8 May 2014

முதல் இரவிலேயே கணவனை புரிந்து கொண்ட மனைவி !

''டார்லிங் ,மேனேஜருக்கு என்னை ரொம்ப பிடிக்கும்னு உனக்கு எப்படி தெரிஞ்சது ?''
''நம்ம கல்யாணத்திற்கு உங்க ஆபீஸ் நண்பர்கள்  கொடுத்த பரிசைப் பொருளிலே ஜால்ராவும் இருக்குதே !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!கட்டிக்கிட்டா ஒய்ப் ,வச்சுக்கிட்டா வைப்பா ?
''தலைவர் 'வைப்பு'க்கு வேலை வாங்கிக் கொடுத்து 

விட்டாராமே ,எந்த ஆபீசிலே ?''

''வைப்பு நிதி ஆபீசிலேதான் !''


'சிரி'கவிதை!ஆணுக்கு வளைகாப்பு 'கை விலங்கு'தான் !

கள்ள உறவில்  உருவாகும் பிள்ளைப் பேறை 

தொல்லைப்பேறென நினைக்கும் பெண்கள் ...

 வளைகாப்பு இன்றியே பெற்ற 

பச்சிளம் குழந்தைகளை வீசியெறியும் அவலம் !

தொட்டில் குழந்தை அப்பனுக்கும் ...

காவல் துறை 'வளைகாப்பு 'செய்தால் அல்லவா அவலம் தீரும் ?

34 comments:

  1. வணக்கம்
    தலைவா...

    காலைப் பொழுதில் முதல் படித்த பதிவு தங்களுடையது.... நகைச்சுவை கவிதை இரண்டும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. முதல் பதிவாக படித்து முதல் கருத்துரையும் இட்டதற்கு முதற்கண் எனது நன்றி !

      Delete
  2. தொட்டில் குழந்தையோட அப்பன் யாரென்று தெரிந்தால் அல்லவா போலீஸ் "வளைகாப்பு" நடத்த முடியும்.

    ReplyDelete
    Replies
    1. தொட்டில் குழந்தையோட அப்பனுக்கு பத்தாயிரம் பரிசுன்னு விளம்பரம் கொடுத்தா பெறாத அப்பன்களும் வந்து மாட்டிக் கொள்வார்களே !
      நன்றி

      Delete
  3. Replies
    1. நிகழ்கால வைப்புக்கு வருங்கால வைப்பு நிதி ஆபிசில் வேலை !
      நன்றி

      Delete
  4. மிகவும் இரசித் தேன்

    ReplyDelete
    Replies
    1. தேன் என்று தனியாகத் தெரிகிறதே,உங்கள் கமெண்ட்டை நானும் ரசித்தேன் !
      நன்றி

      Delete
  5. இன்றைய அலுவலகங்களில் ஜால்ரா அடிப்பவர்களுக்குத்தான் காலம். சென்ற வருட ஜோக்கும் கவிதையும் கூட அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஜால்ரா சத்தத்தைக் கேட்கவே விரும்பாத நல்ல மேலாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
      முகஸ்துதி செய்பவர்கள் தனக்கும் குழி பறிப்பார்கள் என்பதை மேல் அதிகாரிகள் உணர்ந்தால் ஜால்ராவை செவி மடுக்கமாட்டார்கள் !
      நன்றி

      Delete
  6. ஆபீஸ் நண்பர்கள்
    சிம்பாலிக்காக காட்டிக் கொடுத்துவிட்டார்களா ?

    ReplyDelete
    Replies
    1. அதில் இளம் மனைவிக்கு சந்தோசம் ...ஏற்கனவே ஜால்ரா அடிக்கும் அனுபவம் உள்ள கணவன் அமைந்ததில் !
      நன்றி

      Delete
  7. Replies
    1. ஸ்'திரி'க்கு ஆமாம் போட புருஷன் கிடைத்ததில்,நீங்களும் த ம திரீ போட்டீங்க போலிருக்கு ,நன்றி !

      Delete
  8. மூன்றுமே அருமை. 3 வது விழிப்புணர்வுக் கவிதை.

    ReplyDelete
    Replies
    1. அந்த கதையே விழி புணர்வில் ஆரம்பித்து கந்தலாகிப் போனதாச்சே !
      நன்றி

      Delete
    2. புரிஞ்சுக்கிட்டு சிரித்ததற்கு நன்றி

      Delete
  9. மூன்றுமே அருமை. மூன்றாவது நல்ல செய்தி சொல்லும் கவிதை!

    ReplyDelete
    Replies
    1. என் பதிவில் எனக்கு தெரியாமலே நல்ல செய்தி வந்தது எப்படின்னு புரியலே !
      நன்றி

      Delete
  10. 1. நடுச் சாமத்திலயும் ஜால்ரா தானா!..
    2. வெளங்கிடும்!..
    3. !?..

    ReplyDelete
    Replies
    1. 1.இது சைலேன்ட் மோடில் ஒலிக்கும் ஜால்ரா !
      2தலைவர் உருப்படியா ஒரு நல்ல காரியம் பண்ணி இருக்கார் ,சபிக்கிறீங்களே ...
      3.யார் அப்பன் கேள்விக் குறிதான் ,யார் என்பதைக் கண்டு பிடித்து தண்டித்தால் ,நம் மனதில் ஆச்சரியக் குறிதான் !
      நன்றி

      Delete
  11. கலக்கல் ஜோக்ஸ்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. யோசித்து பார்த்ததில் மூன்று பதிவிலும் மறைமுகமாய் ஒரு கலக்கல் இருப்பதை உணர்ந்தேன் !
      நன்றி

      Delete
  12. Replies
    1. முதலில் வோட்டைப் போட்டு விட்டு ,கமெண்ட்டை அடுத்ததாய் போட்டிருப்பது உண்மையில் அருமை !
      நன்றி

      Delete
  13. அட.இப்படியும் ஜால்ரா போடலாமா....

    ReplyDelete
    Replies
    1. உண்மையைச் சொல்லுங்க ,தெரியாமத்தான் கேட்கிறீங்களா ?
      நன்றி

      Delete
  14. Replies
    1. உங்க சிரிப்பிலே நிறைய விசமத்தனம் தெரியுதே லாயர் !
      நன்றி

      Delete
  15. சிறப்பான சிந்தனை..

    ReplyDelete
    Replies
    1. பதிவா ,கமெண்டுகளுக்கு பதிலா எது சிறப்பான சிந்தனை .பாண்டியன் ஜி ?
      நன்றி

      Delete
  16. ஆணுக்கு வளைகாப்பு
    காவல் துறை தரும்
    'கை விலங்கு' தான் - அது
    தொட்டில் குழந்தை அப்பனுக்கா?

    ReplyDelete
    Replies
    1. பிறகென்ன அந்த கைக்கு பூ விலங்கா போட முடியும் ?
      நன்றி

      Delete