8 October 2017

*இவர் ஆபீஸ் கணக்கில் மட்டுமே வீக் :)

           '' குழந்தைகளை  மட்டும் சரியா பெத்துக்கத் தெரியுது ,ஒரு சின்னக் கூட்டல் கணக்கை சரியாய் செய்யத் தெரியாதான்னு ,மேனேஜரிடம் திட்டு வாங்கிறாரே...அந்த கேஷியருக்கு எத்தனைக் குழந்தை ?'' 
               ''ஐந்து வருசத்தில் ஆறு குழந்தைகளாம்!'' 

கடன் வெட்கமறியாது :)
        ''உங்களை யாருன்னே எனக்கு தெரியாது ,என்கிட்டே வந்து கடன் கேட்கிறீங்களே ,ஏன் ?'' 

        ''தெரிஞ்சவங்க ...கடன் நட்பை முறிக்கும்னு தர மாட்டேங்கிறாங்களே !''

கடகம்னா நண்டு, தெரியும்தானே :)
             '' வாழ்க்கைக் 'கடலில் 'நீந்தி விளையாடுவீர்கள் என்று மணமக்களுக்கு ஜோதிடர் சொன்ன வாழ்த்து  பலிக்கும்னு எப்படி நம்புறே ?''
            ''பொண்ணு 'மீன 'ராசி ,பையன் 'கடக'ராசியாச்சே !''

#அடுத்தவங்க  டைரியைப் படிப்பதில்  'கிக் ' உண்டா : )
             ''அடுத்து நீங்க  எடுக்க  போற  படத்தின்  பெயர் 'ஒரு பைத்தியத்தின் டைரி 'யாமே ? '
           ''ஆமாம் ,அதுக்கு நீங்கதான் உங்க டைரியை கொடுத்து உதவணும் ,ப்ளீஸ்!''   
    #முன்னொரு காலத்தில் ,இதைப் பிரசுரித்த ஜூனியர் விகடனுக்கு நன்றி ! 
 இணையத்தில் பெண்கள் மேய்வதும் ,ஆண்கள் ....:)
இந்திய ஜனத் தொகையோ 120கோடி ,அதில்  இணையத்தை பயன்படுத்துவோர் 15கோடி ,அதில் ஆண்களின் எண்ணிக்கை 9கோடி ,
6கோடி பெண்களில் ...
பதினெட்டில் இருந்து முப்பத்தைந்து வயதுள்ள ஆயிரம் பெண்களை சர்வே செய்ததில் அவர்கள் இணையத்தில் பார்ப்பது ...
உடை ,உணவு ,நகைகள் சம்பந்தமாகத் தானாம் !இது கூகுள் சர்வே ... ஆண்கள் எதைப் பார்க்கிறார்கள் என்பதையும் சர்வே செய்தால் ......?அவ்வ்வ்வ் ...
கூகுள் ஆண்டவர் ஆண்களை காப்பாற்றி விட்டார் என்றே படுகிறது !

 டிஸ்கி :என் பதிவு ,புதியதும் பழையதும் கலந்த கலவைதான் *குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)

26 comments:

  1. கடன் கதை உண்ணமைதான்:)..

    நண்டு.. மீன்... ஹா ஹா ஹா சூப்பர் பொருத்தம்..

    ///உடை ,உணவு ,நகைகள் // இது உண்மைதான்.. இத்தோடு மேக்கப், வீட்டு, கிச்சின் உபகரணங்கள் சேர்த்துக்கோங்க:)) எனக்குப் பொருந்தும்.

    ReplyDelete
    Replies
    1. கடன் திருப்பித் தராவிட்டால் எலும்பை முறிக்கும்னு யாரோ சொன்னதால் இப்படி கடன் கேட்க ஆரம்பித்து விட்டாரோ :)

      Delete
  2. ஐந்தில் ஆறு ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. கூட்டி கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வருகிறதா ஜி :)

      Delete
  3. நானும் கடகம். கேஷியர் பெற்றதில் ஒன்று இரட்டை போல! அப்போ ஜுவியில் வெளியானதற்கு இப்பவும் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. 5><12=60 மாதத்தில் ஆறு பெற்றாளே போதுமே டுவின்ஸ் எதுக்கு ஜி :)

      Delete
  4. Replies
    1. டைரி நல்லாயிருக்கா :)

      Delete
  5. 5 வருடத்தில் 6 என்றால் ஒரு பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கு!!

    அப்போது ஜூவியில் பிரசுரமானதுக்கு வாழ்த்துகள் ஜி!!!

    ReplyDelete
    Replies
    1. ஜூவியில் வந்தது என்றால் நம்ப முடியுதா ,ஏனென்றால் அதில் ஜோக் வருவது சுத்தமாக நின்றுவிட்டது :)

      Delete
  6. Replies
    1. உங்க 007யை நானும் ரசித்தேன் :)

      Delete
  7. இதைப் பிரசுரித்த ஜூனியர் விகடனுக்கு நன்றி//

    மகிழ்ச்சி...மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. பிரசுரத்தைப் பார்த்ததும் நானும் மகிழ்ந்தது ஒரு காலம் :)

      Delete
  8. நகைச்சுவைகளை இரசித்தேன் சகோதரா....
    தமிழ் மணம் - 10
    https://kovaikkothai.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. மீனமும் கடகமும் பொருத்தமான ராசிகள் தானே :)

      Delete
  9. கடக ராசி மிக நன்று

    ReplyDelete
    Replies
    1. மீனம் என்ன பாவம் செய்தது ஜி :)

      Delete
  10. நம்ம கையில என்னங்க சாமி இருக்கு... எல்லாம் ஆண்டவன் கொடுக்கிறான்... நாம வேண்டான்னு சொல்லலாங்களா...?!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. ஒரு இரண்டு வருஷம் வெளிநாட்டுக்கு போங்க ,எந்த ஆண்டவன் கொடுக்கிறான்னு தெரிந்து விடும் :)

      Delete
  11. kaliyugan9@gmail.com ?
    athiramiya
    dindiguldhanabalan
    vetha_Elangathilakam
    karanthaikj@gmail.com
    bagawanjee
    thulasidharan61
    sri.esi89@gmail.com
    jessie ?
    manavaijamestamilpandit@gmail.com
    asokan0510@gmail.com
    tthamizhelango
    KILLERGEE

    ReplyDelete
    Replies
    1. உங்க கேள்விக்கு சம்பந்தப் பட்டவர்களே பதில் சொல்வார்கள் :(

      Delete
  12. Replies
    1. இதுகூட எனக்கு லக்கி நம்பர்தான் அய்யா :)

      Delete
  13. ஹா.... ஹா....
    ரசித்தேன் ஜி....

    ReplyDelete
    Replies
    1. ஐந்திலே ஆறு சரிதானே ஜி :)

      Delete