31 December 2014

பெண்களையும் விடுவதில்லையே பெண் கொசுக்கள் !

-----------------------------------------------------------------------------------------------------------------------------

நல்ல பொருத்தம் தான் !
            ''ஜோடிப்பொருத்தம் சூப்பர்னு சொல்றீங்களே ,ஏன் ?''
            ''தூக்கத்திலே  எழுந்து  நடந்தாக்கூட அந்த தம்பதிகள் ஜோடியா நடக்கிறாங்களே !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டலே,ஆணுக்கு மட்டும்தானா?

              ''சிறைக்குப் போன தலைவர்  கஞ்சாவுக்கு  அடிமை ஆயிட்டாராமே ?''
            '' சிறைக்'கஞ்சா ' சிங்கம்கிற  பட்டம் இப்பத்தான் அவருக்கு ரொம்பப் பொருத்தமாயிருக்கு !'


இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....



தமிழ்மணம் +1
சிங்கம் எப்பவும் சிங்கிளா தான் போகும் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.
இந்த சிங்கம் எப்படி?
சிங்கிளா போச்சா என்ற விவரம் சொன்னால் நலம்!
ReplyDelete
  1. சிங்கம் எப்படி போச்சுன்னு சொன்னா அசிங்கம் ,சின்ன வீடும் ஜெயிலுக்குள்ளே தான் !
    நன்றி

  2. ஹாஹாஹா.....நல்ல ஜோக்!! ஜி!! " சிறைக்'கஞ்சா 'சிங்கங்கள்" நிறைய இருக்காங்கனு சொல்லுங்க!!!

    சிங்கம் எப்பவும் சிங்கிளாதான் (நம்பள்கி) போகும் என்பது எல்லாம் சினிமாலதான்!!!! "சிறைக்கஞ்சா சிங்கம்" எல்லாம் தனியா எல்லாம் வராதுங்க!!! pride ஆகத்தான்!!! தலவர்கள் என்றாவது தனியாக வந்தார் என்ற சரித்திரம் உண்டா?!!!!!!

    [தகவல்: Cat family யைச் சேர்ந்த விலங்குகள் தனியாக வாழும் என்றாலும் cat family யைச் சேர்ந்த சிங்கம் விதிவிலக்கு. அவை கூட்டம் "pride" ஆகத்தான் வாழும்! social system based on teamwork and a division of labor within the pride, an extended but closed family unit centered around a group of related females. ஒரு வேளை உணவைத் தனியாக அடிப்பதால் சினிமாவில் ரஜனிக்காக எழுதப்பட்ட டயலாக்காக இருக்கலாம்]
    ReplyDelete


    1. தலைவர்கள் தொண்டர்களுடன் சிறைக்கு வந்தவுடன் நெஞ்சு வலி வந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி விடுவார்கள் !
      சினிமா டயலாக் தனி மனித ஆராதனைக்கு எழுதப்படுபவை ...தகவலில் நீங்கள் சொன்னமாதிரி உண்மைக்கும் ,சினிமாவுக்கும் வெகுதூரம் !
      நன்றி

