3 October 2017

சமந்தா ரெட்டி ஞாபகமாவே இருக்காங்க :)

*கச்சேரிக்கு போனா தப்பிக்க முடியாது :)            
               ''என்  கச்சேரியை  நேரடியா கேட்கிறதை விட ,டிவி யில் கேட்பது வசதியா இருக்கா ,ஏன்  ?''
              '' வேற  சானலுக்கு உடனே போய்விட முடியுதே !''

இப்படியும் சொல்லலாமா :)            
           ''நானே கால்நடை டாக்டர் ....நானென்ன  மேஜர் ஆப்பரேசனுக்கா   போறேன் ?உடனே  கிளம்புங்கன்னு  ஏன் பறக்கிறே ? ''

             ''தெருவிலே  பூனை ஒண்ணு  குறுக்கே போவுது ,உங்க தொழிலுக்கு அது நல்ல சகுனம்னு  சொன்னேங்க  !''

விதவை ,வெள்ளைச் சேலை கட்டினது எல்லாம் அந்த காலம் :)
          ''நர்ஸ்  யூனிபார்ம் போட்டுக்கிட்டுத்தான் டூட்டி பார்ப்பேன்னு  ஏன்  சொல்றீங்க ?''
         '' நான் வெள்ளைச் சேலை கட்டிட்டு போனா ....பேஷண்ட்  ஒருவர், 'மறுமணம் பண்ணிக்க நான் ரெடி ,நீங்க ரெடியா 'ன்னு  கேட்கிறாரே !''

இவரோட கொள் 'கை'ப் பிடிப்பு யாருக்கு வரும் :)
          ''பிச்சைப் போடும் போது இடது கையை  பின்னாலே  வைச்சுக்கிறீங்களே ,ஏன்?''
          ''வலது கை கொடுப்பது  இடது கைக்கு தெரியக் கூடாதுன்னு நினைக்கிறவன் நான்  !''

நடிகை சமந்தா ரெட்டி ஞாபகமாவே இருக்காங்க :)
             ''காலத்திற்கேற்ற மாதிரி விளம்பரம் பண்றதாலே ,வியாபாரம் ஓஹோன்னு இருக்கா ,எப்படி ?''
              ''இன்றைய ஸ்பெசல் 'சமந்தா ரொட்டி 'ன்னு போட்டேன் ,பய புள்ளைங்க அள்ளிகிட்டு போயிட்டாங்களே!''
இந்தியா சுய காலில் நிற்பது எப்போது ?
யானைக்கும் அடி சறுக்கும் ...
அமெரிக்காவில் எட்டு லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ...
தென்னையில் தேள் கொட்டினால் பனையில் நெறி கட்டணுமே...
இங்கே ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு அமெரிக்க பொருளாதாரச் சரிவு தான் காரணம் என்றார்கள் !
உலக தாதா அமெரிக்க யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளட்டும் ...
அந்த மண் நம் தலையிலும் விழும் என்றால்... 
நாம் கடைப் பிடிப்பது சுய சார்பு பொருளாதாரக் கொள்கைதானா ?

டிஸ்கி :என் பதிவு ,புதியதும் பழையதும் கலந்த கலவைதான் *குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)

இங்கே க்ளிக் செய்தும் தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம் :)

26 comments:

  1. 2வது வோட்டும் முதல்:) கொமெண்ட்டும் என்னுடையது:).

    ReplyDelete
    Replies
    1. நன்றி ,நன்றி ....நேற்றைய 'பால்கோவா 'இன்னும் மிச்சமிருக்கு ,உங்க தோழி இன்னும் வராததால் :)

      Delete
    2. நான் மனதில நினைப்பதெல்லாம் பகவான் ஜீ க்குக் கேட்குது போல இருக்கே:) அவ்ளோ சத்தமாவா நினைக்கிறேன்.. நான் நினைச்சது:)...

      இங்கு வராவிட்டால், கோடாரி அலவாங்கு.. பொல்லெடுத்துக் கலைத்து மிரட்டுறார் எங்கே காணவில்லை என:).. ஆனா போனால்.. வந்தமைக்கு நன்றி எனச் சொல்றாரில்லையே என நினைச்சேன்ன்ன்ன்:)).. அது கேட்டிட்டுதே:)..

      Delete
    3. இந்த பயம் இருக்கணும் ,ஆனால் அஞ்சுவுக்கு இல்லாம போச்சே :)

      Delete
    4. அஞ்சு பயப்படும் ஒரே ஆள்... அது நாந்தேன்ன்ன்:).. படிச்சதும் கிழிச்சு, கில்லர்ஜியின் அந்தப் பாட்டியின் பாக்குரலுக்குள் போட்டிடுங்கோ பகவான் ஜீ:)

      Delete
    5. அஆவ் நேற்று செகண்ட் வோட் என்னுதுதான் :)

      Delete
  2. நர்ஸ் ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. பேஷண்ட் என்ன மன நோயாளியா ஜி :)

      Delete
  3. கச்சேரி... கச்சேரி... களை கட்டுதடி...!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. நீங்க கச்சேரி கேட்க வந்த மாதிரி தெரியலே ,வேறெதையோ பார்க்க வந்த மாதிரி இருக்கே :)

      Delete
  4. ரசித்தேன் அனைத்தையும் ஜி.

    ReplyDelete
    Replies
    1. எங்காத்துக்காரரும் கச்சேரிக்கு போனார்ன்னு சொல்லிக்கும் அளவுக்கு கச்சேரி நல்லா இருந்ததா :)

      Delete
  5. Replies
    1. சகுனம் பார்த்தது சரியா நண்பரே :)

      Delete
  6. Replies
    1. மாசமா இருக்கும்போது கூட நர்ஸ் வெள்ளைச் சேலை கட்டிக்க விடமாட்டானுங்க போலிருக்கே அய்யா :)

      Delete
  7. கச்சேரியும், நர்சும் சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. அந்த நர்ஸ் இவருக்கு கச்சேரி செய்திருக்க வேண்டாமா :)

      Delete
  8. ரசித்தோம் ஜி அனைத்தையும்...

    ReplyDelete
    Replies
    1. மாட்டு டாக்டருக்கு மாடு போனால்தான் நல்ல சகுனமோ :)

      Delete
  9. கச்சேரி கேட்க நல்ல வசதி டிவி
    சகுனம் தொழில் சம்பந்தப்பட்டதா
    சமந்தா ரெட்டி உங்கள் பதிவில் அடிக்கடி வருகிறார்
    /நாம் கடைப் பிடிப்பது சுய சார்பு பொருளாதாரக் கொள்கைதானா ?/ஜெயிட்லியிடம் கேளுங்கள்

    ReplyDelete
    Replies
    1. டிவி வந்த பின்னாடி கச்சேரி கூட குறைந்து போச்சே :)
      பார்க்கிறவர்கள் ,தொழிலிலும் பார்க்கத் தானே செய்கிறார்கள் :)
      கொஞ்ச நாளில் கல்யாணம் போகப் போகிறார் ,அதுவரை வருவார் :)
      யஸ்வந்த் சின்ஹா கேட்ட கேள்விக்கே விழி பிதுங்கி நிற்கிறாரே )

      Delete
  10. Replies
    1. பதினாறும் நிறைந்த பதிவை ரசிக்க முடிந்ததா :)

      Delete
  11. அட..இப்படியும் ரொட்டியா

    ReplyDelete
    Replies
    1. பார்த்தாலே கடிச்சு திங்கணும் போலிருக்கும் :)

      Delete