5 August 2014

பொண்ணு பிடிக்கலைன்னு இப்பவா சொல்றது ?

------------------------------------------------------------------------------------------------------------
ஒண்ணு மட்டும் கொடுத்தா போதுமா ?இன்னொண்ணு ?

                      ''நீங்க தொழில்  தொடங்க கொடுத்த  பெட்டிசனுக்கு பதிலே இல்லையேன்னு மந்திரிகிட்டே  கேட்டதுக்கு என்ன  சொன்னார் ?''
                      ''பெட்டிசன் வந்திருச்சு ,பெட்டி வரலேயேன்னு கேக்கிறார் !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...



தின 'சிரி ' ஜோக்! 

பொண்ணு பிடிக்கலைன்னு இப்பவா சொல்றது ?

''விடிஞ்சா உங்களுக்கு அறுபதாம் கல்யாணம் ,ஏன் 

சோகமாவே இருக்கீங்க ?''

''பொண்ணு பிடிச்சிருக்கான்னு  இப்பக்கூட
  
என்கிட்டே யாரும் கேட்க மாட்டேங்கிறாங்களே !''


'சிரி'கவிதை!

ஒட்டாக்காதல் என்பது இதுதானா ?

தழுவவந்த பனித்துளியை 
நழுவவிட்டது தாமரைமுகம் 
தாமரை இலைத் துளி !

24 comments:

  1. வணக்கம்
    நகைச்சுவையை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

      Delete
  2. பெட்டி பெட்டி.... :)

    பெண் பிடிச்சுருக்கான்னு இன்னுமா கேட்கலை! பாவம்!

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. பெட்டியை சன்கிட்டே கொடுக்கச் சொல்வாரோ ?

      வேற பெண்ணைப் பாருங்க என்று சொல்லி விட்டால் வம்பாயிடுமே ?
      நன்றி !

      Delete
  3. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

      Delete
  4. அந்த ஒண்ணுதான் இதுன்னு அரசியல் வாதியை ஏமாத்த முடியுமா. இன்னொன்னும் கொடுத்தாதான் காரியம் நடக்கும்

    ReplyDelete
    Replies
    1. பிழைக்கத் தெரியாத ஆளாய் இருக்காரே ,முதலில் பெட்டியைக் கொடுத்து இருந்தால் இந்நேரம் லைசென்ஸ் கையில் வந்து இருக்குமே ?
      நன்றி

      Delete
  5. அந்த மந்திரி காரியத்துல கண்ணா இல்ல இருக்கார்.

    80வது திருமணத்துல கூட யாரும் கேட்க மாட்டாங்க.

    அந்த கவிதை மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. மந்திரி ஆனதே அதற்காக தானே ?

      கேட்டும் பிரயோசனம் இல்லே !

      பனிதுளி எப்போதும் அழகுதானே ?
      நன்றி

      Delete
  6. 1 ஹாஅஹாஅஹா

    2 கேட்டா என்ன செய்வாராம் அவர்?!

    சிரி கவிதை சூப்பர் ஜி!

    ReplyDelete
    Replies
    1. அதானே ,அறுபதாம் கல்யாண நாள்லே விவாகரத்தா பண்ணப் போறார் ?
      நன்றி

      Delete
  7. இரண்டு ஜோக்ஸும் அருமை. மூன்றாவது கவிதை டாப்.

    ReplyDelete
  8. நவை! இவை!சுவை!

    ReplyDelete
    Replies
    1. வை வை வை என்று நீங்கள் சொல்வதால் தினசரி வைத்து விடுகிறேன் ஹாஸ்ய விருந்து !
      நன்றி

      Delete
  9. பெட்டியை Son கொண்டு போனாரோ ?

    ஹும், அங்கேயும் இப்படித்தானா ?

    கவிதை ஸூப்பர் பகவான்ஜி.

    ReplyDelete
    Replies
    1. அங்கேயும் இல்லே ,எங்கேயும் இப்படித்தான் !
      நன்றி

      Delete
  10. சிறந்த நகைச்சுவை விருந்து
    தொடருங்கள்

    ReplyDelete
  11. அடடா பெட்டி இல்லாம பெட்டிசன் நகராதே! இந்த வருத்தம் இப்போ தேவையா? ஹாஹாஹா!

    ReplyDelete
    Replies
    1. புதுசா தொழிலில் இறங்குவதால் அனுபவம் பத்தலே!
      நன்றி

      Delete
  12. எப்போ பொண்ணு பிடிச்சிருக்குன்னு கேட்கும்போதுதானே...பிடிக்கலைன்னு சொல்ல முடியும்.

    ReplyDelete
    Replies
    1. அந்த சந்தர்ப்பமே கொடுக்க மாட்டேங்கிறாங்களே ?
      நன்றி

      Delete