''நம்ம ராஜா ,ராணிக்கு சிரச்சேத தண்டனைக் கொடுத்துட்டாரா ,ஏன் ?''
''மந்திரி வேஷத்திலே ராஜா அந்தப்புரம் போனாராம் ...வந்திருக்கிறது ராஜான்னு தெரியாம 'வாங்க மந்திரியாரே ,வந்து ரொம்ப நாளாச்சே 'ன்னு ராணி வரவேற்றாங்களாமே!''
''மந்திரி வேஷத்திலே ராஜா அந்தப்புரம் போனாராம் ...வந்திருக்கிறது ராஜான்னு தெரியாம 'வாங்க மந்திரியாரே ,வந்து ரொம்ப நாளாச்சே 'ன்னு ராணி வரவேற்றாங்களாமே!''
|
|
Tweet |
அப்போ.. மந்திரிக்கு!...
ReplyDeleteஅந்தப் புரத்திலேயே சமாதிதான் !
Deleteநன்றி
ராஜாவும் மாறுவேஷத்திலே "ஸ்பெஷல்" நகர்வலம் செல்வதை ராணி அறிந்திருப்பார்களோ...?
ReplyDeleteராஜாவுக்கு அரண்மனைக்கு வெளியேயும் ஒரு அந்தப்புரம் இருப்பதை தெரிந்து கொண்டிருப்பார் தான் !
Deleteநன்றி
எப்பவும் கள்ளக் காதல் ஜோக்காவே இருக்கு...ஜி
ReplyDeleteகொஞ்சம் நல்ல காதல் ஜோக்கு அவுத்துவிடுங்க....
இதுக்குத்தான் நேற்று கடவுளைக் காட்டினேன் ,நீங்க கூட பார்க்க வரலேயே,பாஸ் !(சரி சரி டிராக்கை மாத்திட்டாப் போச்சு !)
Deleteநன்றி
அதியுச்சத் தண்டனையப்பா...
ReplyDeleteஅந்தப்புரம் என்று ஒன்று இருப்பதையே இத்தனை நாள் மறந்து இருந்த உங்களுக்கு என்ன தண்டனை என்று ராணியார் கேட்டபிறகு ராஜா அதியுச்சத் தண்டனையை ரத்துசெய்து விட்டதாக, கடைசியாக கிடைத்த தகவல் !
Deleteநன்றி
அப்போ இதெல்லாம் அந்த காலத்துலருந்தே நடந்துக்கிட்டிருக்குன்னு சொல்றீங்க!
ReplyDeleteஇதிலென்ன சந்தேகம் ,அரசனா இருந்தாலும் புருஷனா பெண்டாட்டிக்கு செய்ய வேண்டியதை செய்யவில்லை என்றால் இந்த கூத்துதானே நடக்கும் ?
Deleteநன்றி
ஹாஹா!
ReplyDeleteராணியைக் கொல்ல ராஜாவுக்கு என்ன தகுதி இருக்கு ,அந்தப்புரம் என்று மறந்து விட்டு திரிந்தவருக்கு ?
Deleteநன்றி
ஹா... ஹா....
ReplyDeleteராஜா மாற்று வேஷம் போடாமல் சென்றாலும் ராணியின் வரவேற்பு இப்படித்தான் இருந்து இருக்குமோ ?
Deleteநன்றி
உங்களின் பதிவை விட
ReplyDeleteபதில் இன்னும் நன்றாக இருக்கிறது பகவான் ஜி.
வரும் கருத்துரைகளுக்கு பதில் சொல்வது எனக்கு பிடித்த காரியம் ,வெறுமனே ,வருகைக்கு நன்றி ன்னு சொல்ல எனக்கு பிடிக்காது !
Deleteஒரு வரி விடாமல் படித்து கமெண்ட்போடும் உங்களின் ஆதரவு என்றும் எனக்கு தேவை !
நன்றி
ராஜா செஞ்சா பெருமாளு செஞ்சமாதிரி...ராணி செஞ்சா அனுமான் சேஞ்ச மாதிரியல்லவா இருக்கு? ஆண்களின் அடக்கு முறை ஒழிக!!!
ReplyDeleteராணி பிடிச்ச பிடியிலே தண்டனையை ராஜா ,இன்று காலை 11.05மணிக்கு ரத்து செய்த செய்தியை மேலே நீங்கள் பார்க்கவில்லை போலிருக்கே !
