9 October 2014

அடுத்தவங்க டைரியைப் படிப்பதில் 'கிக் ' உண்டா ?

கடகம்னா நண்டுன்னு தெரிஞ்சிக்குங்க !
                  '' வாழ்க்கைக் 'கடலில் 'நீந்தி விளையாடுவீர்கள் என்று மணமக்களுக்கு ஜோதிடர் சொன்ன வாழ்த்து  பலிக்கும்னு எப்படி நம்புறே ?''
            ''பொண்ணு 'மீன'ராசி ,பையன் 'கடக'ராசியாச்சே !''
                                                   weds  Image result for கடக ராசி படம்

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்.....
இணையத்தில் பெண்கள் மேய்வதும் ,ஆண்கள் ....?இந்திய ஜனத் தொகையோ 120கோடி ,அதில்  இணையத்தை பயன்படுத்துவோர் 15கோடி ,அதில் ஆண்களின் எண்ணிக்கை 9கோடி ,
6கோடி பெண்களில் ...
பதினெட்டில் இருந்து முப்பத்தைந்து வயதுள்ள ஆயிரம் பெண்களை சர்வே செய்ததில் அவர்கள் இணையத்தில் பார்ப்பது ...
உடை ,உணவு ,நகைகள் சம்பந்தமாகத் தானாம் !இது கூகுள் சர்வே ... ஆண்கள் எதைப் பார்க்கிறார்கள் என்பதையும் சர்வே செய்தால் ......?அவ்வ்வ்வ் ...
கூகுள் ஆண்டவர் ஆண்களை காப்பாற்றி விட்டார் என்றே படுகிறது !

இந்த ஜோடி பெத்துகிட்டது ரெண்டுதான் !

                     ''வீட்டிலே அரை டஜன்பிள்ளைங்களை வச்சுகிட்டு, குடும்பக்கட்டுபாட்டை கடைப்பிடிக்கிறோம்னு  சொல்றது ,நியாயமா ?''
                   'நாங்க பெத்துகிட்டது ரெண்டுதாங்க ,கல்யாணத்திற்கு முன்னாலே அவளுக்கு ரெண்டு,எனக்கு ரெண்டு குழந்தைகளும் இருந்ததுங்க !''

சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

தினசிரி ஜோக் !!!

அடுத்தவங்க  டைரியைப் படிப்பதில்  'கிக் ' உண்டா ?

'அடுத்து நீங்க  எடுக்க  போற  படத்தின்  பெயர் ''ஒரு பைத்தியத்தின் டைரி ''யாமே ? '

'ஆமாம் ,அதுக்கு நீங்கதான் உங்க டைரியை கொடுத்து உதவணும் ,ப்ளீஸ்!'      

பிரசுரித்த ஜூனியர்விகடனுக்கு நன்றி !.        
                                                         



30 comments:

  1. நாங்க பெத்துக்கிட்டது ரெண்டு... அவளுக்கு 2 எனக்கு 2, நல்லாயிருக்குய்யா... நல்லாயிருக்கு...

    ஜூனியர் விகடனில் அடுத்தவர் டைரி - வாழ்த்துக்கள்...

    அனைத்தும் ரசித்தேன் ஜி

    ReplyDelete
    Replies
    1. சும்மாவா சொன்னாங்க ,நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகமென்று ?)

      வாழ்த்துக்கு நன்றி !

      Delete
  2. நீந்துதல் பொது அதை சொல்லிட்டான் ஜோதிடன்...சமயோசி

    ஆண்களை விட்டுட்டானே...இதிலும் ஆண் ஆதிக்கம் தானோ..?

    த.ம 1

    ReplyDelete
    Replies
    1. ஜோதிடர் ஒரு உண்மையை கூறிவிட்டார் போலிருக்கே )

      ஆண் ஆதிக்கமா ,இல்லையா ..அந்த கூகுள் ஆண்டவருக்கே வெளிச்சம் )

      நன்றி

      Delete
  3. நாலும் பார்த்து ...இல்ல வாசிசசு சிரிச்சுக்கிட்டே
    இருக்கிறேன்...திருப்பி அதை எழுதப் பஞ்சியாக இருக்கு
    (பஞ்சி என்றால் என்ன என்று தெரியுமா?
    சோம்பல்...அலுப்பு....)
    இனிய வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. எதை எழுத பஞ்சி .சோம்பல் .அலுப்பு ?)
      வாழ்த்துக்கு நன்றி !

      Delete
  4. ஜோசியத்தை இப்படி வேற பிரிக்சு பார்க்கணுமா!!!

    கூகிள் ஆண்டவர் பெரிய ஆள் தான், ஆண்களை காப்பாற்றி விட்டாரே!

    என்னுடைய குழந்தைகளும், உன்னுடைய குழந்தைகளும், நம்முடைய குழந்தைகளோடு விளையாடுகின்றன - மேலை நாட்டில் தான் இப்படி விளையாடுவது சகஜம். நம் ஊரிலுமா?

    நீங்க உங்க டைரியை கொடுத்து தான் அந்த படத்தை எடுக்க உதவி பன்னீங்களாமே, அப்படியா!!!