பெண்களையும் விடுவதில்லை பெண் கொசுக்கள் !
கொசுத் தொல்லையை  ஒழிக்க என்ன செய்தாலும் பலன் இருப்பதாகத் தெரியவில்லை ...
நம் அரசுத் தரப்பிலும் கொசு முட்டை நிலையில் இருக்கும்போதே தின்றுவிடக் கூடிய மீன்களை நீர்நிலைகளில் விட்டுப் பார்த்தார்கள் ...
கொசு முட்டைகளை மீன் தின்றதாகத் தெரியவில்லை ...
மனிதர்கள்தான் மீன்களை பிடித்து தின்று விட்டார்கள் போலிருக்கிறது ...
மீன்கள் காணாமல் போய்விட்டன ...
கொசுக்கள் பல தலைமுறைகள் தாண்டி பெருகிவிட்டன ...
ஸ்பைனிலும் இந்த தொல்லைதான் ...
முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல ...ஸ்பெயின் மரபியல் விஞ்ஞானிகள் ஆலிவ் பழக் கொசுக்களை உருவாக்கி இருக்கிறார்கள் ...
அவை ஆலிவ் மரங்களில் அடைந்துக் கிடைக்குமாம் ...
அரிப்பெடுத்த பெண் கொசுக்கள் ஆலிவ் பழ ஆண் கொசுக்களுடன் இணையுமாம்...
ஆண் கொசுவின் அணுக்கள் பெண் கொசுவை அடைந்ததும் ...
பெண் கொசு, ரத்தம் கக்காமலே இறந்து விடுமாம் ...
ஏழு கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப் பட்டால் ...சில மனித உரிமைப் போராளிகள் நம்ம ஊரில் எதிர்ப்பு தெரிவிப்பதைப் போல ...
இந்த ஆலிவ் பழக் கொசு சுற்றுச்சூழலுக்கு தீங்கு என்று போர்க்கொடி தூக்குகிறார்களாம் சில ஆராச்சியாளர்கள் ...
கொசுக்கடியில்  இருந்து மனித இனத்திற்கு எப்போதுதான் தீர்வு கிடைக்குமென்று தெரியவில்லை ...
நமது மீனவர் பிரச்சினைப் போல் நீண்டுகொண்டே செல்கிறது !
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....
ஆலிவ் கொசுக்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்! அது போன்று மற்றொரு விதமான காட்டுக் பூச்சி இருப்பதாகப் படித்ததாக நினைவு. அவற்றை வளர்த்தால் நம்மைக் கடிக்கும் கொசுக்களைத் தின்று விடுமாம்!நன்றி!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!! புத்தாண்டிலும் எங்களை எல்லாம் சிரிக்க வைத்து கலக்குங்கள்! எல்லோரும் சிரித்து நோயில்லாது இருக்கட்டும்!
                              Bagawanjee KA1 January 2014 at 07:39
யாராவது ஸ்பெயினில் இருந்து வந்தால் ஆலிவ் பழக் கொசுவைக் கொண்டுவரச் சொல்லணும் !
வாழ்த்திற்கு நன்றி
2012ம் இதே நாளில் ,ஜோக்காளியில்.....
படையெடுத்து எங்கும் செல்லாமல் எதிரியைக் கொல்கிறது ...
நூலாம் படை !


41 comments:

  1. தமிழ் மணம் இணைப்பு வாக்கு 1
    கருத்து காலை....

    ReplyDelete
    Replies
    1. உதவிக்கு நன்றி ...ஒன்று செய்தாலும் நன்று செய்தீர்கள் :)

      Delete
    2. காலை வாரிவிடாமல் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி :)

      Delete
  2. வணக்கம்
    ஜீ
    ஜோடியா போவது பாசம் அதிகம்.....
    சிறையில் இவை எல்லம் அரசியல் கலாட்டா...
    எங்கும் இல்லாத போதைப்பொருள் அங்குதான் உள்ளது..
    இறுதியில் சொல்லிய கருத்து நன்று பகிர்வுக்கு நன்றி த.ம2
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இப்படி போறதைப் பார்த்தா கொள்ளைக்காரனுக்கு வசதியாய் போய்விடாதா :)

      காசிருந்தால் எதை வேண்டுமானாலும் வாங்கலாம் ,கேட்டால் சிறைவாசம் சீர்த்திருத்தத்தான் என்பார்கள் :)
      வாழ்த்துக்கு நன்றி

      Delete
  3. பகவானே,
    கொண்டு வருக என்பதற்கு டங் சிலிப்பாகி கொன்று வருக என்று சொல்லிவிட்டால், பின் கொசுத் தொல்லையே இருக்காதல்லவா?
    வாக்குப் பலிக்கட்டும்!
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. எப்டி ண்ணா!!! எப்டி !!
      பகவான் பாஸ் தளத்துக்கு வந்தா எல்லோரும் இப்பிடி flow ஆ ஜோக் அடிக்குறீங்க!!!

      Delete
    2. டங் சிலிப்பாகவே வேணாம் ,கொண்டு வருக என்றோ கொன்று வருக என்றோ உத்தரவு யாருக்கு போடுவது :)

      Delete
    3. மைதிலி மேடம் ,இங்கே வர்றவங்க உங்களை மாதிரியே மைன்ட் ரிலாக்ஸ் ஆகி விடுறாங்களே :)

      Delete
  4. பார்த்து இறக்கும்போது கூட ஜோடியா இறந்துவிட போகிறார்கள்
    நூலாம்படைக்கு இப்படி ஒரு அர்த்தமா?

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தூங்கிட்டே நடந்தா அதுதான் நடக்கப் போகிறது :)
      இந்த படையிடம் உயிர்வீடும் ஜீவன்களை நீங்கள் பார்த்ததில்லையா :)

      Delete
  5. அந்த தம்பதிக்கு கடன் கொடுக்கிறவங்க ரொம்ப சாக்கிரதையா இருக்கோணும்!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாமா ,தூக்கத்திலே ஓடக் கூட செய்வாங்க :)

      Delete
  6. சிறைக்கஞ்சா சிங்கம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. இனி இந்த பட்டத்தை வேண்டாமென்பாரோ:)

      Delete
  7. ஹா... ஹா... இதுவல்லவோ பொருத்தம்....!

