9 December 2014

காதலுக்கு மரியாதை இதுதானா ?

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காசு மட்டும்தான் காசா ?

                   ''திருடு போன பர்சிலே பணமே இல்லைன்னு நீங்களே சொல்றீங்க ,அப்புறமும் ஏன் இவ்வளவு வருத்தப் படுறீங்க ?''
                   ''அந்த பர்ஸ் விலையே ஐந்நூறு ரூபாயாச்சே !''  
       

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...


காதலுக்கு மரியாதை இதுதானா ?

பூண்டிலே ஒருதலைப்பூண்டு ஆரோக்கியத்திற்கு நல்லதுதான் ...
ஆனால் ,காதலில் ஒருதலைக் காதல் இருக்கே ,எந்தக் கொடுமையையும் செய்யத் தயங்காது என்று பஞ்சாப்பில் நடந்த கொடூரம் மூலம் மீண்டும் தெரிகிறது ...
திருமணத்திற்காக பியூட்டிப் பார்லரில் அலங்காரம் செய்துக் கொண்டிருந்த பெண் மீது ...
கூரியர் தபால்காரனைப் போல் உள்ளே வந்த கொடூரன் ...
ஆசிட்டை வீசியதில் ...
அந்தப் பெண்ணின் முகம் கழுத்து மார்பு வயிற்றுப் பகுதிகள் பாதிக்கப்பட்டன ...
C C TV கேமரா பதிவைக் கொண்டு அந்த கொடூரனை கைது செய்து விசாரித்ததில் ...
அந்தப் பெண்ணை தான் காதலித்ததாகவும் ,காதலை அவள் ஏற்றுக் கொள்ளாததால் ...
ஆசிட்டை வீசியதாகவும் கூறியுள்ளான் ...
உண்மையாக அந்தப் பெண் மீது அவனுக்கு காதல் என்றால் இப்படி செய்ய மனம் வருமா ?
தனக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்ற பொறாமையை எப்படி காதல் என்று சொல்ல முடியும் ?



இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....


இது காதல் அல்ல! மன நோய்! காதலில் சோகம் வரும்போது, தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்வது, அதாவது கையைச் சுட்டுக் கொள்வது, ப்ளேடால்/கத்தியால் கீறிக் கொள்வது, பச்சைக் குத்திகொள்வது எல்லாமே ஒரு வகையான மனம் சம்பந்தப்பட்டது. ஆனால் அதைத் தானே உண்மையான காதல் என்று நம் தமிழ் சினிமா கலாச்சாரம் பேசுகிறது!!! பகவான்ஜி!!!

த.ம. போட்டச்சு!!
ReplyDelete

Replies


  1. தன்னைதானே துன்புறுத்திக் கொண்டால் பரவாயில்லை ,பெண்ணின் மீது ஆசிட் ஊற்றுவதை என்ன சொல்ல ?
    நன்றி


    1. சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்..
    2.  ''உன்  மாமியாருக்கு இரக்கமே இல்லையா ,ஏன் ?''
    3.  ''நான் காக்கா வலிப்புலே துடிக்கிறப்போ கூட ,தன் இடுப்புலே இருக்கிற இரும்பு சாவியை என் கையிலே தரவே இல்லையே!''


  1. தேவதைகள் உலா வரும் நேரம் !


    அந்தி மாலை ,விளக்கேற்றும் நேரம் ..
    தேவதைகள்  உலா வரும் நேரம் என 
    கதவு ஜன்னலை திறந்து வைத்ததெல்லாம் 
    அந்தகாலம் !
    தேவை இல்லாதவை எல்லாம் நுழையுமென 
    எல்லாவற்றையும் இழுத்து மூடுவது 
    இந்தகாலம் !
  2. --------
















30 comments:

  1. Replies
    1. தேவதைகள் உலா வந்தால் யாருக்குதான் பிடிக்காது ?
      நன்றி

      Delete
  2. தங்கள் நகைப் பணி தொடர்க ..

    ReplyDelete
    Replies
    1. சேதாரம் இல்லாத நகைப் பணியாச்சே உங்கள் ஆதரவு இல்லாமல் போகுமா :)
      நன்றி

      Delete
  3. // சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்... //

    எங்கே ஜி...?

    ReplyDelete
    Replies
    1. நீங்க இரண்டு நாள் முன்னால் எங்கள் பிளாக்ஸ்ரீ ராம் ஜீக்கு சொன்ன பதிலே இப்போ உங்களுக்கும் ....இப்போ பாருங்க :)
      நன்றி

      Delete
  4. 500 ரூபாய்க்கு வாங்கின பர்ஸ்ல காசை வைக்காமல், அந்த பர்சை கேவலப்படுத்தியதற்கான தண்டனை தான் அந்த திருடு!!

    ReplyDelete
    Replies
    1. பர்சை இப்போதானே வாங்கியே இருக்கார் :)
      நன்றி

      Delete
  5. //''திருடு போன பர்சிலே பணமே இல்லைன்னு நீங்களே சொல்றீங்க ,அப்புறமும் ஏன் இவ்வளவு வருத்தப் படுறீங்க ?''
    ''அந்த பர்ஸ் விலையே ஐந்நூறு ரூபாயாச்சே !'' //

    இதே நிகழ்வு என் வாழ்விலும் ஒருமுறை நடந்துள்ளது . வைத்திருந்த 100 ரூபாய் போனதைவிட 700 ரூபாய் பர்ஸ் போய்விட்டதே என்று ஒருவாரம் புலம்பியதை நினைத்தால் இன்னும் சிரிப்பு தான் வருகிறது .

