10 November 2013

சாகசம் இளைஞர்களுக்குத்தான் சொந்தமா ?

வயசானாலே வரக் கூடாத ஆசையெல்லாம் வரும்னு சொல்றது சரிதான் போலிருக்கிறது ...அதுவும் நூறாவது பிறந்த நாளை இப்படி கொண்டாட வேண்டும் என்று...

அமெரிக்கத் தாத்தா 'வெர்னான் மேநார்டு'க்கு வந்த ஆசையை கேள்விப்படும் போதே புல்லரிக்கிறது ...
நூறு மெழுகுவர்த்திகளை ஊதி அணைத்தாலே உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வயதிலும் ...
சாகசம் செய்து கொண்டாடியுள்ளார் ...
பத்து மாடியேறி கீழே பார்த்தாலே  நமக்கு தலை சுற்றுகிறது ...
அவரோ ,பத்தாயிரம் அடிக்கு மேலே பறக்கும்  விமானத்தில் இருந்து  பாராசூட் மூலம் கீழே குதித்துள்ளார் ...
நூறு வயதிலும் கூட அவரிடமிருந்து மனோதைரியம் 'லாஸ் 'ஆகாததால் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தின் மீது பறந்து பறந்து மகிழ்ச்சியின் 'உச்சத்திற்கே 'போயிருக்கிறார் ...
இப்படிக் கொண்டாட வேண்டுமென்பது அவரின் நீண்ட நாள் கனவாம் ...
கனவை நனவாக்கிக் கொண்டுள்ளார் ...
அடுத்த பிறந்த நாளை ஆகாயத்திலேயே  கேக் வெட்டி கொண்டாட நினைப்பாரோ ?




24 comments:

  1. தாத்தாவை வாழ்த்துவோம்...

    ReplyDelete
    Replies
    1. தாத்தா வாழ்த்தப்பட வேண்டியவர் மட்டுமல்ல ,தைரியத்திற்காக வணங்கப் படவேண்டியவர் !
      நன்றி குமார் ஜி !

      Delete
  2. பகவான்ஜி!
    தமிழ்மணம் வோட்டு பிளஸ் +1 நினைவில் கொள்க: இனி மேல் தமிழ்மணம் வோட்டு பிளஸ் +1 என்று எழுதப் போவதில்லை.அதற்கு பதில்? ""போட்டாச்சு"" என்று தான் எழுதுவேன்.

    ""போட்டாச்சு என்று எழுதினால் அதன் ஒரே அர்த்தம் உங்களுக்கு தமிழ்மணம் வோட்டு பிளஸ் +1 போட்டு விட்டேன் என்று அர்த்தம்.. யாருக்கும் நான் மைனஸ் வோட்டு போடமாட்டேன்--அதை நினைவில் கொள்க!

    There fore...போட்டாச்சு என்று தான் எழுதுவேன்...புரிந்தால் சரி...

    ReplyDelete
    Replies
    1. அப்படியே ஆகட்டும் நம்பள்கி !நானும் தொடர்கிறேன் !
      நன்றி !

      Delete
  3. Replies
    1. நன்றி நம்பள்கி !

      Delete
  4. பல விஷயங்கள் ஆதங்கமாகவே முடிந்துவிடுகின்றன.
    அதாவது, அவனால் இந்த வயதிலும் இப்படி முடிகிறதே... நம்மால் "ஒண்ணும்" முடிவதில்லையே என்று.
    பல்லு இருக்கிறவன் முறுக்கு திங்கிறான், விட்டுத்தள்ளுங்கஜீ

    ReplyDelete
    Replies
    1. இப்போ பல்லு இருக்கிறவன் மட்டுமா முறுக்கு தின்கிறான் ?செராமிக் பல்லை இம்ப்ளான்ட் பண்ணிக்கிட்டு சீடையும் சேர்த்து தின்கிறானே! சந்தோசப் படவேண்டிய விஷயம் இல்லையா இது ?
      நன்றி அஜீஸ் ஜி !

