15 October 2014

மனைவி அமைதியா இருந்தா சந்தோஷம்,மாணவன் ?

--------------------------------------------------------------------

இப்படி பதில் சொன்னால் வாத்தியார் என்ன செய்வார் ?

                ''சார் ,என் பிராக்டிகல் நோட்டைக் காணாம் ..உங்க கிட்டே இருக்கா ?''
            ''பார்க்கிறேன் ..உன் பெயர் என்ன ?''
             ''அதிலேயே எழுதி இருக்கும் !''

 சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்.....

மனைவி அமைதியா இருந்தா சந்தோஷம்  ,மாணவன் ?

''கேட்ட கேள்விக்கு பசங்க யாரும் பதில் சொல்லாததால் வாத்தியார் நொந்து போய்விட்டாரா ,அப்படி என்ன கேட்டார் ?''
''முட்டாளோட கேள்விக்கு பதில் சொல்லக் கூடாது ...புரிஞ்சுதான்னு கேட்டார்!''

கொசுக் கடியில் இருந்து விடுதலையாக ....!

தக்காளிக்கு கொசுவை விரட்டும் சக்தி உண்டென்று ஆராய்ந்து கண்டுபிடித்து இருக்கிறார்கள் ...
தக்காளி சாறை பூசிக் கொள்வதா ?
தக்காளி சாஸை தடவிக் கொள்வதா ?
தக்காளி ரசத்தைக் குடித்தால் போதுமா ?
தக்காளியை கடித்தாலே போதுமா ?
தக்காளி செடியை படுக்கையை சுற்றி வைத்துக் கொள்ளலாமா ?
தக்காளியை  படுக்கை முழுவதும் பிழியலாமா ?
இதில் எதை செய்தால் கொசுக்கடியில் தப்பிக்கலாம் என்று ஆராய வேண்டியது உங்கள் பொறுப்பு ...
இதுக்கு கொசுக்கடியே தேவலை என்றால் ...விட்டு விடுங்கள் !
சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

அண்ணாவின் தொண்டர்களுக்கு பிடித்த படம்!

        ''மாற்றான் படத்தை அதிமுக,திமுக.மதிமுக  தொண்டர்கள் எல்லாம் விரும்புவாங்கன்னு ஏன் சொல்றே ?'' 
           ''மாற்றான்  தோட்டத்து  மல்லிகைக்கும் நல்ல  மனமுண்டுன்னு அறிஞர் அண்ணா    சொல்லி இருக்காரே!''


36 comments:

  1. இதுக்கு கொசுக்கடியே மேல் போதுமா ஜீ ?..:)))))))

    ReplyDelete
    Replies
    1. நல்லா அனுபவிங்க )
      நன்றி

      Delete
  2. அறிஞர் அண்ணாவின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஏற்றுக் கொள்ளாமல் யாரால் இருக்கமுடியும் )
      நன்றி

      Delete
  3. 1. ஹா...ஹா..ஹா.... படித்த உடனேயே 'குபுக்' கென்று சிரிப்பு வந்தது!

    2. ஹா...ஹா...ஹா... பாவம் ஆசிரியர்.

    3. ஹா...ஹா... தக்காளிச் சாரை வீட்டைச் சுற்றிலும் பிழிந்து விடுங்கள்!

    4. ஹா...ஹா...

    ReplyDelete
    Replies
    1. 1.குபுக் வந்ததில் எனக்கும் மகிழச்சியே )
      2இந்த மௌனத்தை அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார் )
      3 தக்காளிச் செடிகள் காடுபோல் முளைத்து விடுமே )
      4.திராவிடக் கட்சி தொண்டர்கள் எல்லோரும் பார்த்து அப்படத்தை வெற்றி படம் ஆக்கி விட்டார்களோ )
      நன்றி

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கா )

      Delete
  5. இப்படிப்பட்ட மாணவர்கள் ஈர்க்கும்வரை ஆசிரியர்களின் நிலமை கொடுமை தான். தாங்களும் இந்த மாதிரி ஆசிரியர்களை பாடாய் படுத்தியிருக்கிறீர்களாமே??

    ஐயோ சாமி, உங்களோட கடிக்கு, அந்த கொசு கடி எவ்வளவோ மேல்.

