16 December 2014

ஊழியரின் மனைவி நலத்தையும் யோசிக்கும் மேனேஜர் /HRO ?

 -------------------------------------------------------------------------------- 
இந்த சட்டத்தால் போலீசுக்கு நிம்மதி ?           
           ''இப்போதெல்லாம் யாரும் செல்போன் டவரில் ஏறி  கீழே குதிக்கப் போறேன்னு  மிரட்டுற மாதிரி தெரியலையே ,ஏன் ?''
              ''தற்கொலைப் பண்ணிக்கிறது  சட்டப் படி தவறில்லை  என்று சட்டம்  வந்திருச்சே !''
சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

ஊழியரின் மனைவி நலத்தையும் யோசிக்கும் மேனேஜர் /HRO ?

            ''எவரி நைட் டூட்டிக்கு வர்றேன்னு சொல்றவனை எதுக்கு செக்சாலஜிஸ்ட் டாக்டரைப் பார்க்கச் சொல்றீங்க ?''
              ''அவனுக்கு கல்யாணமாகி மூணு மாசம்தானே ஆவுது ?''
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....
                        அவனுக்கு பகலில்தான் பிடிக்கிதோ என்னவோ!
ReplyDelete

Replies


  1. இரவுக்கு ஆயிரம் கண்கள் ,பகலுக்கு ஒன்றே ஒன்று என்றும் பாடிக் கொண்டிருப்பதற்கும் காரணம் அதுதானா ?
    நன்றி

  2. மார்க் வராத காரணம் மங்கைகள் தானா ?

               ''நம்ம பையன்  பொண்ணுங்க பின்னாலே திரியும்போதே எனக்குத் தெரியும் !''
  3.             ''என்ன தெரியும் ?''
  4.                 ''அவன் மதி முழுதும் பெண்கள்னா ... தேர்விலே  மதிப்பெண்கள்  வரப்போறதில்லைன்னு தான் !''
  5. இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....
    1. சிறந்த கருத்து
      சிந்திக்க வைக்கிறது!
      ReplyDelete
    2. நாம சிந்திச்சு ஆகப் போவதென்ன ?படிக்கிற பயபுள்ள இல்லே  சிந்திக்கணும் ?
      நன்றி











20 comments:

  1. 01. எப்ப வந்துச்சு ?

    02. பகல்ல வீட்டுல இருக்கான்ல...

    03. அவன் பேரு மதிவாணனா ?

    த.ம.இ.1

    ReplyDelete
    Replies
    1. 1.தற்கொலை குற்றம் இல்லை என்று கடந்த வாரம் பாராளுமன்றத்தில் இது சம்பந்தமான 309வது சட்டப் பிரிவு விரைவில் நீக்கப் படும் என்று அறிவித்துள்ளது :)
      2.ஆனா ,பெண்டாட்டி வேலைக்குப் போவதாக தகவல் :)
      3.மதிப்பெண் வாங்க முடியாதவன் பெயர் மதிவாணனா:)
      நன்றி

      Delete

  2. ''தற்கொலைப் பண்ணிக்கிறது சட்டப் படி தவறில்லை என்று சட்டம் வந்திருச்சே!'' என்றாலும் தற்கொலைகள் குறைந்தபாடில்லையே!

    "நாம சிந்திச்சு ஆகப் போவதென்ன? படிக்கிற பயபுள்ள இல்லே சிந்திக்கணும்?" என்பதில் உண்மை இருக்கு.
    ஆனால்,
    "பட்டால் தானே தெரிகிறது
    சுட்டது நெருப்பு என்று"
    அப்ப தான்
    படிக்கிற பயபுள்ள சிந்திப்பாங்க போல...

    ReplyDelete
    Replies
    1. குறைந்த பாடில்லை என்பதற்காக இப்படி சட்டப் பிரிவை நீக்குவது சரியாகுமா ?