      Delete
  5. என்றும் மார்கண்டேயர் ??!!!எனக்குத் தெரிந்த வரை மேலை நாடுகளில் வாழ்பவர்கள் அதுவும் அமெரிக்கர்கள் தங்களை எப்போதும் இளமையாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுபவர்கள். வயதானாலும் ட்ரெக்கிங்க் , மலையேற்றம் அதிலும் சாகஸங்கள் செய்வதில் மிக ஆர்வம் உள்ளவர்கள். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் கூட. சில வருடங்களுக்கு முன் 70 வயதான பாட்டி தான் இறப்பதற்கு முன் எப்படியாவது ஒரு டிகிரி வாங்கி விட்டுத்தான் இறக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில், அந்த வயதிலும் படித்து இளங்கலை டிகிரி வாங்கி விட்டுத்தான் இறந்தார். நம்மவர்கள் 30, 40 ஆனவுடனேயே தளர்ந்துவிடுகிறார்கள். ஒருவேளை அவர்கள் வாழ்கையை அணுகும் முறையும், நாம் அணுகும் முறையும், வித்தியாசப்படுகிற காரணமாக இருக்கலாம். அவர்கள் தங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதைச் செய்து அந்த சந்தோஷத்தை அனுபவிப்பவர்கள். life style லே கூட வித்தியாசம்தானே பகவான் ஜி! நிஜமாகவே வியக்கவைக்கும் தாத்தா!!!!! நல்ல பதிவு பகவான்ஜி!!!!!

    ReplyDelete
    Replies
    1. அங்கே மருத்துவ செலவு முழுவதையும் அரசு ஏற்றுக் கொள்கிறது ,இங்கே வாழ்நாள் முழுவதும் சம்பாதித்ததே போதாதே !முக்கியமாய் எதிர்கால பயம் அவர்களுக்கில்லை சேமிப்பே தேவையில்லை தினமும் என்ஜாய்தான் !இங்கே அப்படியா ?
      உங்கள் விளக்கத்திற்கு நன்றி துளசிதரன் ஜி !

      Delete
    2. Absolutely right !! பகவான் ஜி!!!

      Delete
    3. Absolutely right !! பகவான் ஜி!!!

      Delete
    4. நம் புரிதல் சரிதானென்று அவர்களின் வாழ்க்கை முறையே சொல்கிறதே !
      நன்றி துளசிதரன் ஜி !

      Delete
  6. ஆகாயத்தில் கேக் வெட்டிக் கொண்டாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லைதான்!!

    ReplyDelete
    Replies
    1. கேக் பெட்டியை மேலே இருந்து அள்ளியும் வீசக் கூடும் ! நம்மூரில் வெள்ளத்தின் போது
      உணவுப் பொட்டலம் போடுவதைப் போல !
      நன்றி துளசிதரன் ஜி !

      Delete
    2. ஹா! ஹா! ஹா! நல்ல நகைச்சுவை உணர்வு (sense of humour and timely wit!!!) பகவான் ஜி!!!

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
    4. பாராட்டிற்கு நன்றி !

      Delete
  7. வித்தியாசமான தாத்தாதான்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கில்லாடி தாத்தா!
      நன்று சுரேஷ் ஜி !

      Delete
  8. ம்ம்ம்.. தாத்தாவுக்கு இப்படி ஒரு ஆசை, தைரியம் நிச்சயம் பாராட்டுக்குரியது. அவருக்கு நமது வாழ்த்துக்களும் வணக்கங்களும் உரித்தாகட்டும். 100 மெழுகுவர்த்திகளை ஊதி அணைத்தாலே உயிருக்கு உத்தரவாதம் இல்லை இது தான் பகவான் ஜி குறும்பு என்பது. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. குறும்பு ரசிகன் பாண்டியன் ஜீக்கு நன்றி !

      Delete
  9. ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை! என்று சொல்லாமல் சொன்னாரோ இந்த நூறு வயதுக்காரர்!

    ReplyDelete
    Replies
    1. மனம் போல் வா ,கொண்டாடலாம்ன்னு கூடப் பாடுவார் !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete