24 May 2014

வராக் கடன் என்பது கோடீஸ்வரன்களுக்கு மட்டும்தானா ?

''பாங்க் மேனேஜர் நான்தான் ,உங்களுக்கு என்ன வேணும் ?''
''வராக்கடன்லே பத்து லட்சம் ரூபாய் கடன் வேணும் !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்!மாமூல் படுத்தும் பாடு !

''கொள்ளைக் காரங்களுக்கு  போலீஸ்னா  பயம்

இல்லாமப் போயிடுச்சா,ஏன் ?''

'' நம்ம ஏரியாவிலே எந்தெந்த  வீடு பூட்டிக் 

கிடக்குன்னு  போலீஸ் ஸ்டேசனுக்கே போன்

போட்டுக் கேக்கிறாங்களாம் !''



'சிரி'கவிதை!அதிகாலை எழுந்தவுடன் எழுந்த சந்தேகம் !
விடியலுக்கு வரவேற்பா ...

இரவுக்கு வழியனுப்பா ...

அதிகாலை நேரத்து பறவைகளின் கானம் ?

44 comments:

  1. வணக்கம்

    அருமையாக உள்ளது... வாழ்த்துக்கள்...தலைவா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கொள்ளைக் காரர்கள் தான் கொள்ளை அடிக்கிறார்கள் என்றால் அரசியல்வாதிகளும் ,கோடீஸ்வரன்களும் வராக்கடன் என்ற பெயரில் வங்கிகளில் கொள்ளை அடிக்கிறார்களே !
      நன்றி

      Delete
  2. அப்படியே எங்களுக்கு சிபாரிசு பண்ணுங்க
    சிரி கவிதை இனிமை

    ReplyDelete
    Replies
    1. பத்து சதம் கமிஷனை முதலில் வெட்டுங்க ,சிபாரிசு பண்ணிப்பிடலாம் !
      பறவைகளின் கானம் இனிக்கத்தானே செய்யும் ?
      நன்றி

      Delete
  3. தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் உதவிக்கு மனங்கனிந்த நன்றி !

      Delete
  4. மூன்றுமே இன்று நீங்கள் உதிர்த்த முத்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மூன்று லட்சம் கோடி ரூபாய் பாக்கி உள்ளதாம் பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வங்கிகளில் வாங்கிய கடன் !
      நன்றி

      Delete
  5. Replies
    1. திரு .விமல்ராஜ் தன் வலைதளமான'பழைய பேப்பர்' ல் எவன் அப்பன் வீட்டு சொத்து ?என்ற தலைப்பில் அருமையான பதிவை இட்டுள்ளார் ...இதோ >>>http://pazhaiyapaper.blogspot.in/2014/05/bad-debt-on-public-sector-bank.html
      நன்றி

      Delete
  6. Replies
    1. தங்களின் ரசனைக்கு என் நன்றி !

      Delete
  7. வராக் கடனா இல்ல வாராக் கடனா? எப்படிச் சொன்னா என்ன எப்படியும் அது திரும்பி வரப்போறதில்ல :)

    ReplyDelete
    Replies
    1. வாரி வழங்குவது அரசு வங்கி ,கடனைக் கட்டாமல் காலை வாருகிறவர்கள் பெரும் செல்வந்தர்கள் !அதை எப்படியும் சொல்லலாம் !
      நன்றி

      Delete
  8. ஒரு முடிவோடத்தான் லோன் கேட்பாங்க போல இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. கடன் என்றால் திருப்பிக் கட்ட வேண்டியது ,லோன் என்றால் திருப்பிக் கட்ட தேவை இல்லாதது என்று பலரும் நினைக்கிற சமூகத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் !
      நன்றி

      Delete
  9. வசதியுள்ளவர்களுக்கு மட்டுமே வாராக் கடன் வழங்கப்படும்!

    ReplyDelete
    Replies
    1. இப்படி போர்டு வைக்கவில்லையே தவிர வங்கிகளில் அதுதான் நடக்கிறது !
      நன்றி

      Delete
  10. 1. கடன் கேட்கும் போதே - ஏப்பம் விடும் சத்தம் கேட்கிறது.
    2. கூட்டுக் கொள்ளையோ?..
    3. கவிதை.. கவிதை.. இதான்.. இதேதான்..

