''என்னங்க ,பூனை கண்ணை மூடிக்கிட்டு பூலோகம் இருண்டு விட்டது என்று நினைக்குமாங்கிறது பழமொழி...இதை சொல்றதிலே உங்களுக்கென்ன சங்கடம் ?''
''நான் உனக்கு தாலிகட்டி இருபது வருசமாச்சு ...நீ நினைக்கிறதையே கண்டுபிடிக்க முடியலே ,பூனை என்ன நினைக்குதுன்னு எப்படி கண்டுபிடிச்சாங்க ?''
''நான் உனக்கு தாலிகட்டி இருபது வருசமாச்சு ...நீ நினைக்கிறதையே கண்டுபிடிக்க முடியலே ,பூனை என்ன நினைக்குதுன்னு எப்படி கண்டுபிடிச்சாங்க ?''
|
|
Tweet |
கஸ்ரம் தான் !:))
ReplyDeleteஎது கஸ்ரம் பூனை மனம் அறிவதா ,பூவையர் மனம் அறிவதா ?
Deleteநன்றி
அப்படிப் போடு... ரொம்ப கரெக்டா கேட்டிருக்கான் பயபுள்ள...
ReplyDeleteகடலின் ஆழம் கண்டு பிடிக்கலாம் ,கன்னியின் மனத்தில் கண்டுபிடிக்க முடியாதுன்னு சொல்றீங்களா ,குமார் ஜி ?
Deleteநன்றி
யாராலும் முடியாது...
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஅப்படிப் போடு அரிவாளை !
Deleteநன்றி
சோக்காக் கேட்டுக்கினாம் பாரு ஒரு கேய்வி...!
ReplyDeleteஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!
ஐந்தறிவு நினைப்பதை கண்டுபிடிக்க முடியாது ,ஆறறிவு காரிகையின் மனதில் உள்ளதைக் கண்டுபிடிக்க ஏழாம்அறிவுதான் தேவைப்படுமோ?
Deleteநன்றி
சோக்காக் கேட்ட கேள்வி ,நமக்கு ஜோக்காத்தான் தெரியுதே !
Deleteநன்றி
இதுக்கு அதுவே தேவலாம்!..
ReplyDeleteபிறாண்டுவது ரெண்டுக்குமே உள்ள பொதுவான குணம் ,இதில் எது தேவலாம் ?
Deleteநன்றி
அதானே
ReplyDeleteத.ம.4
வாத்தியார் நீங்களும் சொல்லிட்டீங்க ,சரியாத்தான் இருக்கும் !
Deleteநன்றி
ஆய்வின் ஈற்றில்
ReplyDeleteபெண் உள்ளம்
ஆழம் - அதை
அறிய இயலாதோ!
அதைப் பற்றிய ஆய்வு இன்னும் முழுமை பெறவில்லை போலிருக்கே !
Deleteநன்றி
சிலநேரம், சரித்திரபூரவமான உண்மைகளையும் ஜோக்குகள் வாயிலாகத் தெரிவிக்கிறீர்கள் என்பது ஆச்சரியமூட்டுகிறது நண்பரே!
ReplyDeleteசரித்திரம் ,பூகோளம் என்றெல்லாம் இதில் ஒன்றுமில்லை...மேலேயுள்ள லேபிளில் உள்ள மூன்றாவதே காரணம் . ஹிஹிஹி ...
Deleteநன்றி
ஜி...உங்க மேல ஈவ் டீசிங் கேஸ் போடப்போறாங்க....
ReplyDeleteபயப்படாதீங்க....சும்மா...தமாசு
நேற்று காமக் கிழத்தன் அய்யாவும்,எனக்கெதிரா மகளிர் அமைப்பு கொடி தூக்கப் போவுதுன்னு சொல்றார் ,நீங்களும் சொல்றீங்க ..அவ்வளவு விழிப் புணர்ச்சியை நான் உண்டாக்கி விட்டேனா ?
Deleteநன்றி
ஆண் மனசுல என்ன இருக்குன்னு மட்டும் பொம்பளைங்களால தெரிஞ்சிக்க முடியுமா என்ன? அதுவும் முடியாதுங்க. அதனாலதான நிறைய ஆம்பிளைங்க வீட்டுல ஒன்னு வெளியில சாரி ஆஃபீஸ்ல ஒன்னுன்னு வச்சிக்கிட்டுருக்காங்க :))
ReplyDeleteஆணின் இந்த நடத்தையை பெண்கள் சுலபமாக கண்டுபிடித்து விடுவார்கள் ,அவ்வளவு சுலபமாக பெண்ணின் நடத்தையை கண்டுபிடிக்க ஆணால்முடியாது என்பதையாவது ஒப்புக்கொள்வீர்களா ?
Deleteநன்றி
பாவம் பூனை. அதை ஏன் இந்த மனிதர்கள் வம்புக்கு இழுக்கிறார்கள்?
ReplyDeleteசத்தியமா நான் இழுக்கவில்லை நமது முன்னோர்கள் ஏன் இப்படி சொன்னார்கள் என்று தெரியவில்லையே !
Deleteநன்றி
கேட்டானே ஒரு கேள்வி! சூப்பர்!
ReplyDeleteபூனைக்கூட இவ்வளவு நெருக்கமா பழகி கண்டு பிடிச்சது யாராயிருக்கும் , சுரேஷ் ஜி ?
Deleteநன்றி
//பூனை என்ன நினைக்குதுன்னு யார் கண்டுபிடிச்சாங்க?//
ReplyDeleteஇதுவரை யாருமே கேட்காத நுட்பமான கேள்வி.
நமக்கெதுக்கு அந்த ஆராய்ச்சி ?எலிகள் வேண்டுமானால் அதை செய்துகொள்ளட்டும் !
Deleteநன்றி
நல்ல டவுட்!
ReplyDeleteஎனக்கும்டவுட் ! உங்கள் அப்டேட் கமெண்ட்&வோட்டைப் பார்த்து !நானும் உங்கள் பாணிக்கு வந்துட்டேன் பாஸ் !
Deleteநன்றி
பூனைக்கு கூட கண்டு பிடிச்சிடலாம் ஆனா.....ஆனானப்பட்ட பெண்கள் மனச கண்டுபிடிக்க முடியாதே(தோ)
ReplyDeleteஆனானப் பட்ட ஆணாலுமா முடியாது ?
Deleteநன்றி
ஹாஹாஅ ஆமாம் பூனை இதுல எங்க வந்துச்சு! விலங்குகள் பேசாட்டாலும் அதுங்கள மேய்கறது கூட ஈசிதானாம்.....மனிதர்களை அதுவும் பெண்களை கஷ்டம் அப்படினு சமீபத்தில் ரு விலங்கு மருத்துவர் சொல்வதைக் கேட்டேன்! உண்மைதான் போலும்!
ReplyDeleteத.ம.
இந்த பூனைக்கு எப்போ குறுக்கே வர்றதுன்னு தெரியாது போலிருக்கு ,அதை விடுங்க ...யார் அந்த விலங்கு மருத்துவர் ?எந்த அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்தார் என்று கேட்டு தெரிஞ்சுக்கணுமே !நிறையப் பாதிக்கப்பட்டிருப்பாரோ ?
Deleteநன்றி