31 March 2014

இருமனம் இணைவது திருமணம் தானே ?

''கல்யாண தரகர் முன்பு வெல்டிங் பட்டறை வைச்சுக்கிட்டு இருந்தார்னு எப்படி சொல்றே ?''
''இரும்பை இணைப்பது வெல்டிங் ,இதயத்தை இணைப்பது வெட்டிங்னு விசிட்டிங் கார்டுலே போட்டுக்கிட்டு இருக்காரே!''

37 comments:

  1. Replies
    1. அந்த தரகர் ரகசியமாய் என் காதில் கடித்தது .....நான் வைச்ச வெல்டிங்கை பிரிக்கவே முடியாது ,ஆனால் சமீபகாலமா நான் சேர்த்த தம்பதிகள் பிரிந்து விடுகிறார்களே !
      நன்றி

      Delete
  2. உங்களுக்கெல்லாம் எப்படி இப்படி எல்லாம் யோசிக்கத் தோன்றுகிறது ?!!:))))))))

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் நீங்கள் தரும் ஊக்கம்தான் !
      நன்றி

      Delete
  3. தங்களின் தமிழ்மண ஓட்டுப் பட்டையை இணைக்கும் பொறுப்பு
    இனி என்னது தானா ?..:)) த .ம 1

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ,இந்த வாரம் அந்த சிரமம் இருக்காது !
      அவனவன் இரும்பை இணைக்கிறான் ,தமபதிகளை இணைக்கிறான் ,நீங்க என் பதிவை இணைக்க கூடாதான்னு சொல்லத்தான் ஆசை ,ஆனா முடியலையே !அவ்வ்வ்வ்
      நன்றி

      Delete
  4. அஹா அருமையான வாசகம்
    மிகவும் ரசித்தேன்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சில பேர் கட்டிங்கை மட்டுமே ரசிப்பார்கள் ,வெல்டிங்கையும் வெட்டிங்கையும் நீங்க ரசித்ததற்கு நன்றி

      Delete
    2. இந்த கட்டிங்கை நீங்க ரசித்தமைக்கு நன்றி

      Delete
  5. Replies
    1. பட்டறைக்கார தரகர் சொல்றது நியாயம்தானே ?
      நன்றி

      Delete
  6. Replies
    1. முன்பு கஷ்டப்பட்டு கொஞ்ச சம்பாத்தியம் அவருக்கு ,இப்போ பவுனுக்கு இவ்வளவு கமிசன் என்று நல்லா சம்பாதிக்கிறார்அதான் இப்படி விசிட்டிங் கார்டு !
      நன்றி

      Delete
  7. Replies
    1. இப்பவும் ரெண்டு வீட்டார்க்கும் இடையில் வெல்டுதான் வைத்துக் கொண்டிருக்கிறார் !அதான் இந்த நியாயமான வாசகம் !
      நன்றி

      Delete
  8. ஒரு வரியில் சொன்னாலும் உன்னதமாய்ச் சொல்லி விட்டார் வெல்டிங் ஆசாமி!

    ReplyDelete
    Replies
    1. எதையும் நான் சொல்றதுக்கு நாலு வரி தேவைப் படுது,ஒரே வரியில் சொல்ற அவர் ,என்னைவிடக் கெட்டிக்காரர்தான் !
      நன்றி

      Delete
  9. இரும்பான இதயத்தை இணைப்பது வெட்டிங்னு-இப்டிதான் என் கண்ணுக்கு தெரியுது!
    :))))

    ReplyDelete
    Replies
    1. இரும்பு இதயம் திருமணம் ஆனதும் இளகி பாகுபோல் ஆகிவிடுவது உண்மைதான் ,போக போக மறுபடியும் இருமபாவதும் ,கரும்பாவதும் அவரவர் கையில்தான் !
      நன்றி

      Delete
  10. 'வெல்டிங்' ஐ உவமையாக்கி
    'வெட்டிங்' ஐ கருவாக்கி
    'வெடிங்' இன் நிலையை
    கல்யாணத் தரகர் சொல்கிறரோ!

    ReplyDelete
    Replies
    1. கல்யாணத் தரகர் சொல்ற ஆயிரம் பொய்யில் இதுவும் ஒண்ணாயிருக்குமோ?
      நன்றி

      Delete
  11. ‘வெட்டிங்’ ஒருவகையில் ’வெல்டிங்’தான். ரெண்டுபேரும் ‘பிரிய’ நினைச்சா, பஞ்சாயத்து, கோர்ட்டுன்னு வருசக் கணக்கில் அலையுறாங்களே!!!

    ReplyDelete
    Replies
    1. அலையாமே பிரிய இதுயென்னஅமெரிக்காவா ?
      நன்றி

      Delete
  12. Replies
    1. நீங்க ரைட்டு கொடுத்தா அது ரைட்டாத்தான் இருக்கும் !
      நன்றி

      Delete
  13. ஆஹா! அருமையான வார்த்தைக் கோர்வை! வெல்டிங்க், வெட்டிங்க் சரிதான்! ஜி! ஆனா வெட்டிங்க் வெல்டிங்க் ஆகும் போது என்னதான் வெல்டிங்க் பண்ணினாலும் உண்மையான இனிமையும், ஒட்டுதலும் இருக்குமா? ஜி?

    த.ம. (அருமையான பதிவு)

    ReplyDelete
    Replies
    1. தானா கனிவதற்கும்,கனிய வைத்ததற்கும் இனிமை மாறத்தானே செய்யும் ?
      நன்றி

      Delete
  14. Replies
    1. அவரோட தொழில்பக்தி விசிட்டிங் கார்டிலேயே தெரியுதே !
      நன்றி

      Delete
  15. கல்யாணம் ஆனவுட்டு உள்ளம் உருகுதையான்னு யாராவது பாடினா நாமிருக்க பயமேன்னு சொல்லுவாரா.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. யாரைக் கேக்குறீங்க ,தரகரையா?அவர்தான் பற்ற வைப்பதில் கில்லாடி யாச்சே !
      நன்றி

      Delete
  16. 'வெல்டிங்'; 'வெட்டிங்' சூப்பர் சிலேடை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இரண்டுமே இணைக்குங்கிறது பொதுவான அம்சம் ,ஆனால் இப்போதெல்லாம் மனித மனங்கள் பிரிவதற்கு தயங்குவதாக தெரியவில்லை !
      நன்றி

      Delete
  17. கடி தாங்க முடியவில்லை .............................

    நானும் சிரிச்சிடுறேன். ஹா..ஹாஹா

    ReplyDelete
    Replies
    1. எந்தக் கடி பதிவுக் கடியா ,கமெண்டுக்கு பதில் கடியா ?
      நன்றி

      Delete