    ReplyDelete
    Replies
    1. 1.எண்ணித் துணிக கருமம் கொள்கைப்படி கடன் வாங்குபவர்கள் .
      2.அதுதானே வசதி ?
      3.இரவே இரவே விடியாதேன்னு நாமதான் பாடுகிறோம்,பறவைகள் ?
      நன்றி

      Delete
  11. என் பதிவை அறிமுக படுத்தியதற்கு நன்றி...
    அதை வைத்து ஒரு ஜோக்கும் எழுதி விட்டீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. நாட்டு நடப்பு பற்றிய மொக்கை போட உதவிய உங்களுக்கும்,மூலக் கட்டுரை பிரசுரித்த குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கும் நன்றி !

      Delete
  12. இந்த கூட்டுக் கொள்ளையைத் தடுக்க ஒரு ஐடியா சொல்லுங்க லாயர் சார் !
    நன்றி

    ReplyDelete
  13. சே..எனக்கு தெரியாமல் போச்சே,நானும் கேடன் கேட்டுருப்பேனே........

    ReplyDelete
    Replies
    1. இப்பவும் ஒண்ணும் மோசம் போகலே ,முதல்லே கோடீஸ்வரன் ஆகப் பாருங்க !
      நன்றி

      Delete
  14. இரு ஜோக்குகளும் ஹாஹாஹாதான்

    சிரி கவிதை மிகவும் ரசித்தோம்!

    த.ம

    ReplyDelete
    Replies
    1. கோடீஸ்வரன் &கேடீஸ்வரனை ரசித்ததற்கு நன்றி !

      Delete
  15. கடன்பட்டார் நெஞ்சம்போல் களங்கி நிற்கிறான் தமிழ் வேந்தன்.

    Killergee
    www.Killergee.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் அந்த காலம் ,இப்போ கடன் கொடுத்த ஆள்தான் எப்படி திரும்ப வாங்குவது என்று கலங்கி நிற்கணும் !
      நான் இலங்கை வேந்தன் என்று கேள்வி பட்டுள்ளேன் ,நீங்கள் அதை தமிழ் வேந்தன் ஆக்கிய காரணம் என்னவோ ?
      நன்றி

      Delete
  16. Replies
    1. எப்பொழுதாவது புரியற மாதிரி 'சிரி'கவிதையை நானும் எழுதி விடுகிறேன் !
      நன்றி

      Delete
  17. வாராக் கடன் கோடீஸ்வரர்களுக்கு மட்டும் தான் என்றாகிவிட்டது.

    போலீஸ்காரர்களுக்கு தான் மாமூல் போய் விடுகிறதே..

    கவிதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. நாம வாராது வந்த மாமணியேன்னு பாடிகிட்டே இருக்க வேண்டியது தான் .!

      மாமூல் எப்படி எல்லாம் வேலை செய்கிறது !

      அதிகாலை நேரத்து பறவைகளின் சுப்ரபாதம் விரும்பாதவர்கள் யார் ?
      நன்றி

      Delete
  18. கோடீஸ்வரர்களுக்காக வங்கி அதிகாரிகளும் ,கொள்ளைக்காரர்களுக்காக காவல்துறை கறுப்பாடுகளும் பறவைகள் போல் சிந்து பாடுவதை ரசித்ததற்கு நன்றி !

    ReplyDelete
  19. வராக்கடன்லே
    நமக்கு
    பங்கு இல்லையாமே

    ReplyDelete
    Replies
    1. நமக்கு வட்டியைக்கூட தள்ளுபடி செய்ய மாட்டாங்களே !
      நன்றி

      Delete
  20. வராக் கடன் என்பது
    எமக்கு கிட்டாததன் நோக்கமென்ன?

    ReplyDelete
    Replies
    1. வராக் கடன் வாங்கும் அளவிற்கு நம்மிடம் கோடிக்கணக்கில் பணம் இல்லாததுதான் !
      நன்றி

      Delete
  21. தண்டிடலாம்
    எனக்கு எவ்வளவு என
    மேனேஜர் கேட்டிருப்பாரே ?

    ReplyDelete
    Replies
    1. இப்படி கூட்டுக் கொள்ளை அடித்து ,வங்கி தேசியமயம் ஆக்கப்பட்டதற்கான லட்சியத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள் !
      நன்றி

      Delete