21 December 2014

பொண்ணு மாப்பிள்ளை மட்டுமா பொருத்தம் ?

------------------------------------------------------------------------

FM ரேடியோவை மனைவியும் கேட்டதால் வந்த வினை !
                  
            '' உண்மையைச் சொன்னதாலே குடும்பத்திலே குழப்பமா ,என்னடா சொல்றே  ?''
                 
            ''FM ரேடியோவிலே ,'நிம்மதி வேணும்னா எங்கே போவீங்க 'ன்னு கேட்டாங்க ,ஆர்வக் கோளாறிலே 'சின்ன வீட்டுக்கு 'ன்னு சொல்லித் தொலைச்சிட்டேன் !''
                                        

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

பொண்ணு மாப்பிள்ளை பொருத்தம் மட்டுமில்லை ....!

                   ''இன்ஸ்பெக்டர் அய்யா ,உங்க மக வாழ்க்கைப் படப் போறது வசதியான இடத்தில் தானா ?''
                  ''என்ன அப்படி கேட்டுட்டீங்க ,பையனோட அப்பா மாசமானா நமக்கே லட்ச ரூபா மாமூல் கொடுத்துக்கிட்டு இருக்காரே !''
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....


             சரியான இடம்தான்
             முடிச்சிடவேண்டியதுதான்
ReplyDelete

Replies


  1. சம்பந்திங்க சமபந்தி நடத்துவாங்களோ ?
    நன்றி
சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...

இரண்டு தொழிலும் இரண்டு கண்ணு மாதிரி !

          ''கல்யாண தரகர் வெல்டிங் பட்டறையும் 

வைச்சுக்கிட்டு இருக்கார் போலிருக்கா, ஏன் ?''           
            
         ''இரும்பை இணைப்பது வெல்டிங் ,இதயத்தை  

இணைப்பது வெட்டிங்னு விசிட்டிங் கார்டுலே  

போட்டுக்கிட்டு இருக்காரே!''

பழமொழி சொன்னவன் தீர்க்கதரிசி !

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாய் இரு ...
திராவிடத் தலைவர்களுக்காகவே சொல்லப் பட்டதா?


31 comments:

  1. ஹா.....ஹா....ஹா....

    ரஸித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீ ராம் ஜி ,உங்கள் வழக்கமான பாணியில் கருத்துரை இல்லையே :)
      நன்றி

      Delete
    2. மொபைல் வழியாக வந்ததால் அப்படி!

      மதுரை வந்திருந்தேன்.

      Delete
    3. அதுதானே பார்த்தேன் :)

      மதுரையில் நான் இருப்பது மீனாம்பாள்புரம் கஸ்டம்ஸ் குவார்ட்டர்சில் ...நீங்கள் ?
      மறு கருத்துக்கு என் மறு நன்றி !

      Delete
    4. இன்று சென்னை திரும்பி விட்டேன்.

      மகாத்மா காந்தி நகர்.

      Delete
    5. பார்த்தீர்களா ,இவ்வளவு பக்கம் வந்து விட்டோம் ?விரைவில் சந்திக்கலாம் என்று நினைக்கிறேன் !

      Delete
  2. வணக்கம்
    ஜீ
    இனி சொல்லும் போது..இடக்கு முடக்கா பேசக்கூடாது.... எல்லாம் இரசிக்கவைக்கும் நகைச்சுவை அருமையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. காமெடியா பேசுறோம்னு பேசினாலும் சில நேரம் சிக்கல் ஆயுடுதே :)
      நன்றி

      Delete
  3. சின்ன வீட்டுக்குச் செல்பவருக்குப் பெரிய மனது.

    ReplyDelete
    Replies
    1. உண்மை விளம்பிதான்,அப்புறம் எதுக்கு அங்கே போய் விழுந்தார்னு புரியலே :)
      நன்றி

      Delete
  4. உண்மைய சொல்லி மாட்டிக்கிட்டாரே...!

    ReplyDelete
    Replies
    1. தானாடா விட்டாலும் 'நாக்கு 'ஆடும்னு இனிமேல் சொல்லலாமா ஜி :)
      நன்றி

      Delete
  5. Replies
    1. உங்கள் த ம +1,ஆகா :)
      நன்றி

      Delete
  6. அப்புறம் அவர் ஆஸ்பத்திரிக்கு தானே போயிருப்பார்:)))

    ReplyDelete
    Replies
    1. அவரா போகலே ,அவரை தூக்கிகிட்டு போனதாய் கேள்வி :)
      நன்றி

      Delete
  7. கொடுத்து வச்சாலும் மாமுல் கொடுக்கிற சம்பந்தியா....இருக்கனும்.....

    ReplyDelete
    Replies
    1. பொருத்தமான சம்பந்தம் அப்படித்தானே ?:)
      நன்றி

      Delete
  8. சின்ன வீடுன்னு சொல்லி பெரிய பிரச்சனைல மாட்டிக்கிட்டாரே!

