3 October 2014

'சரஸ்வதி துணை ' இருந்தால் பாஸாவானா ?

இன்று நமது நாள் ...ஆம் ,அனைவருக்கும் உலக சிரிப்புத் தின வாழ்த்துக்கள் !
  ---------------------------------------------------------------------
 மயிர் பிளக்கிற ஆராய்ச்சின்னா  இதுதானா ?                         
                       ''என்னடா ,ரொம்ப நேரமா 'ஏர் பட்ஸ் 'சோட  இரண்டு முனைப் பஞ்சையும்  பார்த்துகிட்டே இருக்கே ?''
                 ''இதிலே எந்த பக்கத்தை எந்த பக்க காதுலே நுழைக்கிறதுன்னு தெரியாம யோசிச்சுகிட்டு இருக்கேன் !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

இந்த பயபுள்ளே பாஸ் ஆவானா ?

                   ''பரீச்சை பேப்பர்லே  பிள்ளையார் சுழியைப்  போடுவதற்குப்பதிலா 'சரஸ்வதி துணை 'ன்னு ஏன் எழுதி இருக்கே ?''
                ''முன் டேபிள்லே உட்கார்ந்து பரீச்சை எழுதினவ பெயர்  சரஸ்வதி ஆச்சே !''
வீட்டிலே நாலு வத்தல் வறுக்கும் போதே 
உட்கார முடியவில்லை ,தும்மல் வருகிறது ...
இரண்டாயிரத்து பதிமூணு கிலோ வத்தலைப் போட்டு ...
யாகம் செய்யப் போகிறார்களாம் , மழைவர வேண்டுமென்று !
வர்ற மழையையும் விரட்டி விடுவார்கள் போலிருக்கிறது ...
இப்படி சுற்று சூழலைக் கெடுத்து! 

40 comments:

  1. 01. இடது பக்கம் நுளைத்து வலது பக்கம் எடுக்கச்சொல்லுங்க

    02. முன் டேபில்ல சரீனா பேஹம் உட்கார்ந்திருந்தா ?

    03. சிந்திக்க வேண்டிய கருத்தே,,,

    ReplyDelete
    Replies
    1. ஒரு ஜி இடத வலதானு யோசிக்கறாரு

      இன்னுரு ஜி என்னடானா அப்படியே நுழைச்சுருன்னு ....ரெண்டு ஜிக்களும் சேர்ந்து ஒரே அதகளம்தான் போங்க...

      Delete
    2. 1.அவ்வளவு நீள பட்ஸ்சை இனிமேதான் தயாரிக்கணும் )

      2.சரீனா சரின்னா பார்த்து காப்பி அடிக்கவேண்டியதுதான் )

      3.இந்த செய்தியைப் படிக்கும் போதே எனக்கு தும்மல் வந்ததே )
      நன்றி

      Delete
    3. துளசிதரன் ஜி ,நம்ம கில்லர்ஜிக்கு நல்ல கற்பனை வளம் ,இன்னும் நல்லா வருவார் )
      நன்றி

      Delete
  2. :) சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் ஜீ !

    ReplyDelete
    Replies
    1. அத்துடன் ,உலக சிரிப்புத் தின வாழ்த்துகளும் )
      நன்றி

      Delete
  3. இனிமேல் அந்த பட்ஸ்ல (L),(R)ன்னு போடணும் போல இருக்கே. எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க பகவான் ஜீ. இப்ப புரியுது, உங்களுக்கு தலையில முன்பக்கம் ஏன் முடி இல்லைன்னு.

    ReplyDelete
    Replies
    1. நீங்க இப்படி எல்லாம் சொல்லுவீங்கன்னு தெரிஞ்சு இருந்தா டோப்பா ஒண்ணு போட்டுக்கிட்டு போஸ் கொடுத்து இருப்பேனே )
      நன்றி

      Delete
  4. அந்த சரஸ்வதியும் இவனை மாதிரியே இருந்த என்ன பண்றது?

    ReplyDelete
    Replies
    1. உன்னாலே நான் கெட்டேன்,என்னாலே நீ கெட்டேன்னு ஆறுதல் பட்டுக்க வேண்டியதுதான் )
      நன்றி

      Delete
  5. மயிர் பிளக்கிற ஆராய்ச்சின்னா இதுதானா?
    முன் டேபிள் சரஸ்வதி துணையா?
    மழையில் நனைய ஆசையா?
    என்றெல்லாம்
    இன்றைய பதிவுகள்
    ஆய்வுக்கண்ணோட்டமாக மின்னுகிறதே!

    ReplyDelete
    Replies
    1. உலக சிரிப்பு தினத்தில் சிரிக்கும் படி இல்லையா )
      நன்றி

      Delete
  6. Replies
    1. வாத்தியார் நீங்கள் உங்கள் நிறைய 'சரஸ்வதி'களை பார்த்து இருப்பீங்க ,அப்படித்தானே )
      நன்றி

      Delete
  7. Replies
    1. இன்னைக்கு உலக சிரிப்பு தினம் ,ஹா ஹா ஹா என்று தாராளமாய் சிரிக்கலாமே )
      நன்றி

      Delete
  8. வணக்கம்
    தலைவா..

