நாயகம் !



24 comments:

  1. வணக்கம்
    தலைவா.

    ஆகாஆகா. இரசிக்கவைக்கும் நகைச்சுவை காளைப் பொழுதில் மனதுக்கு இதமாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஜோக்காளியின் முகத்தில் காலையிலேயே விழித்ததற்கு நன்றி !

      Delete
  2. நல்ல வாத்தியார் தான்:)

    ReplyDelete
    Replies
    1. இதைவிட பொருத்தமாய் எப்படி சொல்றது )
      நன்றி

      Delete
  3. Replies
    1. வாத்தியார் நகைச்சுவையைத்தானே )
      நன்றி

      Delete
  4. மூன்றையுமே ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஜெயிக்கப்போறது யார் என்று ரசித்த உங்களுக்கு புரிந்ததா )
      நன்றி

      Delete
  5. நெருப்பென்றால் சுடும்மா.....அதைத்தான் தொட்டு கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. கன்னத்தில் போட்டுக் கொண்டாலும் பரவாயில்லை ,ஒருசிலர் எரியும் கற்பூரத்தை வாயில் போட்டு விழுங்கும் மேஜிக்கை செய்து காட்டி ,தங்களுக்கு தெய்வாம்சம் உள்ளதென்று ஏமாற்றவும் செய்கிறார்களே )
      நன்றி

      Delete
  6. சூப்பர் நகைச்சுவைகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி !

      Delete
  7. சார், அதிலேயும் பேமெண்ட் வித் ஒப்புகைச்சீட்டு, பேமெண்ட் வித்அவுட் ஒப்புகைச்சீட்டு என இரு வகையறா வந்து விடும். முதல் கேட்டகிரிக்கு பேமெண்ட் குறைவாகவும், இரண்டாம் கேட்டகிரிக்கு பேமெண்ட் அதிகமாகவும் கிடைக்க வாய்ப்புள்ளது. எதுக்கும், உங்க சிந்தனையை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வெச்சா, பயனுள்ளதா இருக்கும் சார்.

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு சிக்கல் இருக்குதா ? இதைப் பற்றி தேர்தல் 'கமிஷனே'யோசிச்சு முடிவெடுக்கட்டும் )
      நன்றி

      Delete
  8. சார், நான் ஏதோ தப்பா சொல்லிட்ட மாதிரி தெரியுதே. அரசியல்ல இதெல்லாம் சகஜப்பான்னு எடுத்துக்குங்க சார்!

    ReplyDelete
    Replies
    1. இதிலென்ன தப்பு ?கடந்த தேர்தலில் 144 தடை உத்தரவு போட்டு தேர்தல் கமிஷன் ஆளும் கட்சிக்கு சாதகமாய் நடந்து கொண்டதாய் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினவே !
      நன்றி

      Delete
  9. சூப்பர் பன்ச் ஜீ

    ReplyDelete
    Replies
    1. இதை ஒரு blackhumour என்று கூட சொல்லலாம் )
      நன்றி

      Delete
  10. ஹாஹாஹாஹா எல்லமே அதுவும் அந்த பண நாயகம்.....ம்ம்ம்ம் என்னத்த சொல்ல!!

    ReplyDelete
    Replies
    1. வாழ்க ஜனநாயகம் ,வளர்க பணநாயகம் )
      நன்றி

      Delete
  11. பார், போர் ! வெகு ஜோர்!

    ReplyDelete
    Replies
    1. கருத்துரையிலும் எதுகை மோனை ,இதுவும் ஜோர் தான் அய்யா )
      நன்றி

      Delete

  12. அழகான பொன்மொழி ஒன்று சொல்லி இருக்கிறியளே!

    ReplyDelete
    Replies
    1. குடிகாரர்களிடம் இந்த பழமொழியை கண்ணாடியில் சட்டம் போட்டு வைச்சுக்கச் சொல்லுவோமா )
      நன்றி

      Delete