      பட்டறிவு அவனை புரிய வைக்கட்டுமே :)
      நன்றி

      Delete
  3. படிக்கிற பயலுக சிந்திச்சிருந்தா, ஏதாவது ஒரு வருஷமாவது, பொதுத் தேர்வில மாணவிகளைக் காட்டிலும் மாணவர்கள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பார்களே

    ReplyDelete
    Replies
    1. கடந்த சில வருடங்களாக பய பிள்ளைகளும் முதல் இடத்தைப் பிடிக்கிறார்களே :)
      நன்றி

      Delete
  4. Replies
    1. தற்கொலை செய்து கொள்ளும் உரிமையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா ?
      நன்றி

      Delete
  5. Replies
    1. எப்படி மாறணும்? பொது இடத்தில் உடலில் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொள்ளும் போது அனைவரும் வேடிக்கைப் பார்க்கும் விதமாகவா ?
      நன்றி

      Delete
  6. இது தற்கொலைத்தடுப்பு சட்டமா ? அல்லது தற்கொலை ஊக்குவிப்புச்சட்டமா ?


    மார்க் வராததுக்கு காரணம் மங்கைகள் இல்லை ! படிப்பில் மொன்னைகள் !


    ஒருவேளை கரண்ட்பில்ல மிச்சப்படுத்துராரோ என்னவோ ?


    தம +

    ReplyDelete
    Replies
    1. 1.தற்கொலைக்கு அங்கீகாரம் கொடுக்கும் சட்டம் என்று வேண்டுமானால் சொல்லலாம் :)
      2.அங்கே ஒரு கண்ணும் படிப்பில் ஒரு கண்ணுமா இருக்கணும் ,அப்படித்தானே :)
      3.வசதியாய் தூங்க வீட்டில் ஏ/சி இருக்காதோ :)
      நன்றி

      Delete
  7. ரசித்தோம் ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. தற்கொலை உரிமை வேண்டுமா ?இதைப் பற்றி நீங்கள் எழுதினால் சரியாக இருக்குமே துளசி தரன் ஜி ?
      நன்றி

      Delete
  8. #தற்கொலைப் பண்ணிக்கிறது சட்டப் படி தவறில்லை#
    அதில் தப்பித்தவருக்கு தான் தண்டனை ரத்து....
    தம 6

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் ...இதைப் பற்றி முன்னாள் நீதிபதி சந்துரு கூறி இருப்பது :

      முழு மனதுடன் இதை வரவேற்கிறேன். தற்கொலைக்கு முயற்சிப்பது குற்றம் என்று வரையறுக்கும் 309-வது சட்டப் பிரிவு முட்டாள்தனமானது. அந்த சட்டப் பிரிவின்படி அங்கே ஒரு குற்றம் முழுமை அடைந்துவிட்டால் அதைச் செய்தவரை தண்டிக்க இயலாது. அதேநேரம் குற்றம் முழுமை அடையாமல் தோல்வி அடைந்துவிட்டால் அதைச் செய்தவரை தண்டிக்கிறார்கள். ‘ஏன் நீ சாகவில்லை’ என்று கேட்பதுபோல் உள்ளது இது.

      Delete
  9. என்னாது .....தற்கொலை செய்கிறவுங்க..திருந்திட்டாங்களா...?? அடப்பாவமே.....

    ReplyDelete
    Replies
    1. இனிமேல் யாரும் செத்து செத்து விளையாடிப் பார்க்க முடியாது :)
      நன்றி

      Delete
  10. அப்ப தற்கொலைகள் குறையுமா?
    பகல்ல பய வேற எங்கயும் வேலைக்குப் போகலையே?

    ReplyDelete
    Replies
    1. உரிமையைப் பயன்படுத்திக் கிட்டா கூடுமே தவிர குறையாதே :)
      அது வேறயா ? உங்கள் கேள்வி யோ'சிக்க' வைக்குதே :)
      நன்றி

      Delete