8 August 2014

பூஜை நேரத்தில் ந டி கை பெயர் சொல்லக் கூச்சமா ?

'' புதுமுக கவர்ச்சி நடிகை தன்னோடபேரை மாற்றிக்கணும்னு அர்ச்சகர்கள் போராட்டம் பண்றாங்களே ,ஏன் ?''
''சமர்ப்பியாமிங்கிறது அவங்களோட பெயராச்சே !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்! 

தலைவர் 'வண்டு முருகனின் 'வாரிசா ?

''வரலாறு தெரியாமே தலைவர் உளறிக் கொட்டி மதப் பிரச்சினையை உண்டாக்கி விடுவார் போலிருக்கா  ,எப்படி ?''
'' பாண்டவர்களின் பாரம்பரியத்தில் வந்தவரை  போப்''பாண்டவர் ' ஆக நியமனம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்னு அறிக்கை வெளியிட்டு இருக்காரே !''


'சிரி'கவிதை! 

வேகம் விவேகமல்ல ,அதுக்காக இப்படியா ?

முயலையும்  வெல்லலாம் ஆமை ...
ஆனால் ...அரசின் கோப்பிடம் தோற்றுப் போகும் !

37 comments:

  1. நடிகை தன்னை சமர்ப்பணம் செய்திட்டேன்கிறதை சிம்பாலிக்கா சொல்றாரு...
    போப்ஆண்டவர்- பாண்டவர் நல்லாத்தானே இருக்கு உவமை,
    எந்த அரசின் ?

    ReplyDelete
    Replies
    1. ஓ...நீங்க சொல்ற கோணத்தில் நான் யோசிக்கவே இல்லையே !
      அவருக்கு நம்ம பாண்டவர்களைப் பற்றி தெரிந்து இருக்குமாங்கிறது சந்தேகம்தான் !
      சிகப்பு நாடா முறை உள்ள அனைத்து அரசுகளும்தான் !
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    தலைவா.
    பலதடவை இரசித்துப்படித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. சமர்ப்பியாமி உங்களுக்கு பிடித்ததா ,ரூபன் ஜி ?
      நன்றி

      Delete
  3. பாண்டவர்
    ரசித்தேன்
    தம 1

    ReplyDelete
    Replies
    1. தெரியாமல் செய்த தவறுக்கு அந்த ஆண்டவர் என்னை மன்னிப்பாராக !
      நன்றி

      Delete
  4. கவர்ச்சி நடிகையின் பேரைத்தானே மாத்தச் சொல்றாங்க. கவர்ச்சியைக் குறைக்கச் சொல்லிப் போறாடலியே!?

    ReplyDelete
    Replies
    1. பகவான்ஜீ தான் குண்டக்க மண்டக்க யோசிக்கிறார்னா, நீங்களுமா?

      இருந்தாலும் உங்க கேள்வி நியாயமானது தான்.

      Delete
    2. அது என்ன சொக்கன்ஜி தலையில கொட்டிப்புட்டு வலிக்குதானு ?கேட்கிறமாதிரி.....

      Delete
    3. நாங்க தான் எப்பவுமே, குழந்தையையும் கிள்ளிவிட்டுட்டு, தொட்டிலையும் ஆட்டுரவங்களாச்சே!!!

      Delete
    4. செல்லமாத்தான் கொட்டுனீங்க. வலிக்கல சொக்கன்.

      //போறாடலியே//...’ர’ வுக்குப் பதிலா ‘ற’ போட்டுட்டேன். இதுக்கும் ஒரு குட்டு வைத்திருக்கலாமே?!

      Delete
    5. என்ன உலகளந்த நம்பி ? உங்களை ''நம்பி''னேன் பின் வாங்கிட்டீங்களே...

      Delete
    6. நம்பி, இனி உங்கள் ‘நம்பி’க்கைக்குப் பாத்திரமானவனாக நடந்துகொள்வான் கில்லர்ஜி.

      Delete
    7. நம்பி ஜி ,அந்த பெயரை உச்சரிக்கும் போதே, கனவுக் கன்னி கண்ணில் தெரிவதால்தானே இந்த போராட்டமே ?
      நன்றி !

      Delete
    8. சொக்கன் ஜி ,இந்த வாரம் , சமஸ்கிருத வாரம் என்று மத்திய அரசு அறிவித்து மக்களை சீண்டிப் பார்த்து கொண்டிருக்கிறது .சமஸ்கிருதம் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது இந்த சமர்ப்பியாமிதான் ,அதிலும் உள்ள ஒற்றுமையை சொன்ன கில்லர்ஜியின் கருத்து என்னை அசரவைத்து விட்டது !

