23 December 2014

நடிகைன்னா உடம்புக்கு எதுவும் வரக்கூடாதா?

-----------------------------------------------------------------------------------------------------------------
  காலையில் வடித்த சாதம்,மதியமும் அதே சூட்டில் ?              
             
             ''அதெப்படி ,உன் சாப்பாடு மட்டும் சூடாவே இருக்கு ?''
             ''ஹாட் பாஸ்க்சை  இன்னொரு ஹாட் பாக்ஸில் வைத்துக் கொண்டு வருகிறேனே! ''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...
மையல் ராணி சமையல் ராணியாய் மாறுவாளா ?
             ''உன் புதுபெண்டாட்டி சமையல் எப்படின்னு  கேட்டா ,தலைலே ஏண்டா அடிச்சுக்கிறே?''
             ''தோசைக் கல்லுலே தோசைத் தானே வார்க்க முடியும் ,ஆம்லேட் எப்படி போடமுடியும்னு கேட்கிறாளே!''
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....


                     நல்ல தமாஷு! மனைவி கேட்பது அதுவும் புது மனைவி கேட்பது புதுக்                         கணவனுக்குப் புரியவில்லை போலும்! ஒருவேளை மனைவி              எதிர்பார்ப்பது      படத்தில் வருவது போல்.....தொ****** ஆம்லெட்டாக இருக்குமோ!!!

த.ம.+
ReplyDelete

Replies


  1. கரெக்ட்டா சொன்னீங்க ...
    எனக்கொரு டவுட்டு ...அதென்னா தொப்புளா ,தோசைக்கல்லா?
    நன்றி
    Delete
  2. ஜி! 'தொ' என்றால் முதல்....'தோ' என்றால் இரண்டாவது!!!!!
    Delete
  3. இதிலுமா ...ஏக்,தோ.தீன் ?
    நன்றி
  4.            புதுப் பொண்டாட்டி புரியாமக் கேட்டாலும் நமக்கு புதுமையாத்தானே              தெரியணும்.... ஹி... ஹி...
    ReplyDelete

    Replies


    1. அதுதானே ,மயிர் உன் தலையிலே இருந்தாலும் ,என் இலையிலே கிடந்தாலும் அழகுதான் என்று சொன்னவன்தானே ?
      நன்றி
    2. சென்ற  2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
    3. நடிகைன்னா எதுவும் வரக்கூடாதா?

                        ''அந்த நடிகைக்கு  டான்சில் ஆப்ரேசன்னு சொன்னா டான்ஸ் டைரக்டர் கமெண்ட் அடிக்கிறாரே ,என்னது ?''
           
        ''டான்சில் தான் வீக் ,ஃடான்சிலுமா வீக்னு கேட்கிறார் ''
    4. பொன் நகைகளின் இருப்பிடம் !
    5. கோடீஸ்வரர்களின் நகைகளும் 
      நடுத்தர வர்க்கத்தின்  நகைகளும் 
      வங்கிகளில்தான் அடைக்கலம் ...
      ஒன்று  ஃசேப்டி லாக்கரில் ,
      இன்னொன்று நகைக் கடன் கணக்கில்!

22 comments:

  1. அப்பப்பா எவ்வளவு சுதாரிப்பு
    மிகவும் ரசித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இன்னொரு ஹாட் பாக்ஸ்சை வாங்கி விட்டால் இரவுக்கும் அதே சாப்பாட்டை வச்சுக்கலாம் :)
      நன்றி

      Delete
  2. 1. எப்படி ஜி, இப்படியெல்லாம் யோசிக்க முடியுது?

    2. எத்தனை படத்துல ஆம்லெட் போடுறதை பார்த்திருக்கோம். அந்த கணவனுக்கு "தொ" விஷயம் தெரியாம இருக்கே!

    3. நாசூக்கா சொன்ன விஷயத்தை இப்படி டைரக்டர் பட்டுன்னு போட்டு உடைச்சுட்டாரே

    4. கவிதை - நிஜம். சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. 1.அதெல்லாம் தேவ ரகசியம் ,வெளியே சொல்லப்படாது :)
      2 அவர் பம்பரம் விடுவதை மட்டும்தான் பார்த்திருப்பாரோ :)
      3.உடைச்ச காரணம் அந்த நடிகை பிக் அப் ஆகாததால்இருக்குமோ :)
      4.ஒருவருக்கு தேவைக்கு அதிகமாய் ,இன்னொருவருக்கு தேவைக்கே பணம் இல்லாததால்:)
      நன்றி

