21 October 2014

படுக்கைமேல் இவருக்கு பிடித்த காரியம் ?

-------------------------------------------------------------------------------

குடிகாரனுக்கு நியாயம் கேட்க உரிமையில்லை ?                      
            ''ரிஜிஸ்டர் ஆபீஸில் போய்,இலஞ்சம் வாங்குவது கேவலம்னு சொன்னீயே ,என்னாச்சு  ?''
               ''மது வீட்டிற்கும் ,நாட்டிற்கும் கேடுன்னு போட்டிருக்கு,நீங்க குடிக்காமலாஇருக்கீங்கன்னு  கேட்டு கேவலப் படுத்திட்டாங்க  !''

 சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...


IQ இல்லைனா கல்தாதான் !

''உணவு மந்திரிக்கு கல்தாவாமே ...ரேசன் கடையிலே இலவச வேட்டி சேலை வாங்க வந்த நெரிசல்லே சிக்கி நாலு பேர் இறந்தாங்களே ,அதுக்காக இந்த கல்தாவா ?''
''அதுக்காக இல்லை ...'கியூ ' பிரிவு  போலீசார் கியூவை  ஒழுங்குபடுத்தலைன்னு  கண்டனம் தெரிவிச்சதுக்காக  !''
 

படுக்கைமேல் இவருக்கு பிடித்த காரியம் ?

அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில் குடைப் பிடிப்பான் என்பதை நிரூபித்துள்ளார் ...
திரிபுரா மாநில கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சமர் ஆசார்ஜி என்பவர் !
அவர் செய்தது ,இருபது லட்ச ரூபாயை படுக்கையில் அடுக்கி ,அதன் மீது புரண்டு புரண்டு செல்போன் மூலம் வீடியோ வேறு எடுத்துக் கொண்டுள்ளார் ...
அவரது நண்பர் மூலமாகவே அந்த வீடியோ வலையுலகில் வெளியாகிவிட்டது ...
அவர் பேட்டியில் சொல்கிறார் ...
'இது எனது நீண்ட நாள் ஆசை,மற்ற தலைவர்கள் போல் நான் மறைக்க விரும்பவில்லை '!
கழிவறைக்குப் போகவே காசில்லாத பல கோடி ஏழைகள் வாழும் நாட்டில் ...
இவரைப் போன்றவர்கள் கழிவறைக் கட்டியே கோடிக் கணக்கில் கொள்ளை அடிக்கிறார்கள்!
சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்..

இந்த மொக்கைக்கு 'ஜல்பே 'பரவாயில்லே!

''உனக்கு ஜலதோஷம்  பிடிக்குமா?''

''எப்பவாவது  பிடிக்கும்!''

''அப்படின்னா எப்பவும் என்ன பிடிக்கும்?'         





22 comments:

  1. Replies
    1. தலைப்பைப் பார்த்து வேறேதேனும் நினைத்தீர்களா )
      நன்றி

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. தங்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
    தம 1

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி !தாங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

      Delete
  4. நல்ல கேள்வி.

    நல்ல Qoஸ்டின்!

    பணத்திமிர்.

    ஹா..ஹா..ஹா..

    ReplyDelete
    Replies
    1. இதுக்காக அவர் குடிக்காமல் இருந்தால் ரோசமுள்ள மனுசன்னு சொல்லலாம் )

      இப்படியெல்லாம் நடக்கும்னுதான் பலரும் வாய் திறப்பதேயில்லை )

      அற்பனுக்கு வாழ்வு ....)

      ஜல்புக்கும் ஹா ஹா )
      நன்றி



      Delete
  5. ஹாஹாஹா! சூப்பர்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி !தாங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

      Delete
  6. ஜலதோஷம் எப்பவாது பிடிக்கும்! :))) ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. எப்பவும் பிடிச்சா நல்லாவா இருக்கும் )
      நன்றி

      Delete
  7. இந்தப் பேச்சும் விடிந்த பிறகு போகா...மாவா...இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. குடிகாரன் பேச்சுதானே )
      நன்றி

      Delete
  8. பல ஆண்டுகளுக்கு முன்னர் எம்.எஸ். உதயமூர்த்தி சொன்னார் உலகம் உருண்டை நீங்கள் ஒரு திசைக்கு எதிரே பயணப்பட்டால் நீங்கள் துவங்கிய இடத்திற்கே வருவீர்கள் ...
    திராவிட இயக்கங்கள் என்றாவது ஒரு நாள் பக்தி இயக்கங்கள் ஆகும் என்கிறமாதிரி சொல்லியிருந்தார் ...
    இப்போ வீரமணி மட்டும்தான் மிச்சம்... மற்றவர்கள் கிளீன் போல்ட்

    அதுபோல பொதுஉடைமை பேசியவர்கள் ... தனியுடமை சேர்க்கிறார்கள் ...

    அதெல்லாம் போகட்டும்
    தங்களுக்கும் குடும்பத்தினர்க்கும் எனது இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

    அறிவியல் செய்தி ஒன்று !

    ReplyDelete
    Replies
    1. சமீபத்திய அரசியல் நிகழ்வுகலைப் பார்த்தால் அவர்கள் கட்சிப் போஸ்டர்களில் பெரியாரை ஏன் சேர்த்துக் கொள்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது !
      சீனாவிலும் தனியுடைமை பெருகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனவே !
      வாழ்த்துக்கு மிக்க நன்றி !தாங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

      Delete
  9. Replies
    1. த ம ஆறு சரி ,உங்கள் கமென்ட்டைப் பார்க்காமல் மனம் 'ஆறு'தல் அடைய மாட்டேங்குதே )
      நன்றி

      Delete
  10. சிறந்த பகிர்வு
    தங்களுக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

    ReplyDelete