2 March 2014

இதுக்கு ரூம் போட்டு யோசிச்ச மாதிரி தெரியலே !

நகையை அடகு வைச்ச சீட்டை ரொம்ப பத்திரமா வச்சிக்கணும் போலிருக்கு ...
நகை திருப்புறதுக்கு முன்னாடியே மர்ம மனிதர்களிடம் கூட காட்ட வேண்டிய நிலைமை உண்டாகி விட்டது ...

நான்கு நாட்களுக்கு முன்னால் மதுரை செக்கானூரணியில் ...
மூன்று வீடுகளில் கொள்ளை அடித்து உள்ளார்கள்...
ஒரு வீட்டில் இருந்த பெண்மணியிடம் நகை ,பணத்தைக் கேட்டு மிரட்டி உள்ளார்கள் ...
எதுவும் தன்னிடம் இல்லையென்று சொல்ல ...
கொள்ளையர்கள் நம்ப மறுத்து பாசத்துடன் ...
முறைப்படி திருமணம் நடந்ததா ,ஓடிப் போய் கட்டிகிட்டியா என்று கேட்க ...
முறைப் படிதான் நடந்தது என்று சொல்ல ...
அப்படின்னா ,கல்யாண ஆல்பத்தை காட்டு என ,அதைப் பார்த்து ...
கல்யாண கோலத்தில் அணிந்து இருந்த நகைகள் எங்கே என்று கேட்க ...
அடகு வைத்து இருப்பதாக அந்த பெண்மணி சொல்ல ...
நம்ப மறுத்த கொள்ளையர்கள் ...
அடகுசீட்டை பார்த்த பின்தான் ...
கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடியிருக்கிறார்கள் !
எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் இந்த கொள்ளைக் காரர்களும் !

27 comments:

  1. துப்பாக்கி திரைப்படத்தில் ஒரு வீட்டில் திருமண ஆல்பத்தை வைத்து ஹீரோவை வில்லன் கண்டுபிடிக்கிறார். நம்ம இந்த வில்லன்களும் அதைப் பார்த்து அறிவை வளர்த்தார்கள். ஓங்குக தமிழகம். வளர்க திரைப்படங்கள்.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. டைரக்டரைக் கேட்டால் சமுதாயத்தில் நடப்பதை தானே காட்டுகிறோம் என்பார் ,திரைப்படம் பார்த்து திருந்துறவங்க யாரும் இருக்கிற மாதிரி தெரியலே ,அப்படிப் பட்ட படங்களும் வர்ற மாதிரி தெரியலே !எல்லாம் காசு பணம் துட்டு மணி செய்ற வேலைதான் !
      நன்றி

      Delete
    2. மாணவர்களுக்கு காதலிக்கக் கற்றுக் கொடுக்கிறார்களே. இது சாதாரணமான விசயமா.

      ந்ன்றி,

      கோபாலன்

      Delete
    3. நல்லாவே கற்றுத் தர்றாங்க ,கிளைமாக்ஸ் தான் தண்டவாளத்தில் போய் முடியுதே!
      நன்றி

      Delete
  2. அடேங்கப்பா...! சோதனை வேறு இப்போது செய்கிறார்களா...?

    நாசமாய்ப் போச்சி...!

    ReplyDelete
    Replies
    1. நல்ல முன்னேற்றம்தான் ,இல்லையா ஜி ?
      நன்றி

      Delete
  3. திருட வரவங்க இதெல்லாம் கூட கேக்கறாங்களா? விளங்கிடும்!

    ReplyDelete
    Replies
    1. போறப் போக்கைப் பார்த்தா,எல்லாம் சேப்டி லாக்கர்லே இருக்குன்னு சொன்னா ,வெட்டி போட்டுட்டு போயிடுவாங்க போலேயிருக்கே !
      நன்றி

      Delete
  4. அப்படின்னா, ஆல்பத்தில் அடகு கடை சீட்டையும் ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ள வேண்டியதுதான் இனிமேல்!

    ReplyDelete
    Replies
    1. எந்த நகையோட அடகு சீட்டுன்னு தெரிஞ்சுக்கிற மாதிரி விவரமா ஸ்கேன் செய்றது பெட்டர்!
      நன்றி

      Delete
  5. Replies
    1. கொள்ளை அடிப்பதிலும் வித விதமா பாணி இருக்கும் போலிருக்கே .இல்லையா ஜி ?
      நன்றி

      Delete
  6. ஹாஹா ஆஹா....கொள்ளையர்கள் இன்டெர்வியூ கூட செய்துவிட்டுத்தான் கொள்ளயடிப்பார்களோ?! நவீன கொள்ளையர்கள்!? சரி அதுவரை ரொம்ப நேர்மையாக அந்தப் பெண்மணி பதில் வேறு சொல்லிக் கொண்டிருந்தாரா?!!!!! ஏதோ நண்பர்கள் போல.....

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. கத்தி முனையில் கேட்கும் போது உண்மையை சொல்லித்தானேஆக வேண்டி இருக்கும் ?
      நன்றி

      Delete
  7. இவர்களை இண்டர்போல் திருடர்கள் என்று சொல்லலாம்

    ReplyDelete
    Replies
    1. விட்டால் ஜாதகத்தை கேட்பார்கள் போலிருக்கே !
      நன்றி

      Delete
  8. கொள்ளைக் காரர்களும்
    அடகுசீட்டும்
    சிறந்த பகிர்வு

    ReplyDelete
    Replies
    1. அனேகமா பரிதாபப்பட்டு நகையை திருப்ப உதவுவார்களோ ?
      நன்றி

      Delete
  9. எப்படியெல்லாம் யோசிக்கறாங்க!

    ReplyDelete
    Replies
    1. நல்ல வழியில் இவ்வளவு ஆழமா யோசித்து இருந்தால் எங்கேயோ போயிருப்பாங்க !
      நன்றி

      Delete
  10. படித்தவர்கள் திருடர்கள் ஆவதால்
    வருகிற துயரங்களில் இதுவும் ஒண்ணு

    ReplyDelete
    Replies
    1. பாரதியின் வாக்கு பலிக்கட்டும் ...படித்தவன் சூது செய்தால் ....!
      நன்றி

      Delete
  11. நாங்களும் சமூதாயத்தைப் பற்றி சிந்திப்போமில்லே,ஜோதி ஜி ?
    நன்றி

    ReplyDelete