    தம

    ReplyDelete
    Replies
    1. துக்ககர சம்பவங்களை பிற்காலத்தில் நினைத்தால் சிரிப்பு வரும் என்று தெரிந்தும் வருந்துவது மனித இயல்புதானே :)
      நன்றி

      Delete
  6. Replies
    1. செல் மூலம் வோட்டு போட்ட உங்களுக்கு ஒரு சொல் ,,,நன்றி !

      Delete
  7. இந்தக் காலத்து தேவதைகள் கொசுக்களா.?

    ReplyDelete
    Replies
    1. கொசுக்களின் கண்களில் நாமதான் தேவதை :)
      நன்றி

      Delete
  8. 01. வெளக்கமாத்துக்கு பட்டு குஞ்சமாம்.
    02. வேதனைதான் இனியெனும் இப்படி சம்பவங்கள் நடவாதிருக்க... அவனை ஆசிட் ஊற்றியே கொல்லவேண்டும் (இந்த தண்டனை அவனை கொல்வதற்காக மட்டுமல்ல பிற ஆண்மகன் காண்பதற்காக) (நண்பர் திரு. துளசிதரன் அவர்கள் சொல்வதும் உண்மையே)
    03. அந்த துடிப்பு நடிப்புனு மாமியார் நினைச்சுட்டாரோ... என்னவோ...
    04. தேவதைகளே... தேவையில்லைனு ஆகிப்போச்சே ச்சே
    05. ???????
    த.ம.6

    ReplyDelete
    Replies
    1. 1.சண்டைக்கு மட்டுமே பயன்படும் வெளக்கமாத்தா இருக்குமோ :)
      2.மன நோய்க்காரர்கள் அப்படியாவது திருந்துவார்களா :)
      3.வில்லிக்கு வில்லியாக இருப்பார்கள் போலிருக்கே :)
      4.கொசுக்கடி இல்லாமல் இருந்தாலே போதும் தேவதைகள் எதற்கு ,அப்படித்தானே :)
      5 கேள்விகளின் அர்த்தம் புரிந்ததால் சரி செய்து விட்டேன் !
      நன்றி

      Delete
  9. ஐநூறு ரூபா பர்ஸ் வெச்சிருக்கிறவர்கிட்ட அஞ்சு ரூபா கூட இல்லையா? கஷ்டம்தான்! மாமியாரு உசாருதான் போல! துளசிதரன் சொல்வது போல அது காதல் இல்லை மனநோய்தான்! இப்போது கதவை அடைத்து வைத்தால் கூட என்னவெல்லாமோ நுழைந்து விடுகிறதே?

    ReplyDelete
    Replies
    1. புதுசா வாங்கின பர்ஸை பூஜைப்போட்டுட்டு காசை வைக்க நினைத்தார் ,அதற்குள் இப்படியானா அவர்தான் என்ன செய்வார் :)
      நுழைவதை தடுக்க முடியாதுதான் ,நமக்குள்ளும் :)
      நன்றி

      Delete
  10. காசு மட்டுமே காசு அல்ல. தங்களது பல நகைச்சுவைகளில் பொருள் பொதிந்த சிறந்த கருத்துக்களும் உள்ளன. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. சில இடங்களில் திருக்குறளை விட பரிமேலழகர் உரை சிறப்பாய் இருக்கும் ,உங்க கருத்தைப் போல :)
      நன்றி

      Delete
  11. இங்கு இந்த சமூக அமைப்பில் நிகழும் காதல்கள் எல்லாம் காதலே அல்ல எனும்போது... அவன் காதல் மட்டும் எப்படி காதலாகும்.?????????????

    ReplyDelete
    Replies
    1. காசு மட்டுமே காசான்னு கேட்டதற்கு ,நீங்க இப்படி அணை கட்டுறது நியாயமா :):
      நன்றி

      Delete
  12. நல்ல மாமியார், நல்ல மருமகள்:))

    ReplyDelete
    Replies
    1. யாருக்கு அமையும் இந்த பொருத்தம் :)
      நன்றி

      Delete
  13. ரசித்தேன் பகவான் ஜி!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. இன்றைய பதிவையும் இன்றே ரசிக்கலாமே :)
      நன்றி

      Delete
  14. உண்மையான காதல் இருந்தால் இப்படி செய்ய சொல்லாது.
    மற்றவைகளை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அமர காதல் என்றால் காதல் தீபத்தை அணைய விடாதுதான் :)
      நன்றி

      Delete
  15. கொசுக்களையும் தேவதைகள்னு சொல்லுபவர் நீர் ஒருவராகத்தான் இருக்கும் ஜி! ஒருவேளை அவை இறக்கை கட்டிக்கிட்டு பறப்பதனாலோ....ஆஹா அப்ப உங்க காதுல வந்து ஊலலலல் பாடறாங்களா அந்த தேவதைகள்..திறந்து வைங்க ஜி! ஜன்னலை ஹஹஹ

    ReplyDelete
    Replies
    1. தேவதைகள் வர வேண்டிய நேரத்தில் (நமக்கு )தேவை இல்லாதவைகள் வருகின்றனவே என்பதுதான் என் வருத்தம் :)
      நன்றி

      Delete