19 December 2014

மனைவி கதவை திறப்பதற்கு கண்டக்டரின் ஐடியாவோ ?

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்று 'தேவதை 'மனைவி ,இன்று ? 
            ''என்னங்க ,நம்ம வீட்டு நாய் என்னைக் கண்டால்மட்டும்  குரைக்குது,ஏன் ?'' 
       
        ''நாய்ங்க கண்ணுக்கு  பேய் வர்றது தெரியும்னு சொல்வாங்க ,அதனால் ஆயிருக்கும் !''




சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

மனைவி கதவை திறக்கணும்னு கண்டக்டரின் ஐடியாவோ ?

          ''காலிங் பெல் பக்கத்திலே ஒரு விசிலை தொங்க விட்டு ,ஏதோ எழுதிப் போட்டிருக்கீங்களே ,என்னது ?''
            ''கரண்ட் கட் நேரத்தில் இந்த விசிலை ஊதி அழைக்கவும்னு எழுதி இருக்கேன் !''
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....
சம்யோஜிதமான super ஐடியாவாக இருக்குதே!! அதுவும் தமிழ் நாட்டில் உள்ள கரண்ட் கட்டுக்கு மிகவும் உபயோகமான ஐடியா!!!! நன்றி!! (வீட்டு வாசலிலேயே பஸ் வருதோனு சந்தோஷம் இல்லனா, இப்பலாம் குப்பை எடுக்கக் கூட விசில் ஊதறதுனால அதற்கான விசிலோனு நினைச்சிடக் கூடாது)
ReplyDelete

Replies




  1. விடாமல் விசிலை ஊதவும்னு எழுதிப் போட்டு விடலாம் ,இதிலும் ஒரு சௌகரியம் ...வேண்டாட விருந்தாளி என்றால் ஊதிஊதி ஓயட்டுமென்று வேடிக்கைப் பார்க்கலாம் !
    நன்றி
  2. ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

  3.                  புலவரே! உங்கள் ஜோக்கில் பாதி-பொருள் குற்றம் உள்ளது;
    கரன்ட் இல்லாவிட்டால் இரவு எப்படி படிக்கமுடியும்? இது பாதி பொருள் குற்றம்!
    பகலில் படிக்கமுடியும் என்று சமாளிக்க முடியும் என்பதால் பரிசுத் தொகையை பாதியாகத தான் கொடுக்க வேண்டும்!
    --நக்கீரன்!
    (புராண நக்கீரன்பா!)
    ReplyDelete

    Replies


    1. நக்கீராஆஆஆ,என் ஜோக்கில் பொருட்குற்றமா ?கரெண்ட் இல்லா நேரத்திலும் ஒளிரும் வண்ணம் எழுதியுள்ளேனே,கண்ணுக்கு தெரியவில்லையா ?முழு பரிசுத் தொகையையும் வைக்கா விட்டால் நெற்றிக் கண்ணால் உம்மை எரித்து விடுவேன் !
      நன்றி
      Delete
    2. எரியுங்க!
      நான் குளத்திலே ஹாயா குளித்துவிட்டு வரப்போறேன். தண்ணீர் பஞ்சம் இருக்கும்போது!
      Delete
    3. நக்கீரா ,என் சொல்லின் பொருளை உணராமல் பேசாதீர் ...உம்மை எம் நெற்றிக் கண்ணால் எரித்து பஸ்பமாக்கி விடுவோம் என்றுதான் கூறினோம் ...குளத்து நீரில் எறிந்து விடுவதாய் தவறான வியாக்கியானம் செய்கிறீர் !
      தமிழக குளங்களில் தான் நீரில்லை ,நீர் வசிக்கும் ஊரில் ஹட்சன் நதியில் தண்ணீர்கரைப் புரண்டு ஓடுகிறதே ,தமிழ் தாயை வணங்கிக் கொண்டு மூழ்கி எழுவீராக !
      நன்றி
    4. சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
    5. விட்டதை விட்ட இடத்தில் பிடிக்க வேண்டுமென 
    6. விட்டத்தை பிடித்த அப்பாவின் நிழல் ..
    7. அவர் விட்டுசென்ற பெட்டியில் 
    8. கட்டு கட்டாய் லாட்டிரி சீட்டுகளில் !






