8 March 2014

ஐந்தறிவுக்கு உள்ள விசுவாசம் ஆறறிவுக்கு இல்லையே !

விசுவாசம் மிகுந்தது நாய் மட்டுமல்ல ...
கிளியும்தான் என்று நிரூபித்து உள்ளது ...
சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடந்து இருக்கும் ஒரு கொலை சம்பவம் ...
நீலம்சர்மா என்னும் பெயர் கொண்ட பெண்மணி கொலை செய்யப் பட்டுள்ளார் ...
வீட்டில் இருந்த நகை பணம் கொள்ளை போயுள்ளது ...
துப்பு கிடைத்த விதம் பற்றி கொலையான பெண்மணியின் கணவர் கூறியது ...
என் சகோதரி மகன் அசுதோஷ் சர்மாவை (30)வளர்ப்பு மகன் போல் பாவித்து வீட்டில் வளர்த்து வந்தேன் ...
என் மனைவி கொலை விசாரணைக்காக போலீசார் வரும்போது ...
என் மனைவி செல்லமாய் வளர்த்து வந்த கிளி ...
'ஆஷு,ஆஷு 'என்று கத்தியதுடன்..இயற்கைக்கு மாறாக விநோதமாக செய்கைகளுடன் சத்தம்போட்டது ...
இதை போலீசாரிடம் கூறினேன்...
அஷுதோசை விசாரித்ததில் குற்றத்தை அவன் ஒப்புக் கொண்டானாம்!
குற்றம் செய்து தப்ப நினைக்கையில் வீட்டு நாய் குறைத்ததாம் ...
அதையும் கொன்றிருக்கிறான் 'பசுத்தோல் போர்த்திய புலி 'அஷுதோஷ்!
ஐந்தறிவு ஜீவன்கள் கூட மனிதனுக்கு விசுவாசமாய் இருக்கின்றன ...
ஆறறிவு உள்ளவன்தான் வளர்ப்பு மகனாய் இருந்தாலும் ...
விசுவாசமின்றி கொலையும் கொள்ளையும் அடிக்கிறான் !

14 comments:

  1. மனிதர் எல்லாம் மாக்களாக நடக்கும்பொழுது மாக்கள் எல்லாம் மனிதர்கள் போல் நடந்துக்கொள்வது அதிசயமே !

    ReplyDelete
    Replies
    1. மாக்கள் என்று சொல்லி அவைகளை கேவலப் படுத்தாதீங்க கிங் ஜி !
      நன்றி

      Delete
  2. ஓரறிவில் இருந்து ஐந்து அறிவு உயிர் வரை எவ்வுயிருக்கும் பொறாமை உணர்ச்சி கிடையாது.
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. நம்பினோரைக் கெடுக்கும் எந்த உணர்வும் இல்லையென்றே சொல்லலாம் !
      நன்றி

      Delete

  3. சிந்திக்க வைக்கும்
    சிறந்த பகிர்வு

    ReplyDelete
    Replies
    1. சிந்தித்து ஒரு ஆள் திருந்தினாலும் பகிர்வு வெற்றிதான் !
      நன்றி

      Delete
  4. விசுவாசம் கொண்ட நாய் கிளி தகவல்கள் சுவரசியம் பகவான்ஜீ,
    நாய் கிளி வளர்பதில் வெளிநாடுகளில் பொது apartment களில் கடுமையான கட்டுபாடுகள் (அனேகமாக வைத்திருக்கவே முடியாதென்றவில்) உண்டு.

    ReplyDelete
    Replies
    1. ஐந்தறிவு ஜீவனை ஆறறிவு மனிதன் தடுப்பது பகுத்தறிவு செயல்தானா ?
      நன்றி

      Delete
  5. நமக்கு தான் யார் நல்லவங்க யார் கெட்டவங்கன்னு புரிஞ்சுக்க முடியமாட்டேங்குது

    ReplyDelete
    Replies
    1. ஐந்தறிவு ஜீவனை நம்பி விடலாம் போலிருக்கே!
      நன்றி

      Delete
  6. ஆறறிவை விட ஐந்தறிவே மேல்! ஜி எப்போதுமே! விசுவாசம், எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாத அன்பு! எல்லாவற்றிலுமே! எங்கள் இருவர் வீட்டிலும் வளரும் எங்கள் செல்லங்கள்! அதற்கு சாட்சி! அவற்றை தாரளமாக நம்பலாம்! ஜி!

    நல்லதொரு பகிர்வு!

    ReplyDelete
    Replies
    1. மனித மன விகாரங்கள் ஒழிய இன்னும் எத்தனை நூறாண்டுகள் ஆகுமோ ?இத்தனை தலைமுறை கடந்த பிறகும் மனிதன் குணத்தில் குரங்கை விட கீழாய்த்தானே இருக்கிறான் ?
      நன்றி

      Delete
  7. ஆதங்கம் தான்..... :(

    மனிதர்களின் ஆசைக்கும் அளவே இல்லாது போய்விட்டது... சொந்தங்களையே கொலை செய்யும் அளவிற்கு!

    ReplyDelete
    Replies
    1. மிருகங்களுக்கும் கூட பிடிக்காத செயலை செய்யும் இவர்களை என்னவென்று சொல்வது ?
      நன்றி

      Delete