உண்மையில் நடந்த சம்பவம் இது ...
குற்றால அருவியில் குளிப்பது எல்லோருக்கும் சுகமான அனுபவம்தான் ...
ஆனால் அதுவே ஒரு சிலருக்கு துக்கத்தை தந்து விடுகிறது ...
வாலிபக் கோளாறால் சில வாலிபர்கள் ...
மலைமேலே வெகுதூரம் ஏறிச் சென்று
நீர்த் தடாகத்தில் குளித்துக் கொண்டிருக்கையில் ...
காட்டாறு வெள்ளம் வந்து ஒருவனை அடித்துக் கொண்டு சென்று விட்டதாம் ...
நண்பர்கள் பல மணி நேரம் தேடியும் அவனைக்
கண்டுபிடிக்க முடியவில்லையாம் ...
இறந்து இருந்தால் கூட சடலம் ஒதுங்கி இருக்க வேண்டும் ...அப்படியும் கிடைக்கவில்லை !
இப்படிப்பட்ட சம்பவங்களில் பிரபலமான
'பிணம் தூக்கி 'ஒருவரின் தேடிச் சென்று
இருக்கிறார்கள் ...
அங்கேயும் அவர்கள் துரதிர்ஷ்டம் ,அவர் வெளியூர் சென்று இருந்ததால் ...
மூன்று நாட்களுக்குப் பின் சம்பவ இடத்திற்கு வந்து பிணம் தேடும் படலம் ஆரம்பமாகி உள்ளது ...
அவர் ஒருவிதமான எண்ணையை வாயில் அடக்கிக் கொண்டு ஓடும் தண்ணீரில் குதித்து தேட ஆரம்பித்தாராம் ...
அந்த எண்ணையை நீரினடியில் சென்றபின் துபபுவாறாம்...
அதனால் LED விளக்கைப் போட்டது போல் பிரகாசமாய் வெளிச்சம் கிடைக்குமாம் ...
பத்து நிமிடத் தேடலுக்குப் பின் வெளியே வந்திருக்கிறார் ...
காத்திருந்த எல்லோருக்கும் ஆச்சரியப் படும்படியான தகவலை சொன்னாராம் ...
'உங்கள் நண்பர் குகை ஒன்றில் இன்னும் உயிரோடு இருக்கிறார் !'
பிறகேன் காப்பாற்றிக் கொண்டுவரவில்லை ?
பிணம் தூக்கி தன் அனுபவத்தைச் சொன்னாராம் ...
'பிணமாய் இருந்தால் தலை முடியைப் பிடித்துக் கொண்டு வாழை மட்டையை இழுத்துக் கொண்டு வருவது போல் எளிதாக கொண்டு வந்து விடுவேன் ...
உயிரோடு இருப்பவனை மீட்பது சிரமம் ,ஏனென்றால் உயிராசையுடன் இருப்பவர் என்னையும் தண்ணீரில் இழுப்பார் ...'
என்று சொன்னவர் ,அதன் பின் பாதுகாப்புடன் கயிறின் உதவியுடன் ...
அந்த வாலிபரை உயிருடன் மீட்டுள்ளார் ...
மறு ஜென்மம் எடுத்த அந்த வாலிபர் தற்போது அமெரிக்காவில் பணி புரிகிறாராம்...
அவர் தன் திருமணத்திற்கு பிணம் தூக்கியை அழைத்து மரியாதை செய்தாராம் !
மூன்று நாள் உண்பதற்கு ஏதுமில்லாமல் ,வெள்ளம் பாய்கின்ற ஒரு குகையில் உயிர் பயத்துடன் எப்படி இருந்து இருப்பார் என்பதை நினைத்தால் ஜிலீர் என்கிறதே !

|
|
Tweet |
மிகவும் வியப்பாக இருக்கிறது... எப்படியோ அந்த மனிதர் நன்றாக இருக்கட்டும்...
ReplyDeleteசம்பந்தப் பட்ட வாலிபரே தன் ஜிலீர் அனுபவத்தை ஜோக்காளியில் பகிர்ந்துக் கொண்டால் நன்றாய் இருக்கும் ,அவர் எங்கிருந்தாலும் இந்த மேடைக்கு அழைக்கப்படுகிறார் !
Deleteநன்றி தனபாலன் ஜி !
வியப்பூட்டும் தகவல்...
ReplyDeleteநானும் கேள்விப்பட்டபோது வியப்பாகத்தான் இருந்தது !
Deleteநன்றி வெற்றிவேல் ஜி !
அம்மாடியோவ்! நினைத்தாலே ஜிலிர் என்கிறதே! நினைச்சு பார்க்க முடியலனு சொல்வது தான் உண்மையாக இருக்கும். அந்த வாலிபருக்கு ஆயிசு கெட்டி. அவருக்கு வாழ்த்துக்கள். பகிர்ந்த தங்களுக்கு நன்றிகள்..
ReplyDeleteதங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
மூன்று நாள் குகை வாசத்தை நினைத்துப் பார்க்கவே முடியலேன்னு சொல்வதே சரியாக இருக்கும் !
Deleteநன்றி பாண்டியன் ஜி !
இதைத்தான் "வதைப்பவனை விட காப்பவன் மிகப்பெரியவன்" என்று சொல்வது!
ReplyDeleteஇரயில் தண்டவாளத்தில் விழுந்து மீட்கப்பட்டவர்களும் இருக்கின்றனர்!!
கல் தடுக்கி இறந்தவரும் உள்ளனர்!!!
விதி!
கல் தடுக்கி மட்டுமில்லே .புல் தடுக்கி இறந்தவரும் உண்டே !
Deleteநன்றி அஜிஸ் ஜி !
அவருக்கு ஆயுசு கெட்டி!
ReplyDeleteஅவர் இருந்த குகைக்குள் எமன் கூட நுழைய முடியலேன்னு நினைக்கிறேன் !
Deleteநன்றி பந்து ஜி !