    ReplyDelete
    Replies
    1. ஜோசியம் தானே ,நமக்கு சாதகமா பார்த்துக்க வேண்டியது தான் )

      கூகுள் ஆண்டவருக்கு முடி காணிக்கை கொடுத்திடலாமா )

      அந்த பழமொழியின் உல்டாதான் ,இது ...ஹிஹி )

      டைரியைக் கொடுக்கவில்லை ,ஜோக்காளி வலைப்பூவை அறிமுகப் படுத்தி உதவினேன் நன்றி

      Delete
  5. Replies
    1. ரசித்தமைக்கு மிக்க நன்றி !

      Delete
  6. ஜோசியர் களை ரசனை உள்ளவர் போல!!
    நெட் - இப்படியா உண்மையா விளம்புறது!!!
    டைரி -ஜூனியர் விகடன் ஜோக்கு சூப்பர்!!

    ReplyDelete
    Replies
    1. ஜோதிடக்கடலில் முத்து எடுத்து எடுப்பவர் போலிருக்கு )

      உண்மையை மறைக்க முடியாதே )

      நன்றி

      Delete
  7. தினசரி ஜோக் சூப்பர், தம இரண்டு..

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் என்று நீங்க போட்ட வோட்டுக்கு நன்றி !

      Delete
  8. Replies
    1. மதுரை பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள இப்பவே ஊருக்கு வந்து விட்டீர்கள் போலிருக்கே ,உங்களை சந்திக்க காத்திருக்கிறேன் !
      நன்றி

      Delete
  9. அடுத்தவர்கள் அந்தரங்கத்தை படிப்பதில் கிக் இருப்பதால்தானே...திரட்டுதனமாக படிக்கவோ, பார்க்கவோ துாண்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. இன்றைய பதிவு இரண்டும் கூட'நல்லதைப் ' படிப்பதைப் பற்றியும் ,பார்ப்பதைப் பற்றியும்தானே )
      நன்றி

      Delete
  10. சமயோசிதமான ஜோஸ்யன்! கூகுள் ஆராய்சி சூப்பர்! விகடனில் வந்த ஜோக்குக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. பிழைக்கத் தெரிந்த ஜோசியணும்கூட )
      வாழ்த்துக்கு நன்றி !

      Delete
  11. நானும் உங்க மாதிரி ஜோக் எழுத நினைத்து கடைசியில் என் டைரியும் பைத்தியத்தின் டைரி மாதிரிதான் ஆகிவிட்டது பகவான்ஜி!
    “சிரிச்சாப் போச்சு“ போட்டிக்காரர்களுக்கு எல்லாம் உங்கள் தளத்தைக் காட்டிப் படிக்கச்சொன்னாலே தோற்றுவிடுவார்களே...!!!
    அருமை!!!!

    ReplyDelete
    Replies
    1. நான் சிரிப்பு பைத்தியம் ,நீங்க (கோவிச்சாக்காதீங்க )கவிதைப் பைத்தியம் ,டைரிகளும் அப்படித்தானே இருக்கும் )
      நன்றி

      Delete

  12. //பிரசுரித்த ஜூனியர்விகடனுக்கு நன்றி !. //

    தொடர்ந்து பத்திரிகைகளில் பிரசுரம். வாழ்த்துகள்.

    வலைப்பதிவை மறந்துடாதீங்க.

    ReplyDelete
    Replies
    1. பயப்படவே வேணாம் ,இவையெல்லாம் கடந்த காலத்தில் பிரசுரமானவை )
      நன்றி

      Delete
  13. //' வாழ்க்கைக் 'கடலில் 'நீந்தி விளையாடுவீர்கள் //

    விளையாட்டில் நண்டை மீன் ஜெயிச்சுடுமே!?

    ReplyDelete
    Replies
    1. நண்டுப் பிடி போட்டு தப்பித்துக் கொள்வது அதோட வாழ்வாதாரப் பிரச்சினை ,அதுவே ,பார்த்துக்கும் )
      நன்றி

      Delete
  14. மீன ராசி கடக ராசியை விழுங்கிவிட்டால்?!!!?!?!?

    கூகுள் ஆண்டவர் இல்லையா அதான் உண்மை விளம்பி!

    மேலை நாட்டு வாழ்வியல் இங்கும் வந்துவிட்டதே!

    ஹ்ஹாஹஹஹ்.....

    ReplyDelete
    Replies
    1. மீன் கடகத்தை விழுங்குமா ,கடகம் மீனை விழுங்குமான்னு போகபோகத்தானே தெரியும் )

      பாதி உண்மையைத்தானே விளம்பியுள்ளார் )

      உலகம உருண்டைன்னு இப்பத்தான் நம்பத் தோணுது )

      உங்களின் பொன்னான நேரத்தை எனக்காக செலவு செய்து கருத்துரை தந்ததற்கு நன்றி ஜி !

      Delete

  15. கூகுளில்
    பெண்கள் கூடவே இன்னும் ஒன்றைத் தேடி இருக்கலாம் இல்லையா
    தன் கணவர் இதுவரை எதைத் தேடினாரோ அது என்னவென்று? :))
    ஜீ இதுக்கு நீங்களும் ஏன் நடுங்குகிறீர்கள் ?..:)

    ReplyDelete
    Replies
    1. எனக்கா நடுக்கமா ) என் பாஸ் வேர்ட் கூட என் ஹோம் 'பாஸ் 'அமைத்துக் கொடுத்ததுதான் .எனவே ,.மடியில் கனமுமில்லை ,வழியில் பயமுமில்லை )
      நன்றி

      Delete