28 October 2014

ஃபேஷன் டீவியை இன்னுமா மறக்கலே ?

                  ''குருவே ,அந்த சிஷ்யன்   என்ன கேட்டார் ,ஆசிரமத்தில் இருந்து உடனே 'கல்தா 'கொடுத்து விட்டீர்களே ?''
             ''ஞானக் கண்ணால் ஃபேஷன் டீவியைப் பார்க்க அருள் புரியுங்கள் என்று கேட்கிறானே !''
சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்....

சர்வருக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தம் ?

               ''சர்வர் யாருமே ஒத்துழைக்காம நஷ்டமாகி ஓட்டலை மூடிட்டீங்க ...கம்ப்யூட்டர் சென்டர் வைங்கன்னு  சொன்னா ,ஏன் வேண்டாங்கிறீங்க?''
                 ''அதுக்கும் 'சர்வர் 'ஒத்துழைப்பு  தேவைப்படுமே!''

பேஸ் புக் வடிவில் வந்த எமன் !

எமன் எருமை வாகனத்தில் வருவான்னு சொல்வார்கள் ...
இந்த நவீன காலத்தில் ...
சென்னையில் பணிபுரிந்த சாப்ட்வேர்  என்ஜினியருக்கு பேஸ் புக் வடிவில் எமன் வந்துள்ளான் ...
ஜார்கண்ட் பையன் ,கேரளக் குட்டியை மூன்றாண்டு டாவடித்து  ...
இரு வீட்டார்  சம்மதமின்றி பதிவுத் திருமணம் முடித்து ...
ஹனி மூனை வெளிநாட்டில் கொண்டாடி மூன்று மாதமாகி விட்டது ...
இளம் மனைவி ஹனிமூன் படங்களை பேஸ் புக்கில் போட ...
படங்களைப் பார்த்த பையனின் பெற்றோர்க்கு கோபம் தலைக்கேற ...
படங்களை டெலிட் செய்ய பெற்றோரின் கட்டளை ஒருபுறம் ...
முடியவே முடியாதென்று மனைவியின் பிடிவாதம் மறுபுறம் ...
செய்வதறியாதவன் தொங்கிவிட்டான்  தூக்கில் !
பேஸ்புக்கில்  படங்கள் சிரிக்கின்றன ...
போட்டோவில் சிரிப்பவன்தான் உயிருடன் இல்லை !

சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்..

ஊரு விட்டு ஊரு போனா பேரும் மாறுமா?

          ''கர்நாடகாவிலே  எல்லாமே 'ஹள்ளி'ன்னுதான் முடியுமோ ?''

            ''நம்ம ஊரு அல்லி ராணி கூட அங்கே போனா ஹள்ளி  ராணிதான்  !''

28 comments:

  1. Replies
    1. ஒண்ணும் சொல்றதுக்கு இல்லையா :)
      நன்றி

      Delete
  2. பேஸ் புக் வடிவில் வந்த எமன்
    உலகில் பலர்
    தற்கொலை செய்யத் தூண்டி விடுகிறானே!
    சிறந்த பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மதுரை பதிவர் திருவிழாவில் சிறப்பு விருந்தினர் திரு .இந்திரா சௌந்தர் ராஜன் அவர்களும் கைபேசியை தவறாக பயன்படுத்தினால் வரும் தொல்லைகளைப் பற்றி பேசியது நினைவுக்கு வருகிறது !
      நன்றி !

      Delete
  3. மதுரை வலைப்பதிவர் விழாவில்
    தங்களையும் நண்பர்களையும் பார்த்ததில் மகிழ்ச்சி. வலையுலக நட்பைத் தொடர்வோம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கரந்தை மா மனிதர்கள் முதல் புத்தகப் பிரதியினைப் பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்றி, மதுரை வலைப் பதிவர் திருவிழாவை வெற்றிகரமாய் ஆக்கியதற்கு மிக்க நன்றி !

      Delete
  4. Replies
    1. நீங்கள் இங்கிருக்கும் போதே ,உங்கள் தளத்தில் தமிழ்மண வாக்கு பெட்டி வைக்க முயற்சி செய்யலாமே ,கில்லர் ஜி ?
      நன்றி

      Delete
  5. அட..பேஷன் டீவிக்கு இப்படியோரு அர்த்தம் உண்டா.....!!!

