11 February 2014

மனைவிக்கு புரியும்படி சொல்வது எப்பவும் நல்லது !

''வாசல்லே எலக்ரீசியன்  வந்து 'எந்திரம் சிங்கிள் பேஸா ,திரீ பேஸான்னு 'கேட்கிறான் ...ஒண்ணுமே புரியலே ,நீ வரச் சொன்னீயா ?''
''அட நீங்கதானேங்க,ஆர்டர் செய்த குபேர 'எந்திரம்' இன்னைக்கு வந்துடும் ,வந்தவுடனே மாட்டணும்னு சொன்னீங்க !''


21 comments:

  1. Replies
    1. தையல் எந்திரம் கூட சோறு போடும் ,வெறும் தகடு ஆனால் பெயர் எந்திரமாம் இதை வாங்கி வைத்து பூஜித்தால் குபேரனாகி விடலாமாம் ..இதை நம்ப முடியுமா ஜெயகுமார் ஜி ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. குபேர எந்திரம் என்பது ஏமாற்றுதானே ,தனபாலன் ஜி ?
      நன்றி

      Delete
  3. 'எந்திரன்' எத்துனையோ பேரை குபேரனாக்கியது. அதை இந்த 'எந்திரம் ' பண்ணாதா..?

    உங்கள் ஜோக்குகள் பஞ்ச் லைனைப் போல் அழகாகவும் அழுத்தமாகவும் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆக எந்திரனோ,எந்திரமோ நுகர்வோருக்கு பலன் தராது ,தயாரித்தவர்கள் ,தயாரிப்பில் பங்கு பெற்றோர் ,இடைத்தரகர்கள் ஆகியோர்களை குபேரன் ஆக்கியது உண்மைதான் !
      பெயர் 'வெட்டிப்பேச்சு' என்றாலும் உங்கள் கருத்து பஞ்ச் லைனைப் போல் அழகாகவும் அழுத்தமாகவும் இருக்கிறது....வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

      Delete
  4. எந்திரம் வந்தவுட்டு என் இனிய எந்திரா அப்டீன்னா சம்சாரம் என்ன செய்வாங்களோ.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. அதையே கட்டிட்டு அழுங்க என்று சொல்லவைத்து ,மனைவியை பிறந்தகத்துக்கு அனுப்பும் 'நல்ல 'காரியத்தை செய்வதுதான் எந்திரம் தரும் முதல் பலனாய் இருக்குமோ ?
      நன்றி

      Delete
  5. நிறைய பேர் எந்திரம் வாங்கி பிச்சைகாரர்கள் ஆகிவிட்டார்கள்! விற்றவர்களோ பணக்காரர் ஆகிவிட்டார்கள்! எப்படியோ எந்திரம் நல்லா வேலை செய்யுது! ஹாஹா!

    ReplyDelete
    Replies
    1. நடிகர் சத்யராஜ் ஒரு படத்தில் ,தகடு தகடு என்று கிண்டல் அடிப்பார் ,அதே மாதிரி நீங்களும் எந்திர தகடை கிண்டல் அடிப்பது நியாயமா ?
      நன்றி

      Delete
  6. எந்திரன் என்றவுடன் ஒரு ஜோக் ஞாபகம் வந்தது...
    சில நாட்களுக்கு முன் நண்பர்களுடன் ஒரு பார்ட்டி முடித்து இரவு வீடு திரும்புகையில் வண்டியில் எந்திரன் படத்திலிருந்து "அரிமா அரிமா.." பாடல் ஓடியது.
    ஒரு நண்பர், "இப்பாடலுக்கு அர்த்தம் தெரியுமா?" என கேட்க
    இன்னொருவர், "அரிக்குது அம்மா...!!" என்றாரே பார்க்கலாம்...!!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ..எங்கே அரிக்குதுன்னு கேட்டு சொரிஞ்சு விட்டு இருக்கலாமே ?
      நன்றி

      Delete
  7. ஹாஹஹாஅ.....ஒருவேளை குபேரனுக்கு சிங்கிள் ஃபேஸ், 3 ஃபேஸ் அப்படினு இருக்குமோ? எந்த ஃபேஸ் வைச்சா அதிர்ஷ்டமோ?!!!!! அதுவும் எந்த ஃபேஸ் பார்த்து வைக்கணுமோ?!!!!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. அது எந்த பக்கம் பார்த்தாலும் இவர் உழைக்காம குபேரன் ஆகமுடியாது !
      நன்றி

      Delete
    2. ஐயா, இப்ப நீங்க இந்தியாவில் இல்லையா.
      நன்றி
      கோபாலன்

      Delete
    3. தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கு ?மதுரை தமிழ்நாட்டில்தானே இருக்கு ?நான் மதுரையில்தான் இருக்கிறேன் என்பதை உங்களால் நம்ப முடியலையா ?
      நன்றி

      Delete
  8. குபேரனாக எந்திரமா !எனக்கு தெரியாதே!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ,அது உழைக்காமல் சம்பாதிக்க நினைப்பவர்களுக்குத்தான் தெரியும் !
      நன்றி

      Delete
  9. அருமையான பதி ஜி! புலவரின் புலவரின் பின்னூட்டமும் அழகு! உண்மையும் கூட!

    ReplyDelete
    Replies
    1. திடீர் ரசப் பொடி மாதிரி திடீர் குபேரன் ஆவது சாத்தியம் இல்லாததுதானே ஜி ?
      நன்றி

      Delete
  10. சுடச் சுட சிரிக்க வாங்க ஜி !
    நன்றி

    ReplyDelete