7 August 2014

பெயர்தான் ஜூலிபுளோரா ,குத்தினால் வலி ?

              ''ஜூலிபுளோரா குத்தின இடத்தில் இருந்து ரத்தம் கொட்டுதுன்னு சொல்றீங்களே ,அது யார் உங்க மனைவியா ?''
             ''அட நீங்க வேற ,சீமைக் கருவேல மரத்தின் விஞ்ஞான பெயர்தான் அது !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்! 

வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி தரும் போராட்டம் !

''ரயில் போறவரைக்கும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் ,இப்போ ரயிலுங்க வரிசையா நிற்குதே ,ஏன் ?''
''கேட் கீப்பர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி  ரயில் நிறுத்தும் போராட்டம் பண்றாங்களாம் !''


சிரி'கவிதை ? 

தாய் மனம் பூவினும் மெல்லியதா ?

குரங்கு கூட ஈன்ற பின்னும்  தன் குட்டியை 
தன்னுடனே சுமந்துக் கொண்டே திரிகிறது ...
இதைப் பார்த்தபின்பும் பிறந்த சிசுவை குப்பையில் வீச 
சில  'நாய் 'மார்களுக்கு எப்படி  மனசு வருகிறதோ ?

25 comments:

  1. ஆம்பிளை அடி வாங்குனாலே, அது மணிவிக்கிட்டேயிருந்து தானா?/

    ஆஹா, சூப்பர் போராட்டம்

    கடைசி - சாட்டை அடி

    ReplyDelete
    Replies
    1. தாலி கட்டியவளுக்கு தரப் பட்டிருக்கும் உரிமையாச்சே அது ?

      போராட்டம் வெற்றிதான் !

      கொடுமைக் காரங்களுக்கு இந்த சாட்டை அடி போதாதே !
      நன்றி

      Delete
  2. நாய்மார்கள்
    உண்மைதான் நண்பரே
    தம 1

    ReplyDelete
    Replies
    1. கள்ள உறவில் உண்டானது என்றாலும் ,பத்து மாதம் சுமந்த பிள்ளையை இப்படி விட்டுச் செல்ல எப்படி மனம் வருமோ என்று புரியவில்லை !
      நன்றி

      Delete
  3. ஆ.... சீமைக் கருவேலம்! இன்ஸ்பிரேஷன் ஃபிரம் எ.பி? ஹா...ஹா..ஹா..

    ஹா..ஹா...ஹா.... ஆனால் பாவம் ரயில் பயணிகள்!

    'நாய்மார்'கள் - சரியான பதம்.

    ReplyDelete
    Replies
    1. இந்த மொக்கைப் போட உதவியது ,நேற்றைய உங்கள் பதிவுதான் ..ஜூலி என்றதும் இளமை ஊஞ்சல் ஆட ஆரம்பித்து விடுகிறதே !

      போராட்டம் என்றால் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் போகுமா ?

      நாயை கூட சொல்லக் கூடாதோ
      ?
      இரட்டிப்பு நன்றி !!

      Delete
  4. ஆ............இவ்வளவு விஞ்ஞான வில்லங்கம் இருக்கா..........

    ReplyDelete
    Replies
    1. வில்லங்கம் மட்டுமில்லே ,விளக்கமும் இருக்கே !
      நன்றி

      Delete
  5. நாய் மார்களுக்கு எப்படி மனசு வருகிறதோ?
    சீரியசான விஷயம் தான் !
    நகைச்சுவைகளைப் படித்து ரசித்துச் சிரித்தேன் பகவான்ஜி!
    படைப்பிற்கும் பகிர்விற்கும் நன்றிகள்!

    ReplyDelete
    Replies
    1. பிள்ளை இல்லையென்று பலபேர் தவிக்க ,பச்சை சிசுவை தவிக்க விடுவது என்ன நியாயமோ ?
      நன்றி

      Delete
  6. ஜூலி புளுவுரா,,, என்னோட கொழுந்தியாள் பேரு மாதிரியே இருக்கே....

    போறபோக்கை பார்த்தா விமானிகளும் நடுவானத்துலேயே ஸ்ட்ரைக் பண்ணுவாங்களோ...

    நாய் சரியான சவுக்கடி.

    ReplyDelete
    Replies
    1. பார்த்தீங்களா ,ஜூலி என்றதும் உங்களுக்கும் ஜாலி மூடு வந்து விடுதே !

      உயிருக்கு உத்தரவாதம் இருந்தால் விமானிகளும் ஸ்ட்ரைக் செய்வார்கள் !

      சவுக்கடி கூட உரைக்காது போலிருக்கே !
      நன்றி

      Delete
  7. //இப்போ ரயிலுங்க வரிசையா நிற்குதே ,ஏன் ?''//

    இந்த ஜோக்கைப் படிச்சா கேட் கீப்பர்களும் போராட ஆரம்பிச்சுடுவாங்க.

    ReplyDelete
    Replies
    1. போராட்டம் இந்த காமெடி பீஸ் சொல்லியா வரப் போவுது ?
      நன்றி

      Delete
  8. //ஜூலிபுளோரா குத்தின இடத்தில் இருந்து ரத்தம் கொட்டுது//

    மனைவி செல்லமா குத்தினா என்ன கொட்டும்?

    ReplyDelete
  9. //சில 'நாய் 'மார்களுக்கு எப்படி மனசு வருகிறதோ ?//

    அவங்க நாய்மார்கள் மட்டுமல்ல; ‘வெறி நாய்’மார்கள்!

    ReplyDelete
    Replies
    1. தன் சுகம் மட்டுமே முக்கியம் என நினைக்கும் வெறிநாய்மார்கள் தான் !

      Delete
  10. நல்லவேளை எனக்கு சீமைக் கருவேல மரத்தின் ஆங்கில தாவரப் பெயர் தெரியாது. அதனால் உங்கள் ஜோக்கை நன்கு ரசித்தேன்!
    த.ம.5

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இப்போதான் தெரிய வந்ததால் இதை எழுத முடிந்தது !
      நன்றி

      Delete
  11. வணக்கம்
    இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நாட்டுக் கருவேலமரம் நாக்குக்கு நல்லது ,சீமைக் கருவேல மரம் பூமிக்கும் சீக்கு\என்றும் சொல்கிறார்கள் ,ரூபன் ஜி !
      நன்றி

      Delete
  12. முதல் ஜோக் ஹாஹாஹா...
    ரயில் எல்லாம் நின்னுச்சுனா....யம்மாடியோவ்....

    சிரி கவிதை??? ரொம்ப அருமை! மனதை நெகிழ்திவிட்டது ஜி!! அழு கவிதை...ஜி அது...

    ReplyDelete
    Replies
    1. பத்து ரயில் நிற்கிறதைப் பார்த்தா பிரமாண்டமாத்தான் தான் இருக்கும் ,அதுவும் நாலு டிராக்கில் நின்றால் ...?டைரக்டர் சங்கர் ஜி படமே எடுத்து விடுவாரே !
      நன்றி

      Delete