23 October 2014

சினிமா சீர்படுத்தலே ,சீரழிக்குது !

-----------------------------------------------------------------------
கொடுமை கொடுமைன்னு   கோவிலுக்குப் 
போனா ...!               

                     ''என் வீட்டிலே கொள்ளை போயிருக்கு ,FIR போட ஏன் சார்  தாமதம் பண்றீங்க ?''
                 ''ஸ்டேசன்லே நாலு துப்பாக்கி களவு போயிருக்கு ,அதை விசாரிச்சுகிட்டு இருக்கோம் !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்....

நல்லது மட்டுமே நினைக்கும் நண்பேண்டா?

'                'நம்ம ஆறுமுகம் ஆம்புலன்ஸ் சக்கரத்தில் விழுந்து செத்துட்டான்னு ,அதே வண்டியிலேயே பாடியை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துட்டாங்களாமே ?''
             ''அட பரவாயில்லையே ,கெட்டதிலேயும் நல்லது நடந்துருக்கே !''

சினிமா சீர்படுத்தலே ,சீரழிக்குது !

சென்ற வாரம் நடந்த கொடூரம் ...
வங்கி மேலாளரைக் கொன்ற ஆறுபசங்க...  
மோப்ப நாய்க்கு டிமிக்கி தர ...
அறையெங்கும் மிளகாய்ப் பொடியை தூவி சென்று இருக்கிறார்கள் ...
முதல் கொலைக்காரர்களுக்கே இந்த டெக்னிக்கை கற்று தந்தது 'கில்லி 'படம்தான் !
இந்த வாரம் நடந்த கொள்ளை ...
வங்கி அலுவல் முடியும் நேரம் ...
ஒரே ஒரு முகமூடிக் கொள்ளையன் ...
ஒரே ஒரு கத்தியை 'காசாளி 'பெண்மணியின் கழுத்தில் வைத்து ...
மற்றவர்களை மேலாளரின் அறையில் பூட்டி ...
எட்டே நிமிடத்தில் பத்தரை லட்சத்தை அள்ளி சென்று இருக்கிறான் ...
அந்த பத்தரை மாற்று தங்கத்திற்கு ஞானம் தந்தது ...
நிச்சயமாய் 'ருத்ரா 'என்னும் திரைக்காவியமாய்த்தான் இருக்கும் !
நல்ல படிப்பினைகளை கற்று தரும் நம்சினிமாவை 
நூறாண்டு வாழ்கவென கூத்திடமுடியவில்லை !
ஏற்கனவே நூறாண்டு நிறைவடைந்து விட்டதால் !

சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்..

வரக்கூடாத சந்தேகம்!

           " மனைவிக்கு எத்தனை சுழி'ன'  போடணும்னு அவர் கிட்டே  கேட்டது தப்பா போச்சு ! "
" ஏன் ? "
         " முதல் மனைவியா,  'இரண்டாவது மனைவியான்னு கேக்கிறார் !

14 comments:

  1. சூப்பர் போலீஸ்.

    உண்மை தான் சினிமா எத்தனை மோசமான விஷயங்களை சொல்லித்தருகிறது. பள்ளி மாணவன் திரைப்படத்தை பார்த்து ஆசிரியையை கத்தியால் கொலை செய்திருக்கிறானே!!!

    ReplyDelete
    Replies
    1. துப்பாக்கியை காப்பாற்ற முடியாதவர்கள் .......)

      அன்று கில்லி ,இன்று கத்தி ,ரீலிசான முதல் நாளிலேயே ரசிகர்கள் தாக்கியதில் தியேட்டர் உரிமையாளர் பலத்த காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதி ..ரசிகர்களும் அப்படித்தானோ ?
      நன்றி

      Delete
  2. ஐயங்களை அழகாக வெளிப்படுத்தும்
    சிறந்த நகைச்சுவைப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. ஐயங்கள் எப்படியோ தெளிந்தால் சரிதானே )
      நன்றி

      Delete
  3. சுழி ரொம்ப குசும்பு ...
    த ம இரண்டு

    முகநூல் அனுபவங்கள்

    ReplyDelete
    Replies
    1. அவர் தலையிலும் இரண்டு சுழி இருக்குமோ )
      நன்றி

      Delete
  4. கொடுமை..கொடுமையின்னு போலீஸ் ஸ்டேசனுக்கு போனா.....அங்கேயும் திருட்டு நடந்திருக்கு.......

    ReplyDelete
    Replies
    1. கில்லாடி திருடர்கள் )
      நன்றி

      Delete
  5. 1. துப்பாக்கிதானே களவு போச்சு? FIR புத்தகம் களவு போகவில்ல இல்லை? அப்புறம் என்ன எழுத வேண்டியதுதானே? :))))))

    2. ப்ளான் பண்ணியே விழுந்திருப்பானோ!

    3. சினிமாவில் சொல்லும் நல்ல இஷயங்களை எடுத்துக் கொள்ள பாருங்கள்! இதெல்லாம் மட்டும் சட்டென்று பிடித்துக் கொண்டு விடுகிறார்கள்!

    4. ஹா...ஹா...ஹா...

    ReplyDelete
    Replies
    1. 1.அதுகூட இருக்கான்னு பார்த்தால்தான் தெரியும்: )

      2.இப்படியுமா பிளான் பண்ணுவாங்க ?

      3.நல்லது எங்கே மண்டையில் ஏறுது?

      4.ஒரு சுழி ன போடணும்னு சொல்லி இருந்தா சிக்கலாப் போயிருக்கும் )
      நன்றி

      Delete
  6. நான் கூட பார்த்து இருக்கிறேன். ஒரு போலீஸ் ஸ்டேஷனில் பழைய வண்டிகளை எல்லாம் சேர்த்து சங்கிலியால் கட்டிவைத்து இருந்தார்கள்... பார்க்க சிரிப்பாய் தான் இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. அதுவும் கண்டம் பண்ற நிலையில் இருக்கும் )
      நன்றி

      Delete
  7. துப்பாக்கியை தூக்கிட்டு போயிட்டாங்களா! அது சரி! :))))

    ReplyDelete
    Replies
    1. து'ர்'ப்பாக்கிய நிலைமைதான் ,இல்லையா )
      நன்றி

      Delete