அன்பார்ந்த வலையுலக உறவுகளே .....
(நேற்று நம்ப நம்பள்கி ஒரு (இல்லை இரண்டு ) பதிவைப் போட்டு அதகளம் பண்ணி இருக்கிறார் ..இதோ அந்த லிங்க் ...பகவான்ஜிக்காக: லிங்காவைப் பார்த்த பூனை!
படித்து ர 'சீ' ' யுங்கள் ! )
--------------------------------------------------------------------------
''முதல் இரவும் அதுவுமா ,முதல் காரியமா நம்ம ரெண்டு பேர்லே யாராவது ஒருத்தர் பெயரை அவசியம் மாற்றிக்கணும்னு சொல்றீயே ,ஏன் ?''
''ஆமாங்க, Mohanங்கிறது உங்க பெயர் , என் பெயர் Nalini,இரண்டின் முதல் எழுத்தும் சேர்ந்தா ,சுருக்கமா 'எமன் 'மாதிரி இருக்கே !''
சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
மனுஷன் 'காக்கா ' பிடிச்சா ,காக்கா எதைப் பிடிச்சுக்கும் ?
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....
காக்கா மத்தில மனுஷங்க வாழ்ந்த காலம் போயி இப்ப மனுஷங்க மத்தில காக்கா எல்லாம் வாழ வேண்டிய நிலைமை!! பின்ன வேற எப்படி இருக்கும்?
ReplyDelete
|
|
Tweet |
வணக்கம்
ReplyDeleteஜீ
முதலாவது இணைப்பு திறக்கவில்லை சரிசெய்யுங்கள்..
நல்ல காலம் என் பெயர் வரவில்லை.. ஏதோ சொல்லிருப்பீர்கள்
இந்த காலத்தில் காகத்திற்கு வைக்கும் உணவை மனிதன் சாப்பிடுகிறான் இதைப்பார்த்த காகம் கூட்டமாக வாழ்ந்த காலம் அப்போது..நம்ம நம்ம பங்கை தனியாக எடுத்தால் சரி என்ற சிந்தனைதான்
அருமையாக உள்ளது நகைச்சுவை. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இப்போ இணைப்பு திறக்கிறது ரூபன் ஜி ..படித்துவிட்டு மயங்கி விழுந்தால் நான் பொறுப்பல்ல :)
Deleteகாக்கா கூட்டத்தைப்பாருங்க ,அதையும் கெடுத்து விட்டது யாருங்க என்று பாடத் தோன்றுகிறது :)
நன்றி
பழங்கால நடிகை எம் என் ராஜத்தை நான் எமன் ராஜம் என்று தான் சொல்வேனாம். அம்மா சொன்னது ஞாபகம் வந்தது.
ReplyDelete“ஆந்தை கண்“ செம சூப்பர் பகவான் ஜி.
எமன் ராஜம் காலத்து வில்லன் நடிகர் நம்பியாரும் எமன்தான்,நினைவுக்கு வருகிறாரா :)
Deleteஆந்தைக் கண் என்றால் பகலில் பார்வை தெரியாமல் போகுமோ :)
நன்றி
காக்கா சங்கதி ஆந்தைக் கண்ணு எல்லாம்
ReplyDeleteரெம்ப அருமையான நகைச்சுவைங்க..
மிக்க ரசித்தேன்
பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.
சென்ற வருடம் கரெண்ட் படுத்தின பாடுதான் ,இந்த ஆந்தை வந்த காரணம் :)
Deleteநன்றி
இன்று பறவைக்க ஸ்பெஷல்:) ஆனாலும் இந்த அம்மா இம்புட்டு யோசிக்ககூடாது:)) பாலன்ஸ்!! நீங்க எங்கயோ போய்டீங்க பாஸ்!
ReplyDeleteஅந்த அம்மா சொன்ன எமன் ,யாருக்கு யார் என்றுதான் புரியலே :)
Deleteநன்றி
ரசித்தேன்
ReplyDeleteதம 3
நம்பள்கி பதிவை யாருமே ரசிக்கலியோ என்று படுகிறது :)
Deleteநன்றி
ok.. ok... ஜி
ReplyDeleteஇரண்டு ok எனக்கும் ,நம்பள்கீக்குமா :)
Deleteநன்றி
எமன் - :))))
ReplyDeleteரசித்தேன்.
செம (ன்):)?
Deleteநன்றி
இரசித்தேன்! ஆந்தைக் கண்கள்!
ReplyDeleteபகலில் ஆந்தையைப்பார்க்க முடியாத மனிதன் ,இரவில் ஆந்தையைப்போல் பார்க்க நினைப்பது அதிகப்படி ஆசை இல்லையா :)
Deleteநன்றி
எமன் ரசித்தோம்....எல்லாமே.....ஜி எங்களின் கமென்டுகள் உங்கள் ரசித்தவையில் அடிக்கடி வருகின்றனவே...மிக்க மகிழ்ச்சி ஜி! நன்றியும்!
ReplyDeleteசென்ற வருடம் கருத்துரையில் கலக்கியவர் நீங்கதானே :)
Deleteநன்றி
எமன் ரசிக்க வைத்தது.
ReplyDeleteமனுசங்ககிட்ட இருந்து கத்துக்கிட்ட காக்கை இப்போதைய உண்மையைச் சொல்கிறது.
எல்லாமே அருமை.
மனுஷன் எமன் ஆவதும் ,காக்கை மனுசனாவதும் காலம் செய்த கோலமா குமார் ஜி :)
Deleteநன்றி
//'' ''ஆந்தைக் கண்களை எடுத்து மனுசனுக்கு வைக்க முடிஞ்சா..... கரெண்ட் போனாலும் பார்க்க முடியும்னுதான் !''//
ReplyDeleteநகைச்சுவை மட்டுமல்ல. நல்ல சிந்தனையும்கூட. ஒரு நாள் சாத்தியமாகலாம்.
அப்படின்னா ,ஐடியா காப்பி ரைட் வாங்கி வைத்துக் கொள்ளட்டுமா:)
Deleteநன்றி
அருமை அருமை!
ReplyDeleteபகவானே!
எப்பவும் சிரிப்பின் சரவெடிகளதான்!!!!
த ம கூடுதல் 1
சரவெடி சரி ,வெடிக்குதா :)
Deleteநன்றி
மிக்க நன்றி ஸ்ரீ ராம் ஜி :)
ReplyDelete