    ReplyDelete
    Replies
    1. ஊரறிய ,உலகறியச் சொன்னால் மாட்டிக்கத்தானே வேணும் :)
      நன்றி

      Delete
  9. வணக்கம் பகவான்ஜி ஒருவாரமா ‘விலா’எலும்பு ‘பலா’ன வலி அதன் சரியாக வர முடியவில்லை. SORRY

    01. என்னைப்போல, கள்ளம் கபடமில்லாத மனசுக்காரனோ ?

    02. சபாஷ் சரியான வசூல் ராஜா மாப்பிள்ளை M.B.B.S. படிச்சவரோ ?

    03. அப்படீனாக்கா ? சலூன் வச்சிருந்தாருனா ?

    04. சரிதா’ன் ஆரம்பத்திலேருந்தே கண்ணாகத்தானே இருந்து வர்றாங்கே...

    தமிழ் மணம் - 7

    ReplyDelete
    Replies
    1. பொறுப்பேற்கும் முன்பே நான் சொன்னேனே ,பலான வலியை(கோயில்பிள்ளை பதிவின் பாதிப்போ..இந்த பலான ? ) தாங்க வருமென்று ....வலைச் சரத்தை தமிழ் மணத்தில் இந்த வாரம் இரண்டாவது கொண்டுவந்த பெருமை உங்களயே சேரும் !
      1.எனக்கு உங்கள்மேல் சந்தேகமில்லை ,கீழே ,கருத்துரை இட்டுள்ள சகோதரி மைதிலியின் சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கள் :)
      2 வசூல் ராஜாவேதான் ,கொள்ளை அடித்த காசில் படித்து இப்போ டாக்டராகி கொள்ளை அடிக்கிறார் :)
      3 டைவர்ஸ் தரகராகி இருப்பார் ,சுலபமா 'வெட்டி' விட ஆலோசனை தரப்படுமென்று :)
      4.மத்திய அரசில் வலுவா சம்பாதிக்க முடிகிற துறையை கேட்டு வாங்கி ,கொள்ளை அடிப்பதில் கண்ணாய் இருக்கிறார்களே :) மற்ற படி மாநிலத்திற்கு ஒரு பிரயோசனமும் இல்லை !
      நன்றி

      Delete
  10. என்னைப்போல, கள்ளம் கபடமில்லாத மனசுக்காரனோ ?** கில்லர் அண்ணா நீங்க அப்படியா???!!!

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் உகாண்டா நாட்டு பாடப்புத்தகத்துல போட்டு இருக்கு.

      Delete
  11. இன்று இணைத்துவிட்டேன் :)
    நன்றி

    ReplyDelete
  12. ஆஹா ! மனச ரிலாக்ஸ் பண்ண பகவான்ஜீ எங்க போவாரு ?

    ஆமா ! அது வெட்டிங் இன்விட்டிசேனா ? வெல்டிங் இன்விட்டேசனா ணா ?

    தம

    ReplyDelete
    Replies
    1. வம்புலே மாட்டிக்க நானென்ன அந்த ஈனாவா :)

      இரு மனத்தை ஓட்ட அன்பினால் மட்டுமே முடியும் ,அதுக்கு வெல்டிங் ராடு உதவாதே:)
      நன்றி

      Delete
  13. பப்ளிக்கா பேசி மாட்டிக்கிட்டாரே...ரகசியம் காக்கத் தெரியாம? சிறியது பெரியதானால்??!!!...

    ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. தவம் இருந்தாலும் இப்படி புருஷன் கிடைக்க மாட்டான்னு மனைவி இருக்க ,இவர் தவக்களையாய் கத்தி மாட்டிக்கிட்டாரே :)
      நன்றி

      Delete
  14. 1. ஒரு வீடு வச்சிருந்தாலே அடி விழுகிற காலம் இது. ரெண்டு வீடு வச்சிருந்தா அவ்வளவுதான்.

    2. குட்டிக் கழிச்சுப்பார்த்தா கணக்கு சரியாத்தான் வருது

    3. கவிதை சூப்பராக இருக்கே.

    4. இந்த பழமொழி இவங்களுக்காகத்தான் சொல்லப்பட்டிருக்குனு இப்பத்தான் தெரியுது.

    ReplyDelete
    Replies
    1. 1.ரொம்பத்தான் நொந்து போயிருப்பீங்க போலிருக்கே :)
      2.இதுக்குத்தான் சொல்லி இருக்காங்க ,சேருமிடம் அறிந்து சேர்ன்னு:)
      3.நேற்றுதான் மேடம் மனோ வின் தளத்தில் படித்தேன் ...மெட்ராஸ் ஐ வந்தால் உப்புத் தண்ணீரால் கண்ணைக் கழுவினால் போய் விடுமென்று ,காதல் வந்தால் ?வந்தவங்களே கழுவி கழுவி ஊற்றிக்குவாங்க ,கவலையை விடுங்க :)
      4.மத்திய அரசில் பங்கேற்கும் திராவிடக் கட்சிகள் மாநில நலனுக்காக எதையுமே செய்ததாக சொல்ல முடியவில்லையே :(
      நன்றி

      Delete