4 October 2017

நிர்வாணமாய் நடிப்பதும் சுதந்திரமா :)

*படித்ததில் இடித்தது :)
                ''நடிகையின் பேட்டியைப் படித்து விட்டு சிரிக்கிறீங்களே ,ஏன் ?''
                ''சுதந்திரம் எனது பிறப்புரிமைன்னு  அன்றுசொன்னார் பாலகங்காதர திலகர் ....பிறந்த மேனியாய் நடிப்பது என் சுதந்திரம்னு  இன்று சொல்லியிருக்கே இந்த நடிகை !''
காலோட  அருமை தெரியுதா :)      
            ''பம்பின்  கால் பம்பறியும்னு ஏண்டா எழுதியிருக்கே ?''
            ''நீங்கதானே சொன்னீங்க ,பாம்புக்கு கால் கிடையாது ,பாம்பின் கால் பாம்பறியும்னு !''

டாக்டர்களுக்கு தன்னடக்கம் கூடாது :)
          ''என் பிள்ளை உயிரைக் காப்பாத்தின நீங்க, தெய்வம் டாக்டர் !''
         ''அதுக்காக ஃபீஸை கோவில் உண்டியலில் போட்டுறாதீங்க!''

திருடனுக்கும் இது தெரிஞ்சுப் போச்சா :)               
             ''என்னங்க ,நேற்று நம்ம வீட்டுக்கு வந்த திருடன் ,உங்களை 'நீயெல்லாம் ஆம்பளை'யான்னு கேட்டானே ...ஏன் ?''
           '' பீரோ சாவி  என் கிட்டே இருக்கு ,லாக்கர் சாவி உன்கிட்டே இருக்குங்கிறதைச் சொன்னேன் !''

அன்னிய நேரடி முதலீடு நாட்டுக்கு ...வீட்டுக்கு :)  
         ''உங்க அண்ணன் கல்யாணம் ஆனவுடனே சூப்பர் மார்க்கெட் ஆரம்பிச்சுட்டானே ,எப்படி ?
         ''எல்லாம் அண்ணியின் நேரடி முதலீடு தான் !''

இசை கேட்டால் புவி அசைந்தாடுமா ):
மன்னர் அக்பர் அவையில் இசைக் கலைஞராக இருந்த தான்சேன்
தீபக் ராகத்தை  பாடியபோது ...
மெழுகுவர்த்திகள் தானாக எரிந்தனவாம் ...
மேக் மல்ஹார் ராகத்தைப் பாடி மழையை வரவழைத்தாராம்...
நம்ம சிவாஜியும் தான்சேன் வேடமணிந்து பாடி ...
கோமா நிலையில் இருந்த ராணியை உயிர்த்தெழ வைக்கிறார் ...
இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்ற அந்த பாடல் அமைந்த  ராகத்தின் பெயர் ...
'எமன் 'கல்யாணியாம்,நம்ப முடிகிறதா ?  

டிஸ்கி :என் பதிவு ,புதியதும் பழையதும் கலந்த கலவைதான் *குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)

இங்கே க்ளிக் செய்தும் தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம் :)

22 comments:

  1. //''அதுக்காக ஃபீஸை கோவில் உண்டியலில் போட்டுறாதீங்க!''///
    haa haa ஜூப்பர்...:)

    ///திருடனுக்கும் இது தெரிஞ்சுப் போச்சா :)
    ''என்னங்க ,நேற்று நம்ம வீட்டுக்கு வந்த திருடன் ,உங்களை 'நீயெல்லாம் ஆம்பளை'யான்னு கேட்டானே ...ஏன் ?''///

    ஹா ஹா ஹா...

    ReplyDelete
    Replies
    1. டாக்டர் முன்னெச்சரிக்கையா இருக்காரே :)

      இதிலே உள்குத்து ஏதுமில்லையே :)

      Delete
  2. Replies
    1. 'எமன் 'கல்யாணி ராகம் தானே :)

      Delete
  3. இரண்டாவது ஜோக்கில் "நீங்கதானே சொன்னீங்க,, பாம்புக்கு கால் கிடையாதுன்னு" என்று சொல்லியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ! டாக்டர் - உண்டியல் ஜோக்கையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்படி சொல்வது பழைய ஜோக்காச்சே ஜி :)

      Delete
  4. ‘அதை அடைந்தே தீருவேன்...’ ஆப் கா நாம் கியா ஹை ?

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. மேரே நாம் வீரப்பா ,அடைந்தால் மகாதேவி ,இல்லையென்றால் மரணதேவி :)

      Delete
  5. பாம்புக்கு கால் கிடையாதுங்குறதுக்காக எழுதுறதுலகூடவா கால் இருக்காது!!!

    பயபுள்ள எப்படிலாம் சமாளிக்குது!!

    ReplyDelete
    Replies
    1. கால் கிடையாது என்பதை எழுத்திலேயே சிம்பாலிக்கா சொல்றான் :)

      Delete
  6. இரசித்தேன்! த ம 10

    ReplyDelete
    Replies
    1. பாம்போட காலை ரசிக்க முடியுதா அய்யா :)

      Delete
  7. சுாந்திரத்தின் பெருமை இப்படியாகிவிட்டது..காலத்தின் கொடுமை...

    ReplyDelete
    Replies
    1. யாருக்கு வந்த சுதந்திரம் என்று தெரிகிறதா :)

      Delete
  8. நிர்வாணமாய் நடிப்பது என் சுதந்திரம் -நடிகை//

    இவர் நடித்த படங்களை ஓடவிடாமல் தடுப்பது ரசிகனின் சுதந்திரம்?!

    ReplyDelete
    Replies
    1. அந்த அளவுக்கு ரசிகனுக்கு விழிப்புணர்வு வரலையே :)

      Delete
  9. Replies
    1. 13என் லக்கி நம்பர் ,நன்றி :)

      Delete
  10. ஜோக்குகளை ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. திலகர் இன்று இருந்தால் என்ன நினைப்பார் :)

      Delete
  11. திலகர் பாவம்

    ReplyDelete
    Replies
    1. சுதந்திரம் இந்த பாடுபடும்னு யோசித்தே இருக்க மாட்டாரோ :)

      Delete