11 October 2014

தொடையில் மச்சம் ...ராசி இல்லையோ?

---------------------------------------------------------------------------
 கொடுமையிலும் கொடுமை , அதை விட இது அதிகம் !                   
            ''என்னடா சொல்றே ,நூலகம் பக்கத்திலே  மட்டும்தான் டாஸ்மாக் கடைகள்  திறக்கப் படணுமா ?''
                  ''அப்படியாவது நூலகங்கள் எண்ணிக்கை பெருகுமே !''
Photo: ஒரே குழப்பமா இருக்கு......


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்.....

நையாண்டி படத்து பேர் மட்டுமில்லே !

             ''இன்னைக்கு ரீலிசான படத்தைப் பார்த்தியே ,உனக்கென்ன தோணுது ?''
            ''அந்த நடிகையும் ,டைரக்டரும் சண்டை போடுற மாதிரி ,நம்மளை எல்லாம் நையாண்டி பண்ணிக்கிட்டு இருந்திருக்காங்கன்னு தோணுது !''
               (புரியலையா ,சென்ற ஆண்டு நையாண்டி பட நாயகி ,தான் காட்டியது போல்  ,வேறொருவரின் தொப்புளை  படத்தில் காட்டி இருப்பதால் படத்தை தடை செய்ய வேண்டுமென்று 'போராடியது 'நினைவுக்கு வருதா ?) 

திருமணமாகாத பெண்களுக்கு ஆயுள் குறைவு !

அமெரிக்க கலிபோர்னியா பல்கலைகழகம் ஆய்வு அறிக்கையொன்றை வெளியிட்டு உள்ளது ...
திருமணம் செய்து கொள்ளாத பெண்கள் ...
திருமணம் முடித்த பெண்கள் ...
இருவரில் அதிக நாள் உயிரோடு இருப்பது திருமணமான பெண்கள்தானாம் !
காரணம் ,அவர்களின் கையில் பணப் புழக்கம்  கூடுவதால் ஏற்படும் மகிழ்ச்சிதானாம்  !
நம் ஊரிலும் பல்கலை கழகங்கள்இருக்கின்றன ...
இதுபோல் ஆண்களை ஆய்வு செய்து முடிவை வெளியிட்டால் ...
ஆண்கள் தங்கள் ஆயுளை கூட்டிக்கொள்வதா...
குறைத்துக் கொள்வதாவென்று ....
திருமணம் சம்பந்தமாய் ஒரு முடிவுக்கு வர வசதியாய் இருக்கும் !



சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக் !

கொசு ஒழிக்க திட்டம் ..ஆனா மக்கள் ஒத்துழைப்பு ???

            ''தண்ணி தேங்கிற இடத்தில் ,கொசு முட்டையை  சாப்பிடுற மீன்களை விட்டும் கொசு குறையலையே ,ஏன்?''
              ''அந்த மீன்களை எல்லாம் பிடித்து மக்கள் தின்னுட்டாங்களே !  

தொடையில் மச்சம் ...ராசி இல்லையோ?

வளர்ந்த பிறகு 
அங்க அடையாளத்தை காட்டு என்று 
யாராவது கேட்கும் போதுதான் ....
சிறிய வயதில்  பள்ளி சேர்க்கையில் ...
தொடையில் மச்சமென்று  பதிந்த  அப்பாவையும்  ... 
மச்சத்துடன் கிள்ளி எறிய வேண்டும் போல் இருக்கிறது !







10 comments:

  1. நையாண்டி பற்றித் தெரியாததால் புரியவில்லை. இருந்தாலும் ஒரு ஹா ஹா சொல்லிக்கறேன்!

    ஹா...ஹா...ஹா..

    அய்யே... அந்த மீன்களையும் சாப்பிடுவாங்களா...

    ஹா...ஹா...

    ReplyDelete
    Replies
    1. நையாண்டி ஜோக் கடந்தாண்டின் டைம்லி ஜோக் ,அதற்கான விளக்கத்தை தந்து இருக்கிறேன் .இப்போது புரியும் என நினைக்கிறேன் )

      மீனை சாப்பிடும் போது அது என்ன சாப்பிடும் என்று யோசித்தால் சாப்பிட எப்படி மனசு வரும் )

      நன்றி

      Delete
  2. Replies
    1. மச்சம் இங்கே இருக்கிறதென்று பதிந்த அப்பா மீது கோபம் வரத்தானே செய்யும் )
      நன்றி

      Delete
  3. வணக்கம்
    முதலாவதில் நல்ல கருத்தை சொல்லிஉள்ளீர்கள்... ஏனையவையும் நன்றாக உள்ளதுபகிர்வுக்கு நன்றி. த.ம2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஆரம்ப பள்ளிக்கூடங்கள் எண்ணிக்கை இதைவிடக் குறைவாய் இருக்குமோவென்று பயமாய் இருக்கிறது )
      நன்றி

      Delete
  4. Replies
    1. திருமணம் சம்பந்தமாய் ஒரு முடிவுக்கு வர வசதியாய் இருக்கும் என்பதைதானே ரசித்தீர்கள்? )
      நன்றி

      Delete
  5. ஹாஹாஹாஅ...

    .குடி பெருகிவிட்டது!!! ம்ம்ம் என்னத்த சொல்ல.....

    ReplyDelete
    Replies
    1. நீங்க இருக்கிற கேரளாவில் கூட மதுக்கடைகளை ஒழிக்க ,கடைகளின் எண்ணிக்கை வருடா வருடம் படிப்படியாய் குறைக்கப் பட்டு வருகிறது .ஆனால் இங்கே ?)
      நன்றி

      Delete