21 October 2017

மனைவியின் சக்தி வாய்ந்த ஆயுதம் :)

*அற்பனுக்கு வாழ்வு வந்தா :)
             ''பரிமளா ரொம்பத்தான் பந்தா காட்டுறாளா,எப்படி ?''
             ''தலையாணி உறையைக் கூட அயர்ன் பண்ணக் கொடுக்கிறாளே !''

இரண்டு மனைவிகளுக்கும் ஒரே பெயரா :)    
             ''மனைவி ஞாபகார்த்தமா  ஷாஜஹான் ,தாஜ் மகாலைக் கட்டி இருக்கார் , நீங்க என்ன செய்வீங்க ?''
              ''உன் பெயருள்ள இன்னொருத்தியைக் கட்டிக்குவேன் !''

தோசைன்னா ரொம்ப ஆசைதான் :)
           "இரண்டு தோசைக் கல்லை ஏன் வாங்குறே ?"
          "தோசை ரெடிஆகிற வேகத்தைவிட,நீங்க  அதை உள்ளே தள்ளுற வேகம் அதிகமா இருக்கே !"

தாலி கட்டுற நேரத்தில் இப்படி ஒரு சோதனையா :)
            ''ஐயரைப் பார்த்ததும் , மேடையில் இருந்த மாப்பிள்ளை தலைதெறிக்க  ஒடுறாரே ,ஏன் ?''
            ''ஏற்கனவே ஐயரோட  பொண்ணைத்தான்  கல்யாணம் கட்டிகிட்டு  இருந்தாராமே  !''

பெயரை  மாற்றினால் நல்லது :)
             ''ரேஷன்  கடைக்கு வந்து  ,எதுக்கு சாக்பீஸ் இருக்கான்னு  கேக்குறீங்க ?''
             ''நான் வாங்கிட்டு போன அரிசியில் புழுக்கள் நிறைய இருக்கே ...போர்டிலே , புழுங்கலரிசின்னு  எழுதி இருக்கிறதை 'புழுக்களரிசி 'ன்னு மாற்றலாம்னு தான் !''

ஆனாலும் இம்புட்டு வாய் ஆகாது :)
          '' காஸ் சிலிண்டர்  போடுகிறவரோட  பெண்டாட்டிக்கு வாய் கொஞ்சம் நீளம்தான்னு ஏன் சொல்றே ?''
         ''பலபேர் வீட்டிலே அடுப்பு எரிய என் வீட்டுக்காரர்தான் காரணம்னு சொல்றாளே ''!

இப்படி பதில் சொன்னால் வாத்தியார் என்ன செய்வார் :)
              ''சார் ,என் பிராக்டிகல் நோட்டைக் காணாம் ..உங்க கிட்டே இருக்கா ?''
            ''பார்க்கிறேன் ..உன் பெயர் என்ன ?''
             ''அதிலேயே எழுதி இருக்கும் !''

மனைவியின் சக்தி வாய்ந்த ஆயுதம் :)
            ''என்னங்க ,ஆயுத பூஜையில் வைக்க ஆயுதம் கொண்டு வரச் சொல்லிட்டு ,கையிலே சின்ன பாட்டிலை எதுக்கு கொடுக்கிறீங்க ?''
             ''கண்ணீரைப் பிடிக்கத்தான் ...அதைத்தானே நீ ஆயுதமா பயன்படுத்தி காரியம் சாதிச்சுக்கிறே!''
டிஸ்கி 1 :என் பதிவு ,புதியதும் பழையதும் கலந்த கலவைதான் *குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)
டிஸ்கி 2 :என்  சக பதிவர்களின் பதிவுகளுக்கு , begumnajoo  vinavenkatesh  kovaiseenu போன்ற பெயர்களில் தமிழ்மண நெகடிவ் வாக்கு போட்டுக் கொண்டிருக்கும் அன்பு நண்பரை ..இந்த பதிவுக்கும் தன்னிடம் வைத்திருக்கும் எழுபது போலி ID மூலம் எழுபது நெகடிவ்வாக்குகள் போட்டு, தன் அரிப்பைத் தீர்த்துக் கொள்ள அன்புடன் அழைக்கிறேன் :) 

No comments:

Post a Comment