13 December 2014

லிரில் மாடல் லிசாரேயும், ஹசாரேயும் .....!

----------------------------------------------------------------------------------------

அவங்களுக்கு மட்டும் சூடு சொரணை அதிகமோ  ?


                 '' தூத்துக்குடியில் அரசியல் பண்றது  கஷ்டமா இருக்குன்னு ஏன் சொல்றீங்க ,தலைவரே ?''

                 ''கட்சி மாறினா ....உப்பு விளையுற ஊர்லே பிறந்துட்டு ,உப்பு போட்டு  சாப்பிடுற மாதிரி தெரியலேன்னு கேவலமா பேசுறாங்களே!''




சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

பஸ்ஸிலே ஜாலிக்கு எதுவும் இருக்குமோ ?

              ''டைம் பாஸ் ரைடர்ன்னா  என்னான்னு
தெரிஞ்சுக்காம  அந்த பஸ்லே ஏறினது தப்பாப் போச்சா ,ஏன் ?''
              ''ஒரு மணி நேரத்திலே போக வேண்டிய ஊருக்கு மூணு மணி நேரமாகுதே !''


இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....
                            
                                 வெங்கட் நாகராஜ்13 December 2013 at 09:12
                                   அட... தமிழகத்தில் பாதி பஸ் டைம் பாஸ் ரைடர் தான்!
ReplyDelete

Replies


  1. உங்க டெல்லியிலே ரெட் லைன் பஸ்கள் ,மக்களுக்கு டெட் லைன் பஸ்கள் போலிருக்கே !
    நன்றி

  1. சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
  2. லிரில் மாடல் லிசாரேயும்.காங்கிரசை டிரில் வாங்கும் ஹசாரேயும் .....!


  3.             ''என் பையனுக்கு நாட்டு நடப்பையும் தெரிஞ்சுக்க சொல்றீங்களே ,ஏன்?'
                  ''லிசா ரேயை தெரியும் ,ஹசாரேன்னா  யாருன்னு  கேட்கிறானே !'' 


' பேஸ்ட்டு கூட வேஸ்ட் ஆகாது ...ஆனால் ?

வெளியே வந்த பேஸ்ட்டும் ,பேச்சும் 
ஒரு விதத்தில்  ஒன்றுதான் ...
மறுபடியும் உள்ளே போகாது !

18 comments:

  1. 01. அப்படீனாக்கா தேவகோட்டை பக்கத்துல இருக்குற உப்பூர்க்காரவுங்க உப்புப்போட்டு சாப்பிடலையா ?

    02. சீக்கிரமா போகச்சொன்னத்தான் சீக்கிரமா மேலே கொண்டுபோயிறாங்களே....

    03. இதுதான் ஆண்பால் பெண்பால் வித்தியாசமா ?

    04. பேஷ்ட் மறுபடியும் வாய் உள்ளே போகுதே...

    தமிழ்மணம் 1
    தமிழ் மண்ம் இணைத்து விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. 1.உங்க பக்கத்து ஊர்தானே ,கேட்டுச் சொல்லுங்க :)
      2.அதுவும் வாஸ்தவம்தான் :)
      3.ஆவின் பாலுக்கும் ,அமலா பாலுக்கும் உள்ள வித்தியாசம்கூட :)
      4.டியூப்பில் இருந்து வந்ததை சொன்னேன் ,டியூப் லைட்டுக்கு புரியலையோ :)
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    தத்துவங்கள் எல்லாம் அருமையாக உள்ளது.. த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. எளிமையான தத்துவம் ,புரிந்து கொள்ள கஷ்டமில்லையே :)
      நன்றி

      Delete
  3. Replies
    1. உங்க பள்ளி பையங்க எப்படி ,ஹசாரேயை தெரிந்து வைத்திருக்கிறார்களா :)
      நன்றி

      Delete
  4. முடிவில் என்னமா யோசிக்கிறீங்க ஜி...~

    ReplyDelete
    Replies
    1. முடியைப் பிச்சிக்கிட்டு யோசிச்சதாச்சே அது :)
      நன்றி

      Delete
  5. கட்சி மாறுவதற்கு இருக்கிற இந்த பயம் இப்போது உள்ள அரசியல்வாதிகளிடம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. சோற்றுக்குப் பதிலா உப்பை மட்டுமே சாப்பிட்டாலும் ரோசம் வராது ,பயமா வரப் போவுது :)
      நன்றி

      Delete
  6. ஜோக்ஸ் சிரிக்க வைத்தன! கடைசி பஞ்ச் கலக்கல்!

    ReplyDelete
    Replies
    1. பேஸ்ட் வேஸ்ட் ஆகலே ,அப்படித்தானே :)
      நன்றி

      Delete
  7. ஹஹஹஹ செம....கடைசில பேஸ்ட் வைச்சு பெஸ்ட் ஆக்கிட்டீகளே ஜி!

    ReplyDelete
    Replies
    1. அதுதான் 'டாப்'பில் வரவேண்டியதோ :)
      நன்றி

      Delete
  8. ,ஹசாரேன்னா யாருன்னு கேட்கிறானே !'' --- ஆமா..நானும் கேட்கிறேன்..அவரு யாரு...???

    ReplyDelete
    Replies
    1. லிசாரே குளித்த சில்வர் ஃ பால்ஸ் -ல் குளித்துப் பாருங்க ,நினைவுக்கு வரலாம் :)
      நன்றி

      Delete
  9. வந்துவிட்டது...நண்பரே!....குல்லாவை கண்டதும் நிணைவுக்கு அம்புட்டும் வந்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. குல்லாவை எறிந்த குரங்கு கதையும் ஞாபகத்திற்கு வந்திருக்குமே :)
      நன்றி

      Delete