17 October 2014

இருக்கிற பெண்டாட்டியை காப்பாத்திக்க ....!

  -------------------------------------------------------------------------------
அரசின் கொள்கையை இப்படியா நிறைவேற்றுவது ?           
                ''அரசு தானே சொல்லுது ?குழந்தை தொழிலாளர்களை ஒழிக்கணும்னு ...அதை செய்ஞ்சதுக்கா அவரை கைது பண்ணிட்டாங்க ?''
              ''அட நீங்க ஒண்ணு ,பட்டாசு தொழிலில் ஈடுபடுத்தி குழந்தைகளைக் கொன்றவரை பாராட்டவா செய்வாங்க ?''
 சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

 இருக்கிற பெண்டாட்டியை காப்பாத்திக்க ....!

               ''என்னங்க ,சிறந்த மேக்கப்மேனுக்கான  பரிசு வாங்கி இருக்கீங்க ,உங்க  பெண்டாட்டி நான் ....எனக்கு மேக்கப் போட்டால் என்னவாம்  ?''
            '' சுமாரா இருந்த முதல் பெண்டாட்டிக்கு மேக்கப் போட்டேன் ...அவளையும் ஒருத்தன் தள்ளிக்கிட்டு போய்விட்டானே !''
சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...
ஆடம்பர உலகம் இது !
ஆழ்கடலின் அமைதியை ...
அலைகளின் ஆர்ப்பாட்டத்தால் யாராலும் உணர முடிவதில்லை !


எறும்புக்கு வருமோ மலைப்பு!
"வீட்டுல லேசா சீனி சிந்தினாலே எறும்பு கூட்டம் வநதிருது ! ஸ்வீட் கடையிலே எறும்பு வர்றதே இல்லை ,ஏன் ?"

"இவ்வளவு ஸ்வீட்டையும் எப்படி சாப்பிடறதுன்னு மலைச்சு நின்னுடுதோ ,என்னவோ !"

23 comments:

  1. த ம ஒன்று ..
    சிரித்தோம் ...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சிரித்தோம் என்பதில் துணைவியாரும் அடக்கமா .மது ஜி )
      நன்றி

      Delete
  2. தம 2 . அனைத்தும் மிக்க நன்று.

    ReplyDelete
    Replies
    1. எறும்பின் வியப்பு சரிதானே )
      நன்றி

      Delete
  3. ஹஹ்ஹாஹஹ்.....ரசித்தோம்! ஜி!

    ReplyDelete
    Replies
    1. ஆடம்பர உலகின் ஆர்ப்பரிப்பை ரசித்தீர்களா ,ஜி )
      நன்றி

      Delete
  4. //அவளையும் ஒருத்தன் தள்ளிக்கிட்டு போய்விட்டானே !''//

    ஒரு நல்ல மேக்கப்மேனுக்கு இந்தக் கதியா?!

    ReplyDelete
    Replies
    1. அட்ட பிகரையும் லட்டு பிகர் ஆக்கினா இப்படித்தானே நடக்கும் )
      நன்றி

      Delete
  5. //"இவ்வளவு ஸ்வீட்டையும் எப்படி சாப்பிடறதுன்னு மலைச்சு நின்னுடுதோ ,என்னவோ !"//

    எல்லாம் கலப்படச் சரக்குன்னு அதுகளுக்குத் தெரிஞ்சிருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. எறும்பு, உங்க கோணத்தில் இப்படியும் யோசித்து இருக்குமா ,சபாஷ்)
      நன்றி

      Delete
  6. கலக்கல் ஜோக்ஸ்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. கலக்கலை ரசித்ததற்கு நன்றி )

      Delete
  7. தத்துவம் அருமை, ஜோக்ஸ் கலகல்..

    ReplyDelete
    Replies
    1. எளிமையாய் புரியும் தத்துவம் ,அப்படித்தானே )
      நன்றி

      Delete
  8. Replies
    1. இந்தியாவில் இருந்து இதுதான் super postடா,இது கொஞ்சம் ஓவராயில்லே)
      நன்றி

      Delete
  9. மலைத்து நின்றதோ எறும்பு - ரசித்தேன்...

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. போயும் போயும் எறும்பையா ரசித்தீர்கள் )
      நன்றி

      Delete
  10. இலக்கியச் சுவை சொட்டும்
    இனிய பதிவு இது!
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் பெரிய வார்த்தை இல்லையா )
      நன்றி

      Delete
  11. அமைதியை அறிவது கடினம் தான்...
    எறும்பே மலைத்து நின்னதா..? ஆஹா... ரசனை..
    தம 6

    ReplyDelete
    Replies
    1. அடுத்தவர் அமைதி நமக்கென்ன செய்யும்னும்தெரியல ,நமக்கும் எப்படி அமைதியா இருக்கிறதென்றும் புரியலே )
      எறும்பின் பார்வையில் ஸ்வீட் கடை ,நம்ம டைரக்டர் சங்கர் படத்தைப் போல பிரமாண்டம்தானே )
      நன்றி

      Delete
  12. படித்தேன்! சிரித்தேன்!

    ReplyDelete