27 March 2014

இது உண்மையா ?பெண்கள்தான் சொல்லணும் !

''நம்ம வீட்டில் நடக்கிறதெல்லாம் வெளியே போயிடுதுன்னு வாய் பேச முடியாத வேலைக்காரியை வச்சுக்கிட்டியே ,இப்ப ஏன் அவளை வேண்டாங்கிறே ?''
''நாலு வீட்டிலே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கலைன்னா எனக்கு மண்டை வெடிச்சிடும் போலிருக்கே !''

45 comments:

  1. Replies
    1. இப்படிப் பட்ட மனப்பான்மைதான் மெகா சீரியல்களையும் ஆர்வத்தோடு பார்க்க வைக்கிறது ,இல்லையா சீனி ஜி ?
      நன்றி

      Delete
  2. எவ்வளவு பெரிய தாராள மனப்பான்மை !ஒப்புக் கொண்டால்
    சரிதான் :)))))

    ReplyDelete
    Replies
    1. அந்த தாராள மனப்பான்மை உங்களிடம் இருக்கிறதா ,இல்லையா மேடம் ?
      நன்றி

      Delete
  3. ஒரு சமயம் உண்மையாகத் தான் இருக்குமோ....!!

    ReplyDelete
    Replies
    1. அதுதான் எனக்கும் சந்தேகமாயிருக்கே ,மேடம் !
      நன்றி

      Delete
  4. ஹா... ஹா... வேறு வேலைகள் இருந்தால் இந்த நினைப்பே வராது...

    ReplyDelete
    Replies
    1. இதை விட வேறு வேலைப் பெரிதா ?
      நன்றி

      Delete
  5. இத்தகையவர்களுக்கு மிகச் சரியான
    இடம் சொல்வதெல்லாம் உண்மைதான்

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்வதெல்லாம் உண்மைதானா .ரமணி ஜி ?
      நன்றி

      Delete
  6. அரிய கண்டுபிடிப்புதான் ,அதனால்தான் இந்த ஆகாவா?
    நன்றி

    ReplyDelete
  7. பாவம் அந்த வாய் பேசாத வேலைக்காரி! இப்படியே எல்லாரும் விரட்டினா அவ வயித்துப்பாட்டுக்கு என்னதான் செய்வா?

    ReplyDelete
    Replies
    1. அதுதானே ,அவ பொழைக்க வேணும்னா ஊர்வம்பை பேப்பரில் எழுதி கொடுக்க பழகிக்கணும் !
      நன்றி

      Delete
  8. தான் திருடி.. பிறரை நம்பாள்!.. - என்று ஒரு சொல்வழக்கு உண்டு.
    அதைப் போலத்தான் இதுவும்!.. ஆனால்!..
    எல்லாப் பெண்களும் இப்படி - ஊர் சேதிக்கு காது கொடுப்பதில்லை.
    ஏனெனில் அவர்களுக்குத் தெரியும் -
    இந்த இந்த வீட்டில் - இப்படி இப்படித் தான் நடக்கும் என்று!..

    ReplyDelete
    Replies
    1. சரியாச் சொன்னீங்க சொல் வழக்கை...உண்மைதான் எல்லாரையும் குறை சொல்லமுடியாது ...யூகிக்க முடிந்தாலும் ஊர்வம்பைக் கேட்பதில் அல்ப சந்தோசம் இருக்ககூடுமோ ?
      நன்றி

      Delete
    2. நன்றி துறை சார்! என்னை சபோர்ட் பண்ணதுக்கு( ஹி..ஹி)

      Delete
    3. ஹி..ஹி..துரை சார் சப்போர்ட்டா பண்ணி இருக்காரா ?
      நன்றி

      Delete
  9. பொண்ணுங்களை குறைசொல்லலை ன ஆண்களுக்கு தூக்கம் வரதே!
    நீங்க மட்டும் டீ கடைல பிரசங்கமா கேட்குறிங்க?
    நாங்களாவது அக்கம்பக்கத்து வீடு பத்தி பேசுவோம் , நீங்க ஊர் , உலகவம்பை விவாதம் என்கிற பேர்ல பேசுவிங்க! போங்க பாஸ் போய் பிள்ளைகுட்டிகளை படிக்கவைங்க !

