14 October 2014

மனைவியின் சக்தி வாய்ந்த ஆயுதம் ?

------------------------------------------------
இப்படியும் அலர்ஜி ஆகுமா ?

               ''அலர்ஜி என்கிற வார்த்தையைக் கேட்டாலே பத்திக்கிட்டு வர்றமாதிரி இருக்கா ,ஏன் ?''
            ''அலர் 'ஜி'க்கு என்ன மரியாதை வேண்டிக்கிடக்கு ?''
 சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்.....

மனைவியின் சக்தி வாய்ந்த ஆயுதம் ?

            ''என்னங்க ,ஆயுத பூஜையில் வைக்க ஆயுதம் கொண்டு வரச் சொல்லிட்டு ,கையிலே சின்ன பாட்டிலை எதுக்கு கொடுக்கிறீங்க ?''
                   ''கண்ணீரைப் பிடிக்கத்தான் ...அதைதானே நீ 
ஆயுதமா பயன்படுத்தி காரியம் சாதிச்சுக்கிறே!''

இந்திய பல்கலைகழகங்கள் TOP10ல் வரும் ,எதில் ?

உலகத்திலே  தலைசிறந்த நூறு பல்கலைகழகங்களில்  ஒன்றுகூட இந்தியாவில் இல்லையாம் ...
இந்த ஆராய்ச்சி முடிவை அறிவித்தவர்கள் ...
நன்கொடை எனும் முக்கிய காரணியை முக்கிய விசயமாய் எடுத்துக் கொண்டு புள்ளி விவரத்தை திரட்டவில்லை போலிருக்கிறது !
சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

நோகடிக்கும் இரண்டு!

''வர வேண்டியது வர மாட்டேங்குது ,வரக் கூடாதது  வருது!''

''என்ன  சொல்றிங்க?''

  ''கரண்ட் வர மாட்டேங்குது ,டெங்கு  காய்ச்ச்சல் பரவிட்டு வருதே!''



24 comments:

  1. அலர்ஜி:))))))))))))))))))
    மதுரை தமிழன் ஆயுத பூஜை பூரிக்கட்டை பதிவை பார்த்தீர்களா பாஸ்:))

    ReplyDelete
    Replies
    1. பகவான்ஜிக்கும் .அலர்ஜிக்கும் சம்பந்தமில்லை )
      அது இந்த வருடம் ,என் கண்ணீர் பூஜை போன வருசமாச்சே )
      நன்றி

      Delete
  2. ஆஹா, சொந்த அனுபவம் எப்படியெல்லாம் எழுத கை குடுக்கிறது...

    நீங்கள் சொல்கிற மாதிரி ஆராய்ச்சி செய்திருந்தால் முதல் 100 இடங்களிலும் நம் இந்தியப் பல்கலைக்கழங்கள் தான் இடம்பெற்றிருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. எழுதுவது என்பது சொந்த அனுபவம் என்பதை ஒத்துக் கொள்கிறேன் )

      எல்லா நாடும் பின்னுக்கு தள்ளப் பட்டிருக்கும் ,நினைத்தாலே புல்லரிக்குதே)
      நன்றி

      Delete
  3. Replies
    1. சூப்பர்எது , மனைவியின் ஆயுதம் தானே )
      நன்றி

      Delete
  4. பல்கலைக் கழகம் நீங்கள் குறிப்பிட்ட அளவுகோல் உண்மைதான்...

    ReplyDelete
    Replies
    1. அதனால்தான் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்என்று தங்களை சொல்லிக் கொள்கிறார்களோ )
      நன்றி

      Delete
  5. அதானே... என்ன மரியாதை?

    கண்ணீர் குண்டு! ஹா...ஹா..

    வருத்தத்துக்குரிய விஷயம்.

    ஹா...ஹா...

    ReplyDelete
    Replies
    1. பிடிச்சதுக்கு மரியாதை தரலாம் ,பிடிக்காத ஒண்ணுக்குஎப்படி தரமுடியும் )

      உண்மைதான் ,கணவனின் கண்ணில் கண்ணீரை வரவழைப்பது )

      ஆனால் வருந்துற மாதிரி தெரியலே ,சம்பாதிக்கிறவங்க)
      நன்றி

      Delete
  6. ரசித்தேன்
    சிரித்தேன்
    தம 5

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ரசனைக்கண்டு மகிழ்ந்தேன் )
      நன்றி

      Delete
  7. அலர் "ஜி" ஹ்ஹாஹஹ் அருமை!!!!

    கண்ணீர்! ஆம் ஜி! அது செய்யும் மாயங்கள்!!ஹஹ்ஹ்ஹ

    நன்கொடை எடுத்துக் கொண்டால் இந்தியாதான் டாப் வந்துருக்கும் ஜி! இல்லையோ?!!!

    டெங்கு ...ம்ம்ம் மிகவும் வருத்ததிற்குரிய விஷய்ம்தான் ஜி!

    ReplyDelete
    Replies
    1. அலர்ஜியும் எல்லோருக்கும் பிடிக்கும் போலிருக்கே )

      கரையாத எதையும் கரைக்கும் பொன்திரவம் அது )

      இதைக் கணக்கில் எடுத்து கொள்ளவில்லையே எனக்கும் வருத்தம்தான் )

      இது கண்ட கண்ட நோய்கள் வரும் சீசன் ஆச்சே )

      நன்றி

      Delete
  8. கண்ணீர் பாட்டில் போல மதுரைத் தமிழன் பூரிக்கட்டையை வைத்தார் தெரியுமோ?!!!

    ReplyDelete
    Replies
    1. பூரிக்கட்டையை வைத்துவிட்டு அவர் பட்ட பாடு உங்களுக்குத் தெரியுமா )
      நன்றி

      Delete
  9. பல்கலை வரிசை பட்டியல்ல தலைகீழா படிச்சுப்பார்த்தா கடைசியில இருந்து பத்துக்குள்ள இருக்குமோ/ எல்லாமே அருமை.

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் வர வாய்ப்பில்லை ,பட்டியலிலேயே வர வில்லையே )
      நன்றி

      Delete
  10. உலக மனைவி மார்களின் பயங்கரமான் ஆயுதம் இதுதானா......!!!

    ReplyDelete
    Replies
    1. multinational brand weapon என்றே சொல்லலாமோ )
      நன்றி

      Delete
  11. Replies
    1. அதென்ன 123,டெம்பிளேட்டா)
      நன்றி

      Delete
  12. மனைவியின் ஆயுதம் பலமானது தான்...

    ReplyDelete
    Replies
    1. கடையில் எங்கேயுமே கிடைக்காத ஆயுதம் )
      நன்றி

      Delete