26 October 2014

பொண்ணு வாந்தி எடுத்தாலே 'அது 'தானா ?+வலைப்பதிவர் திருவிழா!

---------------------------------------------------------------------------------
இன்று நடைபெறும் வலைப்பதிவர் திருவிழாவுக்கு 'ஜோக்காளி 'யின் தாயகமான மதுரைக்கு  வருகை தரும் வலையுலக உறவுகளுக்கு நன்றி !
வர முடியாதவர்கள் வருந்த வேண்டாம் ,விழா நிகழ்ச்சிகள் யாவும் நெட்டில் நேரடி ஒளிபரப்பாகிறது ,கண்டு ,கேட்டு மகிழுங்கள் !
இதோ இன்றைய நிகழ்ச்சி நிரல் ....


*********************************************************************************

பொண்ணு வாந்தி எடுத்தாலே 'அது 'தானா ?

           ''என்னங்க,நம்ம பையன் வாந்தி எடுக்கிறான்னு  சொல்றேன் ...கொஞ்சமும் அலட்டிக்காம இருக்கீங்களே ,ஏன் ?''
           ''பொண்ணு வாந்தி எடுத்தாதான் ஏதோ சிக்கல்னு அர்த்தம் ,அதான் !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்....

மனைவியின்  சுகரால்  கணவனுக்கு வந்த கஷ்டம் !

               ''என்ன முத்தம்மா .சீனிவாசன்ங்கிற என் பெயரை  மாற்றிகிட்டுதான்  பக்கத்திலே  வரணும்னு அடம் பிடிக்கிறீயே ,ஏன் ?''
                 ''சக்கரை கூடுதலா இருக்கு ...சீனி 'வாசனை 'கூட பக்கத்திலே வராம பார்த்துக்குங்கன்னு , டாக்டரு கறாரா சொல்லி இருக்காருங்க !''

'சின்ன வீடு'க்கு அங்கீகாரமா இந்த தீர்ப்பு ?

முதல் திருமணத்தை மறைத்து  2வது திருமணம் செய்திருந்தால் ,ஹிந்து திருமண சட்டப்படி கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கு 2வது மனைவிக்கும் உரிமை உண்டு ...
இப்படி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதி மன்றம் !
ஒருவனுக்கு ஒருத்தி என்பது நமது பண்பாடு என்று சொல்லிக்கொண்டே ...
ஊருக்கு ஒருத்தியை வைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு இத்தீர்ப்பால் நெருக்கடி அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது ...
இதுவரை தாலி இல்லாமல் இருந்த கள்ளக்காதலிகள்  சட்டப் பாதுகாப்புக்காக தாலி கட்டச் சொல்லி நெருக்கடி தந்தால் ...
கள்ளக் காதலன் தாலியும் தரலாம் ...
இதென்ன வம்பு என்று ஒரேயடியாய் ஜோலியும் முடிக்கலாம் ...
கள்ளக் காதல் கொலைகளுக்கு இனி பஞ்சம் இருக்காது ...
முதல் திருமணத்தை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார் என்று ஜீவனாம்ச வழக்குகளுக்கும்  இனி பஞ்சம் இருக்காது ...
உச்ச நீதிமன்ற தீர்ப்பு தரும் உற்சாகத்தால்  சின்னவீடு பெருக்கத்திற்கும் இனி பஞ்சம் இருக்காது ...
சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்..
கெமிஸ்ட்ரி அப்டேட் ஆகலையே !
              "கெமிஸ்ட்ரி பாடத்திலே பர்ஸ்ட் ரேங்க்  வாங்கி பிரயோஜனம்  இல்லையா ,ஏண்டி ?'' 
                 "கல்யாணம் ஆனதில் இருந்து சண்டை தான் எனக்கும் அவருக்கும் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகமாட்டேங்குதே   !"

22 comments:

  1. எப்பொழுதும் போலவே உங்கள் கெமிஸ்ட்ரி ஒர்காகிறது பகவான்ஜி!
    சீனி வாசனை கூட....
    ஹ ஹ ஹா
    த ம 1

    ReplyDelete
    Replies
    1. இன்றைய பதிவுகள் எல்லாமே ஒரு மார்க்கமாவே இருப்பதை உங்கள் கமெண்ட்டைப் பார்த்தபின்தான் தெரிகிறது :
      நன்றி )

      Delete


  2. வலைப்பதிவர் திருவிழாத் தகவலுக்கு நன்றி.