Deleteநன்றி
சிரச்சேதம் செய்த பிறகுதான் தெரிந்ததாம் அது ராணி வேஷத்தில் இருந்த சேடி என்று. - கடைசித் தகவல்!!!! :)))))
ReplyDeleteஅட ,இந்தக் கூத்தும் அந்தப் புரத்தில் நடக்குதா ?
Deleteஇப்படி நீங்க கதையை வளர்ப்பதை நேற்று முன் தினம் வெங்கட் ஜி ரசித்து இருந்தார் ,நானும் ரசிக்கிறேன் .தொடரட்டும் உங்கள் தொடர் பணி !
நன்றி
ஆகா
ReplyDeleteஅங்கேயும் அப்படியா
த.ம.8
இது நடக்காத இடமும் உண்டா ?
Deleteசிறிது நாட்களுக்கு முன் சென்னை சாப்ட்வேர் நிறுவன கழிவறை அடைப்பில் இருந்து நூற்றுக்கணக்கான காண்டம் எடுக்கப் பட்டதை நீங்களும் அறிவீர்கள் என நினைக்கிறேன் !நல்லாத்தான் பார்க்கிறாங்க வேலையை!
நன்றி
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...!
ReplyDeleteஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!
அது சரி ,இன்று நம்ம ஜனநாயகத்தில் தலைவர்கள் நடந்து கொள்வது மாதிரிதானே ,அன்று அரசரும் செய்திருப்பார் ?இவங்களைக் கேட்க யார் இருக்கா ?
Deleteநன்றி
ராஜாக்களுக்கு இதேதான் பொழப்போ?!!! அந்தப்புரத்துக்குள்ளயும் மாறு வேஷம்!!!?? மந்திரி தப்பித்தது எப்படி? ஒருவேளை அவரே போட்டுக்கொடுத்திருப்பாரோ?!!!! மந்திரியாச்சே!!! அரச குடும்பத்துல இதுவும் சகஜமப்பா!!!
ReplyDelete(நாங்க 18+ தான்)
த.ம+
துளசிதரன்
அந்தகால ராஜாக்கள் எல்லாம் குளத்தை வெட்டினார்கள் ,குளத்தில் குளிப்பவரைப் பார்க்க மரத்தை நட்டார்கள் என்றுதான் சரித்திரம் சொல்கிறது,அந்தப் புர விவகாரங்களைப் பற்றி யாரும் ஆராய்ச்சி செய்து எழுதின மாதிரி தெரியலையே ...அவங்க ஏகபத்தினி விரதனா இருந்து இருப்பாங்களா ?
Deleteநன்றி
:))))
ReplyDeleteபெரிய மனிதர்களின் சிற்றின்ப செயலைக் கண்டு சிரிக்கத்தான் தோணுதா ஜி ?
Deleteநன்றி
மகளிர் அமைப்புகள் உங்களுக்கு எதிரா போராட்டக் களத்தில் குதிக்கலாம்! எதற்கும் எச்சரிக்கையா இருங்க பகவான்ஜி!!
ReplyDeleteராணி செய்ததை சரி என்று நினைத்தால் நீங்கள் சொல்வது நடக்கலாம் ...ராஜா செய்த தவறையும் கண்டிக்கிறேனே,அவர் என்ன சிரச் சேத தண்டனை தந்து விடுவார் ?
Deleteநன்றி
ராஜா தண்டனையை ரத்து செஞ்சிட்டாரு சரி. ஆனா யாரு என்னிக்குன்னு டைம் டேபிள் இல்ல போட்டிருக்கணும்.....
ReplyDeleteடைம் டேபிள் போடத்தான் நினைச்சார் ...கண்டுக்காம போங்க ,இல்லைன்னா உங்க வண்டவாளம் தண்டவாளம் ஏறிடும்னு ராணி எச்சரித்ததால் ராஜா யோசிக்க ஆரம்பித்து விட்டதாக தெரிகிறது !
Deleteஅது சரி ,இது அவங்க பிரச்சினை ,உங்களுக்கேன் இவ்வளவு ஆர்வம் ?
சைக்கிள் கேப்பில் ஆட்டோ விட ஐடியா இருக்கா ?
நன்றி