29 October 2014

அரசியலே வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறக் காரணம் ?

---------------------------------------------------------------------------

இந்த தம்பதிக்குள் வாக்குவாதம் வரவே வராது !

            ''மாப்பிள்ளே ,என் பொண்ணுக்கு வாய் கொஞ்சம் நீளம் ,பக்குவமா நடந்துக்குங்க !''
               ''கவலையே படாதீங்க மாமா ,எனக்கும் கை கொஞ்சம் நீளம் !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்....

I T வேலை என்பதும் இப்படித்தானா ?

             ''முதலாளிகிட்டே கால்லே ஆணின்னு ஒருநாள் லீவு கேட்டது தப்பாப் போச்சா .ஏண்டா ?''
                   ''நாளையிலிருந்து பம்பரமா சுத்தி சுத்தி  வேலைப் பார்க்கணும்னு சொல்றாரே !''

ரஜினி காந்த் ,பிரியங்கா சோப்ரா ...யார் நெனைப்பு சரி ?

நீங்கள் ஏன் அரசியலுக்கு வர விரும்பவில்லை என ...
நம்ம ஊர் சூப்பர் ஸ்டாரைக் கேட்டபோது ...
அடிப்படையில் சில மாற்றங்கள் வந்தால் மட்டுமே ,நான் அரசியலுக்கு வருவதில் அர்த்தம் இருக்கும் என்று கூறினார் !
இப்போது இருக்கின்ற சட்ட திட்டங்கள் ஊழலுக்கு வழிவகுப்பதாக இருக்கிறது என்று அவரும் நினைக்கிறார் !
இப்படியே இருந்தால் என்னால் மட்டுமல்ல ,ஆண்டவனாலும் நாட்டை திருத்த முடியாது என்பதுதான் அதன் பொருள் !
தமிழன் என்றொரு தமிழ் படத்தில் முதலும் ,கடைசியும் நடித்த பிரியங்கா சோப்ரா ...
நான் பிரதமரானால் ஊழலை ஒழித்து கட்டிவிடுவேன் என்று திருவாய் மலர்ந்தருளி யுள்ளார் ...
பிரியங்கா காந்திக்கே வராத ஆசை இவருக்கு வந்து இருக்கிறது ...
ஆசைப்படுவதில் தவறில்லை ...
பிரதமர் பதவியை கால் ஷீட் கொடுத்து பெற்று விட முடியாது ...
பொருளாதார மேதைக்கு அடித்த  அதிர்ஷ்டம் ,அவருக்கும் அடிக்குமாவென தெரியவில்லை !
அவருக்கு ஒரு வேண்டுகோள் ...
ரசிகர்களின் மனம் மகிழ ,உடலை திறந்து காட்டியது போல் ...
நாட்டு மக்களின் மனம் மகிழ ,ஊழலை ஒழிக்கும் ரகசியத்தை மனம் திறந்து கூற வேண்டும் !

சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்..

தின''சிரி '' ஜோக் !!!அதுக்கு இப்படியும் அர்த்தமா?

                   ''பொண்ணுக்கு  காது சரியா கேட்காதுன்னு ஏன் முன்னாடியே சொல்லலே?'' 
                        ''எள்ளுன்னா எண்ணெயா நிற்பான்னு சொன்னேனே!''

26 comments:

  1. ஜோக்ஸ் அருமை...
    அரசியல் ரஜினி வரப்போவதில்லை...
    பிரியங்கா பலரின் கனவைக் கெடுத்து வைப்பவரின் கனவு பலிக்குமா?

    ReplyDelete
    Replies
    1. ரஜினி சும்மா இருந்தாலும் ,அவர் எங்கள் கட்சிக்கு வரணும்னு சொல்வதும் ,அவர் ஒன்றும் எங்கள் கட்சிக்கு வேண்டாம் என்பதும் சில கட்சிகளின் கேணத்தனமான செய்கைகளாய் இருக்கின்றனவே !
      நன்றி

      Delete
  2. பம்பரமா வேலை பார்க்கணுமா...ஹஹஹா...

    ரசித்தேன்.

    நன்றி
    வாழ்க வளர்க
    உமையாள் காயத்ரி.

    ReplyDelete
    Replies
    1. மதுரை பதிவர் சந்திப்பை நடத்த நால்வர் அணி அப்படித்தான் வேலை செய்தது :)
      நன்றி

      Delete
  3. எங்க கையைக் கொஞ்சம் காட்டுங்க ஜி ?..அடேங்கப்பா இம்புட்டு
    நீட்டுக் கையா !!!!!!!!!! நாளை முதல் ஒட்டறை அடிக்கும் பொறுப்பு
    உங்களதே :))))))) போதுமா ?...:)))))

    ReplyDelete
    Replies
    1. நீட்டு கைக்கு பொறுப்பைக் கொடுக்கலாம் ,ஆனால்இது பக்கவாட்டில் செயல் படுகிறது ,கழுத்துக்கு மேலே ஏற மறுக்கிறதே :)
      நன்றி

      Delete

  4. பொண்ணுக்கு வாய் கொஞ்சம் நீளம்
    ஆணுக்குக் கை கொஞ்சம் நீளம்
    அழகான மணப்பொருத்தம்!