    பதிவர் சந்திப்பில் கலந்து சிறப்பிக்க உள்ள தங்களுக்கும் எனது வாழ்த்துகள்.

    உச்ச நீதி மன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு நன்று!

    ReplyDelete
    Replies
    1. பதிவர் சந்திப்பை நேரலையில் பார்த்து ரசிர்த்தீர்கள்தானே ?
      நன்றி

      Delete
  3. வணக்கம்
    பதிவர் சந்திப்பு குறித்து தெளிவு படுத்தியமைக்கு நன்றி..
    நகைச்சுவையை இரசித்தேன்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றியுரையில் சகோ.DD அவர்கள் உங்களையும் மறக்காமல் நன்றி கூறினார் ,ரூபன் ஜி !
      நன்றி

      Delete
  4. வணக்கம் அண்ணா
    தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
    நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

    வலைச்சர இணைப்பு
    http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_26.html

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. பதிவர் சந்திப்பு முன்னேற்பாடுகளை கவனிக்க சீக்கிரமே அரங்கத்துக்கு சென்று விட்டேன் .அதனால் உங்கள் தகவலைதற்போது அறிந்து மிகவும் மகிழ்ந்தேன் .அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி குமார் ஜி !

      Delete
  5. எல்லாமே சூப்பர்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. பதிவர் சந்திப்பு சிறப்பாக நடந்து முடிந்திருக்கும் இந்நேரம். நேரடி ஒளிபரப்பில் பார்ப்பதில் அத்தனை ஈர்ப்பு இல்லை - நேராக பார்க்க முடியாததில் வருத்தம்!

    அனைத்தும் அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ,நேரலை ஒளிபரப்பில் சில தடங்கல் இருந்ததாக அறிந்தோம் !
      நன்றி !

      Delete
  7. பொன்னு வாந்தி எடுத்தால் அதுதானா...? அப்போ ஆண் வாந்தி எடுத்தால்.. (டாஸ்மாக்).இதுதானா...??.

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் ஆகிப் போச்சு :)
      நன்றி !

      Delete
  8. அனைத்தும் ரசித்தேன். பதிவுக்கு நன்றி ! .தொடர வாழ்த்துக்கள் ....!
    பதிவர் திருவிழாவில் ஒலி எனக்கு விக்கி விகியே வந்தது ஒன்றுமே விளங்கவில்லை. அதனால் பெரிதாக யாரையும் இனம் கண்டு கொள்ள முடியவில்லை தெரிந்தவர்களை தவிர ஆனாலும் நல்ல கிளியர் ஆக தெரிந்தமையால் மகிழ்ச்சியாக பார்த்தேன். முழுதும் பார்க்க முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ரசித்ததற்கு நன்றி !
      நேரலையில் என்னையாவது அடையாளம் தெரிந்ததா ?சகோ .DD அவர்களுக்கு பின் பொன்னாடை அணிவிக்கப் படுவது எனக்குதான் ,பார்த்தீர்களா ?
      நன்றி

      Delete
    2. யோசித்து கொஞ்ச நேரத்தின் பின் தான் கண்டு பிடித்தேன் இப்போது தான் தெரிகிறது. கூலிங் கிளாஸ் மிஸ்ஸிங் என்று பொன்னாடை ஆமாம் ஆமாம் போர்த்தியதும் பார்த்தேன். கலக்கலாகவே இருந்தது. யார் அந்தக் குழந்தை என்று வேற கேட்பது போல் தெரிகிறது உண்மையா?

      Delete
    3. உண்மையா இல்லையான்னு நீங்கதான் சொல்லணும் :)
      நன்றி

      Delete
  9. விவரமான அப்பா தான்....
    பெயருக்கு, இப்படியெல்லாம் கூடவா பிரச்சனை வரும்?

    ReplyDelete
    Replies
    1. ஒரு வேளை,அவரும் டாஸ்மாக் அடிமையா இருப்பாரோ :)

      அட 'சீனி'வாசா ,இப்படியுமா சோதனை வரும் என்று சொல்லத் தோணுதா :)
      நன்றி

      Delete