9 May 2014

இப்படியும் ராத்திரி தூக்கம் கெடுப்பானா புருஷன் ?

''என்னங்க ,இந்த ராத்திரி நேரத்திலே திடீர்ன்னு பீரோ  கண்ணாடி நொறுங்கி விழுதே...அய்யய்யோ...அய்யய்யோ ....!''
''சும்மா கத்தாதே ,நாய் துரத்திகிட்டு வர்ற மாதிரி கனவு வந்தது ,நான்தான் கையிலே கிடைச்சதை தூக்கி எறிஞ்சேன் !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!உள்ளே போறது  அரை லிட்டர் ,வெளியே வர்றது ஒரு லிட்டர்ன்னா  ?

''தாகம் அடங்கலைன்னு சொன்னதுக்கா அவரை 

ICU ல் அட்மிட் பண்ணிட்டாங்க ?''

''அட நீங்க வேற !தண்ணி குடிச்ச வேகத்திலேயே 

வெளியே வந்திடுதாம் ,ஒரு சொட்டுகூட உள்ளே 

தங்க மாட்டேங்குதாமே !''

'சிரி'கவிதை!இல்லாததை விளக்க ஆயிரம் பாடல் ?

கொள்கை விளக்கப் பாடல்களைக் கேட்கையில் 

சந்தேகம் பிறக்கிறது ...

நாலு வரிக் கொள்கை என்ன கொடுங்தமிழிலா இருக்கிறது ,

இத்தனைப் பாடல்களில் விளக்கிச் சொல்ல ?

30 comments:

  1. நல்ல காலம் மனைவியை அடிக்காமல் இருந்தாரே !!

    tha.ma.

    ReplyDelete
    Replies
    1. அந்த தைரியம் தூக்கத்தில் கூட அவருக்கு வராதே !
      நன்றி

      Delete
  2. நல்லவேளை
    திருடன் பக்கத்தில் படுத்திருப்பதைப்போல
    கனவு காணாமல் இருந்தார்
    மிகவும் ரசித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இதுவும் நடக்கக் கூடும் ,எதுக்கும் அவர் மனைவி தள்ளிப் படுப்பதே நல்லது !
      நன்றி

      Delete
  3. Replies
    1. எதை நாய் துரத்திக் கொண்டு வருவதையா?
      நன்றி

      Delete
  4. Replies
    1. நிஜத்தில் நாய் துரத்தினால் பீரோவில் நுழைந்து பூட்டிக்குவாரோ ?
      நன்றி

      Delete
  5. மனைவி துரத்திய மாதிரி கனவு கண்டிருந்தால், பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை, இது தான் சாக்கு என்று மொத்து மொத்துன்னு மொத்தியிருப்பார்.

    ReplyDelete
    Replies
    1. இவர் மொத்தினால் மனைவி வாங்கிக் கொண்டாயிருப்பார் ?தலையணையால் முகத்தை பொத்தி விடுவாரே !
      நன்றி

      Delete
  6. Replies
    1. நாய்க்கு பதிலாய் நண்டு காலைக் கடித்து இருந்தால் என்ன செய்திருப்பாரோ ?நீங்கதான் சொல்லணும் நண்டு ஜி !
      நன்றி

      Delete
  7. முதல் இரண்டும் ஜோர்... தலைப்பில் குறும்பு! மூன்றாவது அபுரி!

    ReplyDelete
    Replies
    1. ஜோர் சரி ,அதென்ன அகராதியில் இல்லாத வார்த்தை அபுரி ?
      நன்றி

      Delete
    2. //அதென்ன அகராதியில் இல்லாத வார்த்தை அபுரி ?//

      அபுரி என்றால் புரியவில்லை என்று அர்த்தம். :)))))))))))))
      பிரயோகம் என்னுடையதில்லை, சுஜாதாவோடது!

      Delete
    3. சுத்தம் அசுத்தம் என்பதைப் போல ,புரி அபுரி யா ?சுஜாதா இருக்கும்போதே கேட்காமல் போனேனே !

      நம்ம அரசியல் கட்சிகளின் கொள்கை விளக்கப் பாடல்களை நீங்கள் கேட்டு இருப்பீர்களே ...நடப்புக்கும் கொள்கைக்கும் சம்பந்தமே இருக்காது !
      நன்றி

      Delete
  8. 1. பீரோ கண்ணாடி ஒடைஞ்சது இருக்கட்டும்.. நாய்க்கு ஒண்ணும் அடிபடலையே!..
    பாவம்.. வாயில்லா ஜீவன்..
    2. எல்லா நர்ஸ்களுக்கும் விடுமுறை!..
    3. அது இன்னும் இருக்கா!..

    ReplyDelete
    Replies
    1. 1.அதுக்கு அடிபடவும் இல்லே ,இவர் கடிபடவும் இல்லே !பிறகு மனைவியிடம் கடி வாங்கி இருப்பார் !
      2.விடுமுறை இல்லை ,அரண்டு போய் விடுப்பில் சென்று விட்டார்கள் !
      3.எப்படி கொள்ளை அடிக்கலாம் என்று மாறிவிட்டது, கொள்கை !
      நன்றி

      Delete
  9. கனவிலே கல்லா! மனைவி பாவம்தான்!

    ReplyDelete
    Replies
    1. நாயைக் கண்டால் பீரோ கண்ணாடியை காணாம்னு சொல்ல வேண்டி வருமோ ?
      நன்றி

      Delete
  10. கண்ணாடியில மனைவியத்தான் பார்த்திருப்பார்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மனைவியை நேரில் பார்க்க தைரியம் இல்லைதான் ..அதற்காக கனவிலே வர்ற கண்ணாடியில் பார்த்தார் என்பது 'டூ மச்'சா தெரியுதே !
      நன்றி

      Delete
  11. நல்ல வேளை மனைவியை அடித்து விட வில்லை! :)

    ReplyDelete
    Replies
    1. அதுக்குத்தான் டிரையல் பார்த்து இருப்பாரோ ?
      நன்றி

      Delete
  12. ஹா ஹா.....எங்க உறவினரின் வீட்டிலும் இப்படி ஒரு சம்பவம்.... ஆனால் அடித்தவர் மனைவி. கணவனை கன்னத்தில் பளார் என அறைந்திருக்கிறார்..... எழுந்துப்பார்த்தால்.... கனவில் தான் யாரையோ அடித்ததாக கூற....பாவம் கணவர்...

    ReplyDelete
    Replies
    1. இங்கே மதுரையிலே இப்போ நடக்கிற சித்திரை திருவிழாவில் காணாமல் போனவர் போல் ஒருத்தர் பேந்த பேந்த முழிச்சுகிட்டு நிற்கிறார் ...அநேகமா அவர் ,நீங்க சொன்ன அந்த கணவராத்தான் இருக்கும் போலிருக்கே !
      நன்றி

      Delete
  13. கனவும்
    கண்ணாடியுடைப்பும்
    அழகாயிருக்கே!

    ReplyDelete
    Replies
    1. அர்த்த ராத்திரியில் கண்ணாடி உடையுதேன்னு அரண்டு போயிருக்காக ,உங்களுக்கு அழகாவா இருக்கு ?
      நன்றி

      Delete