      Delete
    9. #நாங்க தான் எப்பவுமே, குழந்தையையும் கிள்ளிவிட்டுட்டு, தொட்டிலையும் ஆட்டுரவங்களாச்சே!!!#
      இந்த விளையாட்டுக்கு நான் வரலே ,சொக்கன் ஜி !

      Delete
    10. நம்பி ஜி ,சொக்கன் ஜி ,கில்லர்ஜி ..நல்லாயிருக்கே உங்க பட்டி மன்றம் !
      நன்றி

      Delete
    11. சரியாக சொன்னீர்கள் நடுவர் பகவான்ஜி அவர்களே...

      Delete
    12. முதற்கட்டமாக எல்லோரும் கருத்தை கூறிவிட்டீர்கள் ,தொகுத்து கூறுங்கள் .நான் ஒரு தீர்ப்புக்கு வர ஏதுவாக இருக்கும் !
      நன்றி

      Delete
  5. இருண்டு ஜோக்கும் ஹா ஹா ஹா...ஹா... மூன்றாவது நச்!

    ReplyDelete
    Replies
    1. நடிகை என்றதும் இருண்டு விட்டது போலிருக்கே !
      நன்றி

      Delete
  6. ஐயோ... ஐயோ... இருண்டு ஜோக் இல்ல... இரண்டு ஜோக்ஸும்!

    ReplyDelete
    Replies
    1. மூன்றாவது நச் என்றதும் ,அது இரண்டு என்று எங்களுக்கு புரிஞ்சுபோச்சே !
      நன்றி

      Delete
  7. அவுங்க தங்களையே கலைக்கு சமர்ப்பணம் பண்ணியிருப்பதாலே, அந்த பேர் சரியாத்தானே இருக்கு?

    போப் ஆண்டவரை பாண்டவர்களோடு ஒற்றுமை படுத்தியிருக்கீங்களே, இதெல்லாம் டூடூடூ மச்சா இல்ல?

    அரசு அலுவலகத்தின் அவலத்தை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. கலைக்கு என்றால் கலையுலக ................என்றுதானே அர்த்தம் ?

      நீங்கள் இருப்பது வெள்ளைக்காரன் நாட்டில் என்பதால் பயப்படுற மாதிரி இருக்கே !

      கையூட்டு கொடுத்துப் பாருங்கள் ,அந்த அவலம் எப்படி யானை வாய் கவளம் போல் வேகமாய் காரியம் ஆகிறதேன்று !
      நன்றி

      Delete
  8. ஜோக்ஸ் ரெண்டும் சூப்பர்! கவிதை உண்மை! நன்றி!

    ReplyDelete
  9. ஜோக்ஸ் ரெண்டும் சூப்பர்! கவிதை உண்மை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ரெண்டும் சூப்பர் என்பதால் இரண்டாவது முறையா ?
      நன்றி

      Delete
  10. ஹாஹாஹா முதல் ஜோக் ரொம்பவே சூப்பர் ஜி!

    சிரி கவிதை சத்தியமே!....

    ReplyDelete
    Replies
    1. அந்த நடிகை நம்ம குக் கிராமத்தில் பிறந்த வளர்ந்த பெண்தான் ,இப்படி கிக்கா பெயர் இருந்தால் தான் ,வடக்கே இருந்து வந்த நடிகை என்று ,நம்ம பயபுள்ளைங்க ஜொள்ளு விடுவாங்கன்னு தெரிஞ்சே இந்த பெயரை வைச்சுக்கிட்டாங்க போலிருக்கு !
      நன்றி

      Delete
  11. நன்றாகச் சிந்திக்க வைக்கிறியள்
    தொடருங்கள்

    பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
    http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. சிந்திக்க வைக்கிறியள் என்று சாந்தி சிரிக்க வச்சுட்டேள்!

      இந்த சவாலுக்கு நான் வரலே !
      நன்றி

      Delete
    2. பகவான்ஜி சிரிச்சது சந்தியா ? சாந்தியா ?

      Delete
    3. வேறொண்ணுமில்லை,கவர்ச்சி நடிகையைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தோமா ,,அதான் சந்திகூட (டிஸ்கோ )சாந்தி ஆகி விட்டது !
      நன்றி

      Delete
  12. பாண்டவர்களின் பாரம்பரியத்தில் வந்தவரை போப்''பாண்டவர் ' ........haa...haa

    ReplyDelete
    Replies
    1. தமிழ் இலக்கணப்படி ஆண்டவர் போப்பாண்டவர் ஆனதில் தவறில்லையே ?
      நன்றி

      Delete