17 March 2014

இதுக்கு அப்படியும் ஒரு அர்த்தம் இருக்குமோ ?

''எங்க கடை ஆப்பிள் மேலே  export qualityன்னு ஸ்டிக்கர் ஓட்டியிருக்கோம் ...அதாவது மேல் நாட்டுக்கு போகும்  தரம்னு ,உங்களுக்கென்ன சந்தேகம் ?''
''பிறகேன் ,நேற்று ஆப்பிளை சாப்பிட்டவுடனே என் நண்பர் மேலோகம் போய் சேர்ந்தார்?''
''ஸ்டிக்கரைக் கிழிக்காம சாப்பிட்டு இருப்பார் சார் !''

32 comments:

  1. :))))

    மேலோகத்துக்குப் போக ஸ்டிக்கர்தான் டிக்கெட் போல!

    ReplyDelete
    Replies
    1. கொல்ல சதி செய்து ஸ்டிக்கரில் சயனைட்டை கலந்து இருப்பாகளோ ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. பழத்துக்கு பதிலா ஆளையே மேலே அனுப்பிடுவாங்க போலிருக்கே !
      நன்றி

      Delete
  3. மேலோகம் போக எளிதாக ஸ்டிக்கர்...! ???

    ReplyDelete
    Replies
    1. Expiry தேதியுடன் இப்படி ஸ்டிக்கர் எல்லோர் மேலும் இருந்தால் மனிதன் இந்த ஆட்டம் போடுவானா ?
      நன்றி

      Delete
  4. an apple a day keeps the doctor away!என்பதற்கு அதுதான் அர்த்தமோ?

    ReplyDelete
    Replies
    1. போஸ்ட்மார்ட்டம் பண்ண வேண்டுமானால் டாக்டர் தேவைப் படலாம் !
      நன்றி

      Delete
  5. Replies
    1. ஒரு கொலைக் குற்றமே நடந்திருக்கு ,வக்கீல் நீங்களே இப்படி சிரிக்கலாமா ?
      நன்றி

      Delete
  6. அதுதானே! இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா கோளாறு அதுதான்னு நீங்களும் சொல்றீங்களா ,அய்யா ?
      நன்றி

      Delete
  7. Mr. C.,
    ஆப்பிள் தின்றால் நோய் வராது!..
    Mr. P.,
    தின்று விட்டு இருந்தால் தானே நோய் வர்றதுக்கு!..

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீங்க ,நோய் வரும் முன்பே போய் சேர்ந்திட்டா நல்லதுதானே ?
      நன்றி

      Delete
  8. அட..... சுலபமா மேலே அனுப்பிடுவார் போல!

    ReplyDelete
    Replies
    1. யாருக்கும் தொந்தரவு இல்லாமே போய் சேர்ந்தா நல்ல ....னே?
      நன்றி

      Delete
  9. அந்த ஸ்ட்டிக்கர் மேல Straight to heavenனு எழுதியிருந்துதோ என்னவோ:))

    ReplyDelete
    Replies
    1. யாருக்கு தெரியும் போய் சேரும் இடம் heavenஆ ,hellஆ என்று ?
      நன்றி

      Delete
  10. நல்லவேளை ,அந்த ஆப்பிள் எக்ஸ்போர்ட்ஆகி அமெரிக்காவுக்கு வராம போச்சு ,இல்லையா நம்பள்கி ?
    நன்றி

    ReplyDelete
  11. ஹஹஹஹ! வக்கீல்னா உங்க ஜோக்குக்குச் சிரிக்கக் கூடாதா என்ன?ஜி ? !!!!!!!!!!!!!!!! இந்த மாதிரி ஜோக் போட்டா சிரிக்காம என்ன பண்ணுவாரு ஜி!

    ReplyDelete
    Replies
    1. அவரோட தளம்'நண்டு நொரண்டு'பேரைக் கேட்டாலே எனக்கு சிரிப்பு வரும் !
      நன்றி

      Delete
  12. ஹா ஹாஹா செம ஜோக் ஜி! அட இப்ப வர்ர ஆப்பிளுக்கு எல்லாம் ஸ்டிக்கரே வேண்டாம் ஜி! எல்லாம் உடம்புக்கு கேடு விளைவிக்கும் ரசாயன்ம் போட்டு விளையுதே! அதுவே போதும்!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. அது சரி ,பலவும் பார்க்கத்தான் ஆப்பிள் மாதிரி இருக்கு ,சாப்பிட்டா பேரிக்காய் மாதிரி இருக்கே !
      நன்றி

      Delete
  13. //Expiry தேதியுடன் இப்படி ஸ்டிக்கர் எல்லோர் மேலும் இருந்தால் மனிதன் இந்த ஆட்டம் போடுவானா ?//

    டைம்லி விட்! அருமை! ஜி!

    ReplyDelete
    Replies
    1. மரண பயம் வந்தாலாவது மனிதன் திருந்துவானா ?
      நன்றி

      Delete
  14. தங்களின் லொள்ளுப் புலமை வளர்ந்துகொண்டே போகுது :))
    வாழ்த்துக்கள் சகோதரா .

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்றது ,உங்களுக்கு இருக்கிற கவிதை புலமை எனக்கு இல்லையே ?
      நன்றி

      Delete
  15. இந்த ஸ்டிக்கரை ஒட்டி படாதபாடு படுத்துகிறார்கள்!

    ReplyDelete
    Replies
    1. நேற்று நான் ஸ்டிக்கரைக் கிழிக்க பட்ட பாடுதான் ,இன்னைக்கு உங்களை இந்த பாடுபடுத்திக்கிட்டிருக்கு !ஆப்பிள் தின்கிற ஆசையே போச்சு !
      நன்றி

      Delete
  16. ஒரு ஆப்பிள் வாங்குனது குத்தமா ?
    ஹா...ஹா...

    ReplyDelete
    Replies
    1. வாங்கலாம் ,export qualityன்னு ஸ்டிக்கர் ஒட்டாத ஆப்பிளா பார்த்து வாங்கணும் !
      நன்றி

      Delete