3 November 2013

ஆயிரம் டன் தங்கம் கிடைக்குமா ?

இந்தியா இன்ஸ்டன்ட் வல்லரசு ஆகும் கனா 
தகர்ந்துவிட்டது ...
சாமியார் சோபன் சர்க்காரின் அருள்வாக்கை நம்பி ...
ஆயிரம் டன் தங்கத்திற்கு ஆசைப்பட்டு ...

அவர் சொன்ன இடத்தில் பன்னிரண்டு நாட்கள் தோண்டிப் பார்த்தும் ...
 ஒரு கிராம் தங்கம் கூடக் கிடைக்கவில்லை ...
ஒரு சாமியார் கண்ட கனவை நம்பி ...
இவ்வளவு செலவு செய்வதாவென்று சகல தரப்பும் கண்டனம் தெரிவித்தபோது ...
இல்லை இல்லை ,தொல்பொருள் ஆய்வுத்துறை ஏதோ ஒரு உலோகம் அங்கே  அடியில் இருப்பதாக கண்டுபிடித்து உள்ளதாக ...
மத்திய அரசு சப்பைக்கட்டு கட்டியது ...
அந்த உலோகமாவது சிக்கியதாவென்றால்அதுவும் இல்லை !
தோண்டும் பணி நடந்து கொண்டிருந்த போது சும்மா இருந்த அந்த சாமியார் இப்போது ...
என் முன்னிலையில் தோண்டினால் மட்டுமே தங்கம் கிடைக்குமென்று மீண்டும் அருள்வாக்கு
கூறியுள்ளார் ...
மேலும் அகழ்வுப் பணி நடப்பதை டீவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டுமென்றும் கூறியுள்ளார் ...
இந்த 'சர்க்காரின் 'புருடாவுக்கு மத்திய சர்க்கார் முடிவு கட்ட வேண்டுமென்றால் ...
ஆயிரம் டன் தங்கம் கிடைத்துவிட்டால் 
சாமியாரை நாட்டின் முதல் குடிமகன் ஆக்கிவிடுவது ...
கிடைக்காவிட்டால் தோண்டப்படும் குழியையே 
சாமியாரின் ஜீவசமாதி ஆக்கிவிடுவது !
இதற்கு சாமியார் கட்டுப்படுவாரானால் அடுத்தகட்ட நடவடிக்கையை ஆரம்பித்து விடலாம் !
    /////////////////////////////////////////////////////////////////////////////////////////////
          தங்கப்புதையல் ...முந்தையப் பதிவு>>>
http://jokkaali.blogspot.com/2013/10/blog-post_18.html















16 comments:


  1. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
    ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
    இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
    அன்பாம் அமுதை அளி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி !

      Delete
  2. யோசனை சரியாக உள்ளது... ஆரம்பம் தொடர் தான் படிக்க முடியவில்லை... இந்த நடவடிக்கை ஆரம்பம் நன்று...

    ReplyDelete
    Replies
    1. சரியான யோசனைக்கு பரிசு என்றால் எனக்குத்தான் ,இல்லையா தனபாலன் ஜி !
      நன்றி !

      Delete
  3. பகவான்ஜி. அன்றே எழுதியாச்சு!
    தமிழ்மணம். always...plus +1.

    இது என் பதிவு:
    எங்க கிராமத்து தோட்டத்து கிணறு is a good Xuck!

    இது அந்த பதிவுக்கு லிங்க்:
    http://www.nambalki.com/2013/10/is-good-xuck.html

    ReplyDelete
    Replies
    1. அன்றே எழுதியது வேறு ,அதன் தொடர்ச்சி இது !
      அழைப்புக்கு நன்றி ,மறுமொய் செய்தால் போச்சு !
      நன்றி நம்பள்கி ஜி !

      Delete
  4. தங்கம் கிடைத்தால் நமக்கும் க்டன்தீரும் என்ற நம்பிக்கையில் சொல்லிருப்பார்

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கை என்று கூறியிருந்தாலும் பரவாயில்லை ,கனா கண்டதாகதானே தோண்டச் சொன்னார் ?
      நன்றி கண்ணதாசன் ஜி !

      Delete
  5. வணக்கம் சகோதரரே..
    தன்னை உலகம் அறிந்த தங்க புருடா விட்டு அரசையும் ஆசை கொள்ள வைத்து அனைவரையும் அலக்களித்த அந்த சாமியாருக்கே நாமெல்லாம் பக்தர்கள் ஆகி விட்டால் என்ன?.. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தோண்டப் படும் குழியில் நானும் விழத்தயாராக இல்லை !
      நன்றி பாண்டியன் ஜி !

      Delete
  6. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சரவணன் ஜி !

      Delete
  7. தொடர்ந்து பல இடங்களைச் சொல்லிக் கொண்டிருக்க, தேடலும் தொடர்கிறது... :(

    ReplyDelete
    Replies
    1. ஆன்மீகத் தேடலில் ,தங்கப் புதையல் தேடலையும் செய்யும் இவரெல்லாம் ஒரு சாமியாரா ?
      நன்றி நாகராஜ் ஜி !

      Delete
  8. சூப்பர்... தங்கள் பாணியில் சரியான தீர்வு...! (அந்தச்சாமியார் ஒத்துக்கொள்வாரா என்று யாரேனும் கேட்டால் தேவலை..!!!)

    ReplyDelete
    Replies
    1. நாட்டுக்காக இதைக் கூடவா செய்யக் கூடாது ,அந்த சாமியார் ?
      நன்றி சாய் ரோஸ் அவர்களே !

      Delete