6 October 2014

மனைவியால் குட்டுபடவுமா கொடுத்து வைச்சிருக்கணும்?

            ''என்னது ,என் நல்லதுக்குதான்   வைர மோதிரம் கேட்கிறீயா?''
             ''ஆமாங்க ,குட்டு பட்டாலும் மோதிரக் கையால் குட்டு பட்டேன்னு சொல்லிக்கலாம் இல்லையா ?''
           
சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

 

தினசிரி ஜோக் !

நாணயம்னா இதுதானா?


               ''அவர்  சொன்ன  வார்த்தையை   காப்பாத்துறதிலே  நாணயமானவரு ''|

             ''எப்படி?''


     ''ரெண்டே நாள்லே  திருப்பி தர்றேன் ...இல்லைன்னா  பேரை  மாத்திகிறேன்னு கடன்  கேட்டார் ..சொன்ன மாதிரி  நாணயமா பெயரை  மாத்திக்கிட்டாரே !''
--------------------------------------------------------------------------------------------------------
                                                                                           `                              
பிரசுரம்  செய்த தினமலர் வாரமலருக்கு நன்றி !



சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

இவர்கள் லஞ்சம் வாங்குவதும் 'நாட்டு நலன் 'கருதித்தான்!

                    ''நாட்டு நலன் கருதி பல கோடி செலவில் வாங்கிய நீர் மூழ்கி கப்பல்களை ராணுவத்தில் ஒப்படைக்கும் விழா நடந்ததே ...மந்திரி ,எம்பிக்கள் நீர்மூழ்கி கப்பலில் இறங்கிப் பார்த்தார்களா ?''
                 ''கடுமையான நிதி நெருக்கடி நேரத்தில் இடைத்தேர்தல் நடத்த முடியாதுங்கிற 'நாட்டு நலன் 'கருதி அந்த ரிஸ்க்கை  எடுக்கலே !'' 


பயணிகள் மட்டுமல்ல ,பதிவர்களும் தெரிஞ்சுக்க வேண்டியது !


வெளிநாட்டிற்கு செல்லும் சீனர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது சீன அரசு ...
அது அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல ...
எல்லா  நாட்டு மக்களுக்கும்  பொருந்தும் !
நம் பதிவர்களுக்கு எப்படி பொருந்தும் என்றால் ...
      பொது கழிப்பிடங்களில் நீண்டநேரம் இருக்க வேண்டாம் !
[பதிவைப் பற்றி வெளியே வந்து யோசிங்க ]
      கழிப்பிடங்களை அசுத்தம் செய்யாதீர்கள் !
[உங்களின் பதிவு படிப்பவர் மனதில் வக்கிர எண்ணங்களை உருவாக்கக் கூடாது ]
      பொது இடங்களில் மூக்கை நோண்டக்கூடாது !
[பதிவுக்கு மண்டையை குடைந்துக்கலாம் ,மூக்கை நோண்டிக்கக்கூடாது ]
      நூடுல்சோ ,சூப்போ உண்கையில் சத்தம் வரக்கூடாது !
[நம் பதிவு  படிப்பவரின் பொறுமையை 'உறிஞ்சி'டக் கூடாது ]
     விமானங்களில் தரப்படும் உயிர் காப்பு உடைகளை திருடாதீர்கள் !
[சிந்தித்து எழுதுபவன் பதிவர் ,காப்பிபேஸ்ட் செய்வதும் திருட்டுதான் ]
மிக மிக முக்கியம் ...
     நீச்சல் குளத்தில் சிறுநீர் கழிக்காதீர்கள் !
[பதிவைப்போட முடியவில்லையென  பதட்டமோ ,பயமோ இருந்தால் மேற்கண்ட காரியம் தானாகவே நடந்து விடும் !] 

22 comments:

  1. குட்டுவதற்கு வைர மோதிரமாக்கும்?!! ஹாஹஹ்ஹ

    நாணயமானவர்..... அவர் தலை நாணயத்தில் இல்லையோ!?

    வாழ்த்துக்கள் ஜி வாரமாலரில் பிரசுரமானதற்கு!

    ஹாஹ்ஹஹஹ் பதிவர்களுக்கும் சைக்கிள் காப்ல சாரி....வரிகளுக்கிடையில் காப்ல அட்வைஸ்.....ரசித்தோம்

    ReplyDelete
    Replies
    1. குட்டுவதும் இல்லாமல் அதற்கு உரிமையாய் வைர மோதிரம் வேறா )

      பெருந்தலைவர் ஆனால் வேண்டுமானால் நாணயத்தில் அவர் தலை வரலாம் )

      அட்வைஸ் இல்லை இது ,ஒன்லி fun)

      நன்றி

      Delete
  2. வைர மோதிரம் வாங்கும் வரை தப்பிக்கலாம் இல்லையா..?

    நாணயம்..அட்லிஸ்ட் இதுலயாவது இருக்கே...

    சொல்லுகிறார் போல சொல்லிட்டீங்க பாஸ்....தெரிந்துக்க வேண்டியதை...

    தம.3

    ReplyDelete
    Replies
    1. தப்பிக்கலாம்தான் நானல்ல ,அவர் )

      இப்படி சந்தோசப் பட்டுக்கணுமாக்கும்)

      புரிஞ்சிகிட்டா சரிதான் )

      நன்றி

      Delete
  3. பின்னே...மோதிரக் கையால் குட்டுபட கொடுத்து வைத்திருக்கனும்ல..........

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா அவங்க கேட்கிறதிலே தப்பேயில்லே,அப்படித்தானே )
      நன்றி

      Delete
  4. மோதிரகையால் குட்டு வாங்க நல்ல ஐடியாதான்! தினசிரி ஜோக் எங்கோ படிச்ச மாதிரி இருக்கேன்னு பார்த்தேன்! வாரமலரில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்! பதிவருக்கு சொன்ன அறிவுரைகள் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பதிவர்களுக்கு அறிவுரையா ,சும்மா கலாச்சிங்,கலாச்சிங் தான் )
      நன்றி

      Delete
  5. 1. ஹா...ஹா...ஹா.... இது எப்படி இருக்கு?

    2. ஹா...ஹா....ஹா.... இது சுலபமா இருக்கே....

    3. சரிதான்.

    4. ஹா....ஹா....

    ReplyDelete
    Replies
    1. 1.வலிக்கும்படியா இருக்கே )

      2 இப்படிப்பட்ட ஆளுகளுக்கு வேண்டுமானால் சுலபமாய் இருக்கலாம் )

      3.கையூட்டு வாங்கிய மந்திரிக்கு நீர்மூழ்கியின் லட்சணம் )

      4 .பதிவர்ன்னா படிச்சிட்டு இப்படித்தான் சிரிக்கணும் )

      நன்றி

      Delete
  6. வணக்கம்
    இரசிக்கவைக்கும் நகைச்சுவை..வாரமலர் இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு நன்றி !

      Delete
  7. அப்போ அண்ணி வைரமோதிரம் போட்டிருகாங்கன்னு சொல்லுங்க:)
    வாரமலருக்கு வாழ்த்துகள்!
    தம 6

    ReplyDelete
    Replies
    1. அதெப்படி என் அண்ணி வைர மோதிரம் போட்டுக்கிட்டு இருக்கிறதை சரியாய் சொன்னீங்க )
      நன்றி

      Delete
  8. வைர மோதிரத்தால கோட்டு வாங்கினா, உங்க தலை ஆயிடுமா என்ன?

    நானும் நாணயமானவன் தான். சந்தேகம் இருந்தா, செக் பண்ணி பாருங்க.

    அட சீன மொழிக்கு இப்படி ஒரு மொழிபெயர்ப்பா. நல்லா தான் கீதுபா.

    ReplyDelete
    Replies
    1. என் தலை அளவுக்கு வீங்காதுதான் )

      நானும் மறந்து விட்டேனே ,நீங்கள் பெயர் மாற்றிக் கொண்டதை )

      பதிவர்களுக்காக சிறப்பு மொழிபெயர்ப்பு என்றே சொல்லலாம் )

      நன்றி

      Delete
  9. பதிவர்கள் தெரிஞ்சுக்க வேண்டியதில்...உள் குத்து எதுவும் இருக்குமோ......??? ஒரு சந்தேகம்தான்........ஜீ

    ReplyDelete
    Replies
    1. இதிலே என்ன சந்தேகம் ,உள்குத்து இல்லாமல் போகுமா )

      நன்றி

      Delete
  10. மோதிரம் போட்டுவிடுவது உத்தமம். மறுத்தால்,வட்டு எறிதல்தான்.

    வாரமலரில் ஜோக் வெளியானதற்கு மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. எந்த வட்டு எறிதலைச் சொல்றீங்க ,' வட்டு'டை என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை அகராதியில் பார்த்து தெரிஞ்சுக்குங்க )

      வாழ்த்துக்கும் நன்றி !

      Delete
  11. இப்படிப் பட்ட மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

    ReplyDelete
    Replies
    1. மனைவி கையால் குட்டு வாங்குவது மட்டும் சாத்தான் கொடுத்த வரமா )
      நன்றி

      Delete