25 November 2013

ஆக்கிரமிப்பு நடப்பதன் காரணம் இதுதானா ?

சென்ற வெள்ளிக்கிழமை சென்னை 
உயர்நீதிமன்றத்தின் வாயில்கள் அனைத்தும் ...
பொதுமக்கள் யாரும் நுழைய முடியாதபடி இழுத்து மூடப் பட்டனவாம் ...
நீதிபதிகள் ,வக்கீல்கள் யாரும் வரவில்லையா ...
இல்லை கோர்ட் புறக்கணிப்பா ...

இரண்டுமே காரணமில்லை !
அன்றைய தினம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தார்களாம் ...
கோர்ட் வளாகத்திலோ ,கட்டிடத்திலோ யாரும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை உறுதி செய்து கொண்டு அதற்குரிய பதிவேடுகளில் கையெழுத்து இடுவார்களாம் ...
எதற்காக இந்த பதிவு ?
       ஒரு சொத்துக்குச் சொந்தக் காரரின் விருப்பத்துக்கு எதிராக ,யாரேனும் ஒருவர் அச்சொத்தை 1 2 ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்து வந்தால் ,அச்சொத்து தனக்கே உரியதென்று நீதி மன்றத்தில் வாதாட முடியுமாம் !
நீதிமன்றத்திற்கே இந்த கதி என்றால் ...
பொதுமக்களின் சொத்துக்கு என்ன உத்தரவாதம் ?

22 comments:

  1. ஏமாந்த பொதுமக்களின் கதி அதோகதிதான்
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. தனியார் சொத்துக்கு 1 2 வருஷம் அரசு சொத்துக்கு முப்பது வருஷ கால வரையறை இருந்தும் அரசு தன் சொத்தைக் காப்பாற்றிக் கொள்ள இவ்வளவு முன்னேற்பாடுகளை செய்துக் கொள்கிறது ,நாம் என்ன செய்கிறோம்?
      நன்றி

      Delete
  2. Replies
    1. நம் சொத்து நம் கையில் இருக்க வேண்டுமானால் விழிப்பாய் இருப்பதே நல்லது !
      நன்றி

      Delete
  3. Replies
    1. நம் நாட்டுச் சட்டங்கள் இப்படி சொல்லும் நிலையில் இருக்கின்றன !
      நன்றி

      Delete
  4. Replies
    1. மீட்பு நடவடிக்கையே ஆரம்பிக்கவில்லை ,அதற்குள் சலித்துக் கொண்டால் எப்படி ?
      நன்றி

      Delete
  5. அப்போ நான் துபாய்க்கு வந்து 12 வருஷத்துக்கு மேலே ஆகுது!
    ஆக்கிரமிச்சுடலாமாஜீ?

    ReplyDelete
    Replies
    1. இந்த வினோத சட்டம் இங்கேதான் !
      அங்கே எந்த தொழில் செய்தாலும் துபாய் குடிமகன் பெயரில்தான் செய்ய முடியும் என நினைக்கிறேன் !இங்கே உங்களுக்கு சொத்து இருந்தால் காப்பாற்றிக் கொள்ளுங்கள் !
      நன்றி

      Delete
  6. நல்ல சட்டம் நல்ல தீர்ப்பு
    இனி எதை ஆக்கிரமித்தாலும்
    பன்னிரண்டு வருஷம் தம் வசம் இருக்கும்படி
    பார்த்துக் கொள்ளவேண்டியதுதான்

    ReplyDelete
    Replies
    1. இதுக்குதான் வன வாசம் போகக் கூடாதுன்னு சொல்றதோ ?
      நன்றி

      Delete
  7. அடடா... நீதிமன்றத்துக்கே இந்த நிலைமையா....

    ReplyDelete
    Replies
    1. அரசு பொது சொத்துக்கள் அனைத்திற்கும் இந்த நிலைதானாம் !
      நன்றி

      Delete
  8. ”ஒண்ட வந்த பிசாசு ஊர் பிசாசை விரட்டுச்சாம்” அது போல இருக்கே... இந்த லோகத்துல யாரு தான் பாதுகாப்பா இருக்கா!

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு பாண்டிய மன்னர் காலமே தேவலையா ,பாண்டியன் ஜி /
      நன்றி

      Delete
  9. வணக்கம்
    அப்படியா சம்பவம் சொல்லவே இல்லை.........அண்ணா...அருமை தொடருங்கள் எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. என்னாலும் நம்ப முடியவில்லை ,இப்படியும் சட்டத்தில் ஓட்டையா ?
      நன்றி

      Delete
  10. Replies
    1. ஜனநாயகத்தில் இதெல்லாம் சாதாரணமப்பாவா ?
      'நன்றி

      Delete
  11. பொது மக்களின் சொத்துக்கு உத்தரவாதம் கிடையாதுதான்....அதனால் தான் வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் வாடகைக்கு தங்கள் வீட்டை விடும்போது ஒவ்வொரு வருடமும் வீட்டு agreement பத்திரத்தில் போடுகிறார்கள். இது திருவனந்தபுரத்தில் வெகு சாதாரணமாக நடக்கக் கூடிய ஒன்றுதான். அங்கு வீடு வாடகைக்குக் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. அடிக்கடி மாற்றம் ஆகும் வேலயில் உள்ளோர் என்றால் கிடைக்கும். இல்லை என்றால் கொஞ்சம் கஷ்டம்தான்.

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் ,அக்ரீமென்ட் போட்டுக் கொள்வதே சொத்துக்கு பாதுகாப்பு !
      நன்றி

      Delete