    ReplyDelete
    Replies
    1. பெண்களை குறை சொன்னாத்தான் ஆண்களுக்கு தூக்கம் வரும் ,அப்படித்தானே ?நல்ல கண்டுபிடிப்பா இருக்கே ?
      மூளின்னா மூக்கைத் தொட்டுப் பார்த்துக்குவாளாம்...மேடம் இப்படி பொரணி பேசுறதெல்லாம் வேலை வெட்டி இல்லாதவங்க செய்ற வேலை ,நீங்கதான் ஜெம் ஆச்சே !
      பசங்ககிட்டே நான்தான் படிச்சு தெரிஞ்சுக்கிற காலமா ஆயிப் போச்சு !என்ன செய்றது ?அவ்வ்வ்!
      நன்றி

      Delete
    2. (ஹச் ! தும்மல்) ஒகே ,ஒகே சமாதானக்கொடியை பறக்கவிட்டாச்சு.
      நேத்து ஜோக் தொடர்ச்சி போல் ஒன்னு நடந்துச்சு சார்.
      என் ஸ்கூல் கல்வி குழு உறுப்பினர் புதுசா கல்யாணமான டீச்சர் ஒருத்தருக்கு வாழ்த்துசொல்ல வந்தார். அவங்க லஞ்ச்சுக்கு வீட்டுக்கு போய்டாங்க. அவர் என்னை பார்த்து இப்போ உங்க குடும்பம் எங்கிருக்கு மிஸ் என்றார். சக டீச்சர் டென்சன் ஆகி "சார் வனிதா லஞ்ச்க்கு வீட்டுக்கு போட்டாங்க , இந்த மிஸ் மகள் மூணாவது படிக்குது , நான் ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போறேன் என கலாய்ச்சு விட்டுடாங்க ! எனக்கு உங்க ஜோக் தான் நினைவுக்கு வந்துச்சு!

      Delete
    3. ஹாஸ்ய ரசம் தினம் பருகுவதால் உண்டான உங்கள் இளமையானத் தோற்றம் ,அவரை அப்படி நினைக்க வைத்து இருக்கலாம் இல்லையா ?
      நன்றி

      Delete
    4. பாருங்க ஜி! மைதிலி டீச்சர் இதைச் சாக்கா வைச்சு, தான் இளமையாக இருப்பதை அப்படியே மெதுவா எடுத்து விடறாங்க......!!!!!!!!!!!!!!!

      Delete
    5. அப்படி நினைப்பதில் தவறில்லையே ?உற்சாகமாக இருக்க உதவுமே !
      நன்றி

      Delete
  10. அது என்னவோ உண்மைதான் போங்க!.... :)))))

    ReplyDelete
    Replies
    1. இப்படி போட்டுத் தாக்குறீங்களே ஸ்ரீ ராம் ஜி !
      நன்றி

      Delete
  11. நடைமுறை ஜோக்!
    த.ம.9

    ReplyDelete
    Replies
    1. ஜோக்கை ஜோக்காத்தான் எடுத்துக்கணும் நன்றி குட்டன் ஜி !

      Delete
  12. வீட்டிற்கு வீடு வாசற் படி - அவங்க
    உள்ளத்தில் உள்ளதை உள்ள படி - நீங்க
    சொல்லி இருப்பதோ உண்மையின் படி!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு அடி வாங்கிக் கொடுக்காம விட மாட்டீங்க போலிருக்கே !
      நன்றி

      Delete
  13. சூப்பர். மத்தவங்க வீட்டு விஷயங்கள தெரிஞ்சிக்கணும். ஆனா நம்ம வீட்டுவிஷயம் வெளியில போகக் கூடாதுன்னு நினைக்கறவங்களாச்சே நம்ம வீட்டாளுங்க!!

    ReplyDelete
    Replies
    1. வெறும் வாயை மெல்லுறவங்க அவல் கிடைச்சா விடுவாங்களா ?இதில் ஒன் வே கிடையாதே !
      நன்றி

      Delete
  14. த.ம. +1

    இந்த வம்பு எனக்கு வேண்டாம்! :)))

    ReplyDelete
    Replies
    1. உண்மை சுடும் ,அப்படித்தானே வெங்கட் ஜி ?
      நன்றி

      Delete
  15. நல்ல தமாசு.........ஹா...ஹா...

    ReplyDelete
    Replies
    1. மாசாமாசம் காசு கொடுத்தால் தகவல் தரும் DTH மாதிரிதான் வேலைக்காரியும் !
      நன்றி

      Delete
  16. சுவையோ சுவை! ஆகா!

    ReplyDelete
    Replies
    1. ஊர் வம்பை வாங்கத்தான் கூடாது ,ஊர் வம்பை எல்லோரும் சுவைக்கத்தான் செய்கிறார்கள் !
      நன்றி

      Delete
  17. பகவான் ஜி! எல்லா பெண்களும் அப்படி கிடையாது ஜி!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. எல்லா பெண்களும் இப்படித்தான் என்றால் ,நீங்களும் நானும் நிம்மதியாக பதிவுகளைப் போட்டுக் கொண்டிருக்க முடியுமா ?
      நன்றி

      Delete
    2. நாம சரிதான் என்று சொல்லும் வேளையில் நண்பர் பால கணேஷ் சரிதா புராணமே எழுதி பதிவிட்டு விடுகிறாரே !
      நன்றி

      Delete