20 comments:

  1. விசில் ஐடியா சூப்பரா இருக்கே !

    அன்னைக்கு தேவதை , இன்னைக்கு தே'வதை' யா ?


    லாட்டரி ஹைக்கு அருமை ! ஆன இப்போதான் தமிழ்நாட்டுல தடைபண்ணிட்டாய்ங்களே ! கள்ள லாட்டரினு டைட்டில் வச்சிருக்கலாம்ணா

    ReplyDelete
    Replies
    1. நல்லாத்தான் இருக்கு ,பக்கத்து வீட்டுக்காரன் சண்டைக்கு வேணா வர்றான் ,பெண்டாட்டிக் கதவைத் திறக்கிற மாதிரி தெரியலையே :)

      தேவை இல்லாத வதைதான் ஆகிவிட்டாள்:)

      இது அப்பன்காலத்தில் இருந்த லாட்டரி ஆச்சே :)
      நன்றி

      Delete
  2. அப்ப அவர் பேய்க்கு வாழ்க்கை பட்டிருக்காருன்னு சொல்லுங்க

    ReplyDelete
    Replies
    1. உண்மைதானா என்று அந்த நாயைத்தான் கேட்கணும் :)
      நன்றி

      Delete
  3. தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன்
    தம 1

    ReplyDelete
    Replies
    1. இரட்டிப்பு நன்றி :)

      Delete
  4. கதவைத் திறக்க இப்படி ஒரு வழி உள்ளதா? நன்றி.

    ReplyDelete
    Replies
    1. செல்லில் பேசி கதவைத் திறக்கச் சொல்வதும் நடக்கிறதே :)
      நன்றி

      Delete
  5. அவரும் நாய் ஆகி விட்டாரே...! ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. அவரும் நாய் மாதிரி குறைக்கிறாரா:)
      நன்றி

      Delete
  6. இதிலிருந்து தெரிவது கொள்ளையடிக்காத பெண்களை..மட்டும் தான்அந்த நாய் பேயாய் நிணைத்து குறைக்கும் ....

    ReplyDelete
    Replies
    1. கணவன் மனதைக் கொள்ளை அடிக்காத பெண்களை மட்டும் பார்த்தா :)
      நன்றி

      Delete
  7. பேய் போல மனைவியா?
    விசில் ஊதும் மனைவியா?
    ஜோக்கில் பாதி-பொருள் குற்றமா?
    எல்லாம் நன்று!

    ReplyDelete
    Replies
    1. துளித் துளியாய் ரசித்தமைக்கு நன்றி :)

      Delete
  8. நம்மள்கி யும் நீங்களும் அடித்த ஜோக்கு எல்லாத்தையும் விட சூப்பரு!!

    ReplyDelete
    Replies
    1. நம்பள்கி முன்பு போல் இப்போ இல்லை ,அடக்கி வாசிக்கிறாரே :)
      நன்றி

      Delete
  9. 1. ஹஹஹஹ

    2. முன்ப் ரசித்தது அதுவும் நீங்களும் நம்பள்கியும் அதகளம்...

    ReplyDelete
    Replies
    1. நம்பள்கி ,இன்னும் நிறைய அதகளம் பண்ணி இருக்கிறார் ,போக போக வரும் :)
      நன்றி

      Delete
  10. வணக்கம்
    ஜீ
    பேய்கதை இந்தகாலத்தில் சொன்னால் பிரிவுதான்... எல்லா நகைச்சுவையும் அருமையாக உள்ளது இரசித்தேன்...
    த.ம7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. எந்த காலத்திலும் இது பொருந்தும் போலிருக்கே ,அன்னைக்கே 'பேயாகி வந்ததொரு மாயப் பிசாசு 'என்று பட்டினத்தார் பாடி இருக்காரே :)
      நன்றி

      Delete