    ReplyDelete
    Replies
    1. நான் படுத்திய பாட்டில் ஒரு வாத்தியார் மாற்றல் வாங்கிக்கிட்டு போயிட்டாரே )

      உங்க ஊரில் கொசு இல்லை போலிருக்கு ,அதான் இப்படிச் சொல்றீங்க )
      நன்றி

      Delete
  6. ஆகா.... அண்ணா நல்லவேளை போய்ச்சேர்ந்தார்...
    நல்ல நகைச்சுவை.

    ReplyDelete
    Replies
    1. இருந்திருந்தால் ரூபாய்க்கு மூன்று படி அரிசியாவது கிடைத்திருக்கும் )
      நன்றி

      Delete
  7. Replies
    1. அந்த மூன்று படிக்கு இந்த மூன்றா )
      நன்றி

      Delete
  8. அதுலேயே பெயர் எழுதி இருக்கும்! - அட என்னவொரு பதில்! :))))

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அரண்டு போயிட்டார் ஆசிரியர் )
      நன்றி

      Delete
  9. முதல் ஜோக் மாணவர்களுக்கே உள்ள குறும்பை அழகாகக் காட்டுகிறது ஜீ.. கடைசி ஜோக் சூப்பர், தக்காளி மேட்டர் கல கல.. கலக்குங்கள் ஜீ.. இடைவெள்யாகிவிட்டது. இனி வழக்கம் போல தொடருவேன்.. நீங்களும் என் தளம் வாருங்கள் ஜீ..

    ReplyDelete
    Replies
    1. நீங்களும், குலசாமி கதையை எழுதி கலக்கி இருக்கிறீர்கள் ,குலசாமிக்கு கமெண்ட் அர்ச்சனை செய்து விட்டேன் .,வாழ்த்துகள் !
      நன்றி

      Delete
  10. Replies
    1. Devakottai இருப்பது INDIAவில் தானே )
      நன்றி

      Delete
  11. யாரு முட்டாத ஆளு.....முட்டுற ஆளுன்னு தெரியலையே......

    ReplyDelete
    Replies
    1. அது தெரிஞ்சா நாம ஏன் இப்படி இருக்கப் போறோம் )
      நன்றி

      Delete
  12. ஆஹா ஹா ஹா.....

    ReplyDelete
    Replies
    1. மேலே, நம்ம சொக்கனுக்கு ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கா )என்று போட்டு இருந்தேன் ,உங்க பதிவிலேயும் இன்னிக்கு' ஜஸ்ட் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்'என்று தலைப்பு ,எப்படி )
      நன்றி

      Delete
  13. Replies
    1. இது ஜஸ்ட் மிஸ்டேக் ஆகாதது சந்தோஷமே)
      நன்றி

      Delete
  14. Replies
    1. உங்க செம கமெண்டைப் படித்து ரொம்ப நாளாச்சே ,மணிமாறன் ஜி )
      நன்றி

      Delete
  15. முதலிரண்டு ஜோக்குகளும் சட்டென்று சிரிப்பை உதிர்க்க வைத்தன! மாற்றான் ஜோக்கும் சிறப்பு! தக்காளியை தடவிக்கொண்டால் எறும்பு கடிக்காது இருக்கணுமே! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. எறும்பு கடிக்காம இருக்க எறும்பு பொடியையும் கலந்து பூசிக்க வேண்டியதுதான் )
      நன்றி

      Delete
  16. வணக்கம்
    தலைவா..

    பார்த்தவுடன் சிரிப்போ சிரிப்பு... அருமையான நகைச்சுவை... நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
    த.ம-9

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. என் நன்றியோ நன்றி ரூபன் ஜி )

      Delete
  17. மாணவர்கள் வெவரமா (விவகாரமா)தான் இருக்காங்க பாஸ்:)

    ReplyDelete
    Replies
    1. உங்க பாடு கஷ்டம்தான் )
      நன்றி

      Delete
  18. அனைத்துமே செம ஜோக்ஸ்! ஹாஹஹஹாஹ் ரகங்கள் ஜி!

    ReplyDelete
    Replies
    1. செமயான உங்க கருத்துக்கு நன்றி ஜி !

      Delete