    ReplyDelete
    Replies
    1. ஃ பேஷன் டீவி எல்லோர் கண்ணிலும் படுவதில்லையே ,அதைப் பார்க்க ஞானக் கண் தேவைதானே :)
      நன்றி

      Delete
  6. 1. ஹா..ஹா...ஹா...

    2. ஹா..ஹா... உண்மைதானே...!!!!

    3. அடப்பாவமே... இதற்கெல்லாம் தூக்கில் தொங்குவார்களா? கொடுமையாய் இருக்கிறதே... இந்த அளவு தைரியம் இல்லாதவர்கள் எதற்குக் காதலிக்கிறார்கள்?

    4. ஹள்ளின்னா கிராமம்னு அர்த்தம் இல்லையோ?

    ReplyDelete
    Replies
    1. 1.இந்த 'வடைப்' பதிவரின் ஜோக்கை ரசிக்க முடிகிறதா :) ....
      2.சர்வர் என்றாலே மக்கர்தானா:)
      3.அதானே ,காதலன் என்றால் வீரனாய் மார் வேண்டாமோ :)
      4.நம்ம ஊரில் பட்டின்னு சொல்றது மாதிரிதானா :)
      நன்றி

      Delete
  7. பேஸ்புக் மூலம் இப்படியெல்லாம் பிரச்சனை வருமா. கொடுமைடா சாமி.

    ReplyDelete
    Replies
    1. வெளியே வராத கொடுமைகள் இன்னும் ஏராளம் !
      நன்றி

      Delete
  8. அய்யா..! உங்களை மதுரையிலே சந்தித்தது மகிழ்ச்சி..!
    தொடர்ந்து சிந்திப்போம்..!

    ReplyDelete
    Replies
    1. அய்யா முத்து நிலவனுடன் ,நீங்களும் சேர்ந்து சிறப்புரை ஆற்றிக் கலக்கியதற்க்கு நன்றி !
      தொடர்கிறேன் ,தொடருங்கள் மஹா சுந்தர் ஜி !

      Delete
  9. சர்வமும் சர்வர் மயம் என்ன ஒரு சொல் விளையாட்டு!
    salut Mr.Bagawaan jee kAA.

    புதுவை வேலு
    http://www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. வையமெங்கும் wifi மயம் என்றுகூடச் சொல்லத் தோன்றுகிறது :)
      நன்றி

      Delete
  10. மதுரையில் தங்களைச் சந்தித்தது மிக்க மகிழ்வினை அளித்தது நண்பரே

    ReplyDelete
    Replies
    1. தங்கள் குடும்பத்தினருடன் வந்து சந்திப்பை சிறப்பித்ததற்க்கு நன்றி .தங்களுக்கு உணவைக் கூட பரிமாற நேரம் கிடைக்கவில்லை ,வருந்துகிறேன் !
      நன்றி

      Delete
  11. ஃபேஸ்புக் - பரிதாபம்......

    ஹள்ளி - ஹா ஹா.....

    சர்வர் - அதானே! இங்கேயும் அதே பிரச்சனை தானே!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. பேஸ்புக்கின் விகார முகம் இது !
      நன்றி !

      Delete
  12. ஹஹஹஹ.....உண்மை அதுதானே!...

    வார்த்தை விளையாட்டு சர்வரை மிகவும் ரசித்தோம்!

    ஃபேஸ்புக் வழியாகக் கெட்டதும் நடக்கின்றதுதான்....ஆனால் கோழைத்தனமான முடிவிற்கு ஃபேஸ்புக் காரணமாகாதே ஜி!

    ஹள்ளி ராணி...."குக் கிராமமத்து ராணி"???!!!!!

    ReplyDelete
    Replies
    1. சுருக்கமாய் குக்கி ராணி என்று சொல்லலாமா :)
      நன்றி

      Delete
  13. முகநூல் தகவல் அதிர்ச்சி..

    சர்வர் இல்லமால் இங்கு எதுவும் இல்லை ...

    மலர்த்தரு

    ReplyDelete
    Replies
    1. சர்வர் வேலை செய்யலைன்னா நாம மின்சார பில்லைக்கூட கட்ட முடியலையே :)
      நன்றி

      Delete