    பிரியங்கா சோப்ரா பிரதமரானால்
    ரசிகர்களின் மனம் மகிழ
    உடலைத் திறந்து காட்டியது போல் ...
    நாட்டு மக்களின் மனம் மகிழ
    ஊழலை ஒழிக்கும் ரகசியத்தை
    மனம் திறந்து கூறுவாரா?

    காலம் தான்
    பதில் சொல்லக் காத்திருக்க வேணும் போல...

    ReplyDelete
    Replies
    1. வாழ்க பல்லாண்டு என்று தம்பதியை வாழ்த்துவோம் ,சரிதானே :)

      பிரியங்கா சோப்ரா சொல்றது 'சின்னப் புள்ள'த் தனமா இருக்கே :)
      நன்றி

      Delete
  5. வாய் நீளம் கைநீளம் ! பொருத்தம் நன்று!

    ReplyDelete
    Replies
    1. ஜாதகம் பொருந்தவில்லை என்றாலும் இந்த பொருத்தம் போதுமானது ,அப்படித்தானே :)
      நன்றி

      Delete
  6. ஹாஹாஹாஹ.....வாய்...கை.....

    ஆணி...பம்பரமா வேலை...ரசித்தோம்!

    ReplyDelete
    Replies
    1. சில டைரக்டர்கள் கதாநாயகியின் தொப்புளில் பம்பரத்தைச் சுற்ற விட்டு ரசிக்கிறார்கள் ,நான் காலில் ஆணி அடித்து பம்பரமாய் சுழல விடுவதில் தப்பில்லை தானே :)
      நன்றி

      Delete
  7. 1. தானிக்கி தீனி சரியாப் போயிந்தி!!!!

    2. ஹா...ஹா.... சரியான ஆளுங்கதான்!

    3. உவமை சரிதான்! அப்புறம் அத்தனைக்கும் ஆசைப்படுன்னு பெஇயவங்க சொல்லியிருக்காங்களே... அதான் பிரதமராக ஆசைப் படறார். போதாக்குறைக்கு 'கனவு காணுங்கள்' னு வேற கலாம் சொல்லியிருக்கார்!

    4. ஹா...ஹா....ஹா... அதுக்கு இப்படி ஒரு அர்த்தமா!!

    ReplyDelete
    Replies
    1. 1.யானைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம்னு சொல்ற மாதிரியா ?:)

      2..நல்ல வேளை,இரண்டு கால்லேயும் ஆணி வந்தா நல்லதுதான் என்று சொல்லாமல் விட்டாரே :)

      3அத்தனைக்கும் ஆசையும் படு ,அவஸ்தையும் படுன்னு யாரும் சொல்லலையா :)

      4.தரகருக்கு பேசச் சொல்லியா தரணும்:)
      நன்றி

      Delete
  8. மூன்று ஜோக்குமே அசத்தல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ரசித்ததற்கு நன்றி !

      Delete
  9. சபாஷ் சரியான போட்டி.
    ஆணியை புடுங்க வேணாம்னு சொல்லுவார்னு நினைச்சிருப்பாரோ?

    படிக்கும்போது நான் பிரதமரானால் நு கட்டுரை எழுதௌவது இல்லையா? பாவங்க. சோப்ரா..

    அதானே ?

    ReplyDelete
    Replies
    1. இந்த வசனத்தைக் கேட்டால் வில்லன் நடிகர் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியலே :)

      ஆணியேப் பிடுங்காதீங்கன்னு சொல்வதில் இப்படியும் ஒரு அர்த்தம் இருக்கா ;)

      இப்படிச் சொல்ல பிரியங்கா சோப்ரா என்ன ஸ்கூல்லே படிக்கிற பிள்ளையா :)

      கிங்கு ,நீங்களுமா தரகருக்கு சப்போர்ட் ?:)
      நன்றி

      Delete
  10. Replies
    1. கிங்கு ,எனக்கும் சப்போர்ட் செய்ததற்கும் நன்றி :)

      Delete
  11. ஜோக்குகளை ரசித்தேன். மதுரையில் பதிவர் சந்திப்பில் தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. வலைப்பூ நட்பினைத் தொடர்வோம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்ததற்கும் ,'அன்பு'லிங்கமாய் மாறி அன்று சந்தித்து மகிழ்ந்ததற்கும் நன்றி :)

      Delete
  12. கை நீளம் - முறிச்சுடப் போறாங்க! :)

    ரசித்தேன்.

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. வாய் நீளம்னா காது வரைக்கும் இருக்குமா ;)
      நன்றி

      Delete
  13. வாய் நீண்டா....கை நீளும்...... கை நீண்டா....வாய் நீளும்... சரிக்கு சரிதான்

    ReplyDelete
    Replies
    1. கையை உடைச்சும் ,நாக்கை அறுத்தும் சரி பண்ணிடலாமா :)
      நன்றி

      Delete