    ReplyDelete
    Replies
    1. வீட்டில் வேறு யாரும் இல்லையென்றால் வருத்தம்தான் படவேண்டியிருக்கும் ,பீரோ இருந்ததெல்லாம் காணலியே என்று !

      Delete
  8. சிரித்து ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு மிக்க நன்றி

      Delete
  9. ...ஆணென்ன பெண்னெ்ன என்று எந்த நிலையிலும் வேறுபாடு பார்க்காத கொசு இததான் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. கடிப்பது பெண் கொசுக்கள் மட்டும்தான் என்று பெருமைப்பட்டு கொள்பவனை ஆணாத்திக்கவாதி எனலாமா :)

      Delete
  10. ஜோக்ஸ் சூப்பர்! கொசுத்தொல்லைக்கு விடிவே இல்லை போல! நூலாம்படை கவிதை சிறப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு விஞ்ஞானம் முன்னேறிய நிலையிலும் கொசுவை ஒழிக்க முடியாதது வருத்தற்குரிய விசயம்தானே :)

      Delete
  11. 01. பொருத்தம் நல்லா இருக்கு இதே ஜோடி பஸ் ஸ்டாண்டின் பப்ளிக் டாய்லெட்டுக்கும் போகாமலிருந்தால் சரி.

    02. பட்டம் இப்படித்தான் கொடுக்கிறாங்களா ? இது தெரிஞ்சிருந்தா... நானும்...

    03. கொசுவைக்கூட ஜார்ஜ் புசு ரேஞ்சுக்கு கொண்டு போயிட்டாங்களே....

    04. அடடே... அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் பழமொழியை இதுக்கும் உபயோகப்படுத்தலாமோ...

    இனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள் பகவானே...

    ReplyDelete
    Replies
    1. 1 தனிதனியாய் போனால் தவறில்லையே :)
      2 .உங்களுக்கு எதுக்கு சிறையும் ,கஞ்சாவும்?அப்படி ஒரு பட்டமே வேண்டாமே :)
      3.அபுதாபியில் கொசுக்கடி இல்லை போலிருக்கே :)
      4.தெய்வம் நின்று கொல்ற மாதிரியும் ,உட்கார்ந்து கொல்ற மாதிரியும் எனக்கு தெரியலே :)
      அன்பான உங்கள் வாழ்த்துக்கு நன்றி !

      Delete
  12. எப்படி இருந்தாலும்
    இப்படியொரு பொருத்தம்
    உருப்படியாக அமைந்திருக்கிறதே

    ReplyDelete
    Replies
    1. உருப்படியாய் வீடு வந்து சேர்ந்தால் மகிழ்ச்சிதான் :)

      Delete
  13. ஹ்ஹஹ்ஹ் அனைத்தையும் ரசித்தோம்.

    ஜி அந்த கீதா.ஆர் "ஆர்" என்று தெரியுமா? தில்லையகத்தில் துளசியுடன் எழுதுபவர்தான்....மிக்க நன்றி ஜி!

    எங்கள் பின்னூட்டத்தைக் கொடுத்ததற்கு!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    அன்புடனும் நட்புடனும்

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. மேடம் ,அதிகமாய் யாருக்கும் கமெண்ட் போடுவதாக தெரியவில்லை ,எனக்கு போட்டிருப்பதில் எனக்கும் மகிழ்ச்சி ,அதனால்மீண்டும் பகிர்ந்துகொண்டேன்:)
      அன்பான உங்களிருவரின் வாழ்த்துக்கு நன்றி !

      Delete
  14. பாஸ் க்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. அன்பான உங்கள் வாழ்த்துக்கு நன்றி !

      Delete
  15. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஜி...

    ReplyDelete
    Replies
    1. அன்பான உங்கள் வாழ்த்துக்கு நன்றி !

      Delete
  16. அனைத்தையும் ரசித்தேன்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கும் ,அன்பான உங்கள் வாழ்த்துக்கும் நன்றி !

      Delete
  17. எனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,
    அனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,

    "புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"

    என்றும் நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. அன்பான உங்கள் வாழ்த்துக்கு நன்றி,நம்பி ஜி !

      Delete
  18. பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

    புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
    சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
    தேனுாறும் வண்ணம் திளைக்கட்டும்! செந்தமிழில்
    நானுாறும் வண்ணம் நடந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. கவிதையிலேயே வாழ்த்து கூறிய உங்களுக்கு அன்பான என் நன்றி !

      Delete
  19. புத்தாண்டில் எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டில் பூரிக்கட்டை அடியில் இருந்து தப்பிக்க வழியேதும் இருந்தால் அதையும் சொல்லி வாழ்த்துங்கள் அய்யா :)

      Delete