      Delete
  3. உங்க பக்கத்துக்கு வந்தா, நல்ல புள்ளைக கூட இப்படி வாயடிக்குதுகளே:(((
    நகை மேட்டர்....அதுவும் இனிக்கு:(((

    ReplyDelete
    Replies
    1. நீங்க நம்ம குமார்ஜியை சொல்றீங்களா ?;)
      நன்றி

      Delete
    2. ம்ஹ்ம்:(( நான் துளசி அண்ணனை சொன்னேன்:((

      Delete
    3. ஐம்பதிலும் ஆசையே வரும்னு சொல்றாங்க ,கமெண்ட் வருவதில் தப்பில்லையே .அடிக்கடி இப்படி இளமை ஊஞ்சலாடினாத்தானே வாழ்க்கை ஃபிரஷ்ஷா இருக்கும் :)

      Delete
  4. ஹாட் பாக்சுக்குள்ள ஹாட் பாக்ஸ் எப்படி சார் எப்படி இதெல்லாம்

    ReplyDelete
    Replies
    1. டபிள் இன்சுலட்டர் பாக்ஸ் இதுதான் :)
      நன்றி

      Delete
  5. இருப்பிடம் உண்மை...! எதற்கு...?

    ReplyDelete
    Replies
    1. வீட்டில் இருந்தால் கொள்ளைப் போய்விடும் என்பதற்காக இருக்குமோ :)
      நன்றி

      Delete
  6. ஹா....ஹா....ஹா.... என்ன ஒரு டபுள் ப்ரொடெக்ஷன்!

    ஹா....ஹா...ஹா...ஹா...

    டான்ஸ்-டான்சில் .... ஹா..ஹா...ஹா...

    நகை நிலவரம் புன்னகையைத் தரவில்லை நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. சமீபகாலமாய் நகை விலை நிலவரம் ,கலவரத்தை தராமல் புன்னகையை தந்து கொண்டிருக்கிறதே :)
      நன்றி

      Delete
  7. 01. நல்லா செக் பண்ணச்சொல்லுங்க ‘’சூட்தண்’’ னில் நனைத்து இருக்கப்போகிறது.

    02. நல்லவேளை தோசைக்கல்லை புருஷன் தலையிலே போடவும் முடியுங்கிறது அவளுக்குத்தெரியலை.

    03. அந்த டைரக்டருக்கும் அவளுக்கு ஏதும் ‘’லிங்க்’’ இருக்கோ...

    04. யாதும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் நலமே...

    தமிழ் மணம் 5

    ReplyDelete
    Replies
    1. 1.சூட்தண்ணி உங்கள் தளத்தில் மட்டும்தானே கிடைக்கும் :)
      2.அழகிய வள்ளியை ஆரவல்லி ஆக்கிப்புடுவீங்க போலிருக்கே :)
      3.லிங்க் இவருக்கும் கிடச்சா சபாஷ்ன்னு பாராட்டுவாரோ :)
      4.வங்கியில் நகைக்கடன் வாங்குவதும் நகைக்கு ஒரு விதத்தில் பாதுகாப்பு தானே :)
      நன்றி

      Delete
  8. சீக்கிரம் ஆம்லேட் போன கல்லு கண்டுபிடிக்கனும் ஜீ !!!

    தம +

    ReplyDelete
    Replies
    1. என்னாது ,தோசைக் கல்லையே காணாமா :)
      நன்றி

      Delete
  9. //ஒன்று ஃசேப்டி லாக்கரில் ,
    இன்னொன்று நகைக் கடன் கணக்கில்!//

    இரண்டே வரிகளில், ஏற்றத்தாழ்வைக் காட்சிப்படுத்தியிருப்பது வெகு சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. ஏற்றத் தாழ்வு என்றதும் கூகுள் ஆண்டவருக்கும் பொறுக்கவில்லை போலிருக்கு ,உங்களுக்கு பதில் சொல்லப் போனால் ,திரு துளசிதரன் ஜி அவர்களுக்கு பதிலாய் காட்டிக் கொண்டிருந்தது ,ஒரு வழியாய் இன்றுதான் ஒழுங்குக்கு வந்திருக்கிறது :)
      நன்றி

      Delete
  10. மூன்றாவது நகைக்கடைகளில்.......

    ReplyDelete
    Replies
    1. தமிழன் நகை வாங்குவதும் ,அடகு வைப்பதும் மலையாளத்தான் கடைகளில்தான் :)
      நன்றி

      Delete