    மூன்றையும் இரசித்தேன் நன்றாக உள்ளது த.ம4
    -நன்றி-
    -அன்புடன்-
    - ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அந்த மூன்றுக்கு நீங்க போட்ட நாலை நானும் ரசித்தேன் )
      நன்றி

      Delete
  9. ஹாஹஹஹஹ..

    பயபுள்ள கண்டிப்பா பாசாகிடுவான் சரஸ்வதியின் விடைகள் சரியாக இருந்தால்

    ReplyDelete
    Replies
    1. இதுக்காக,லட்சுமியின் பேப்பரையுமா கிராஸ் செக் செய்து காப்பி அடிக்க முடியும் )நன்றி

      Delete
  10. 1.முடியல ராசா:(((
    2. அது புள்ளைக்கு அழகு:)))
    3.நச் கேள்வி பாஸ்:)
    தம6

    ReplyDelete
    Replies
    1. 1.அவராலும் முடியலே ,உங்களாலும் முடியலை )
      2.கல்விக் கடவுளே முன் டேபிளில் வந்து விட்டதோ )
      3.ஹட்ச் என்று தும்மல் போட்டுகிட்டே யோசிச்சதாச்சே ,இது )
      நன்றி

      Delete
  11. 1. ரொம்ப அறிவாளியா இருப்பார் போலேருக்கே... ஒரு ஸ்ட்ரிப்பில் இருந்த மாத்திரைகளில் எது காலை, எது இரவு என்று ஒருவர் கேட்டாராம்! அது போல!

    2. ஆஹா.... நன்றியுள்ள, ப்ளஸ் உண்மையுள்ள பையனா இருக்கானே!

    3. தும்மலில் வரும் சளி மழை!

    ReplyDelete
    Replies
    1. 1.உண்மைதான் ,மெத்தப் படித்த சுத்த பைத்தியக் காரன் )

      2..இந்த விசுவாசத்தை எந்த நாயிடம்இருந்து கற்றுக் கிட்டானோ )

      3.குடையை பக்கவாட்டில் பிடித்துக்கிட்டு நனையாமல் பார்த்துக்கணுமோ)
      நன்றி

      Delete
  12. //மயிர் பிளக்கிற ஆராய்ச்சின்னா இதுதானா ?//

    அத்தனை முடியையும் உதிர வைக்கிற ஆராய்ச்சியும்கூட!

    ReplyDelete
    Replies
    1. அத்தனையும் உதிர்ந்தாலும் முடிவு தெரியுமான்னு தெரியலே )
      நன்றி

      Delete
  13. பரீட்சை என்ன பரீட்சை, சரஸ்வதியின் பின்னழகில் மயங்கி, ’சரஸ்வதி வாழ்க்கைத் துணை’ன்னு எழுத நினைச்சி இப்படி எழுதிட்டானோ என்னவோ?!

    ReplyDelete
    Replies
    1. இப்பவே 'வாழ்க்கை'யைத் தொலைச்சிட்டான் ,அப்படித்தானே )
      நன்றி

      Delete
  14. //மழையில் நனைய ஆசை.....//

    ’நறுக்’.....உறைக்குமா?

    ReplyDelete
    Replies
    1. 'நறுக்'கினாலும் உறைக்காது )
      நன்றி

      Delete
  15. சரஸ்வதி துணை சூப்பருங்க ஜி....
    மற்றவையும் ரசிக்க வைத்தன.....

    ReplyDelete
    Replies
    1. சரஸ்வதி ஒத்துழைச்சாலும் பாஸ் ஆவானா )
      நன்றி

      Delete
  16. படிக்காமலே பாசாகுறதுக்குத்தானே சரஸ்வதி..பூஜை வேறு எதற்கு...!!!

    ReplyDelete
    Replies
    1. அதானே பூஜைதான் ரிசல்ட் வர்ற அன்னைக்கு நடக்கதானே போவுது )
      நன்றி

      Delete
  17. சூப்பர் ,இன்றைய உங்கள் மங்கல்யான் பதிவும் கூட )
    நன்றி

    ReplyDelete
  18. ஹஹஹஹஹஹஹாஹா...சும்மாகலக்குறீங்க...

    ReplyDelete
    Replies
    1. மூன்றும் மூன்று விதம் ,கலக்கலாத்தான் தோணும் )
      நன்றி

      Delete
  19. ஜீ இந்த போற்றித் திரு அகவலையும் படியுங்கள் :)

    http://rupika-rupika.blogspot.com/2014/10/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. இதோ,படிச்சா போச்சு !
      நன்றி

      Delete