24 December 2014

கணவன் ,மனைவிகள் கற்பூர வாசனை அறியாதவர்களா?

அழையா விருந்தாளின்னா அவமதிப்புதானா ?

             ''பந்தியிலே சாப்பிட உட்கார்ந்தவரை எழுப்பி ,அடிச்சு விரட்டுறாங்களே ,ஏன் ?''
               ''வெறும் கையோட வந்து சாப்பிடுறதும் இல்லாம ,புது செருப்பு காலோட போறதே அவர் வழக்கமாம் !''




சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

அழகான டீச்சர் முகத்தில் கோழி தெரிவதேன் ?

         ''இவ்வளவு அழகான டீச்சரைப் பார்த்தா ,உனக்கு மட்டும் ஏண்டா கோழி ஞாபகம் வருது ?''
                     ''இவங்களும்  முட்டைதானே போடுறாங்க !''
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....
                                                        
                                                               Ramani S24 December 2013 at 07:44
               டீச்சருக்கு மட்டும் தெரிஞ்சா
                      இனிமே வெறும் பேப்பரைக் கொடுத்தாலும்
                     முட்டை போடமாட்டாங்க
ReplyDele te
  1. அது மட்டுமா ,வீட்டுலே முட்டை வாங்குறதையும் நிறுத்திடுவாங்க !
    நன்றி
  2. சன்னி லியோன் பிறந்ததும் மதுரையில் தானா ?

    உயிருடன் உள்ள அமைச்சருக்கும் ,MLAக்கும் இறப்புச் சான்றிதழ் வழங்கி சாதனைப் படைத்த மதுரை மாநகராட்சி ...
    தற்போது பிறப்புச் சான்றிதழ் வழங்கியதிலும் சாதனை படைத்து இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது ...
    டெல்லி முதல்வராக பதவி ஏற்கவிருக்கும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் பிறந்தது ...
    மதுரையில் தான் என்று வழங்கப் பட்டிருக்கும்  பிறப்புச் சான்றிதழ் வக்கீல்களின் கையில் கிடைத்துள்ளது ...
    அதனை ஆட்சியரிடம் ஒப்படைத்து புகார் அளித்து உள்ளார்கள் ...
    நம் மதுரையில் பிறந்தவர் டெல்லிக்கே முதல்வர் ஆகப் போகிறார் என்ற நமது மகிழ்ச்சியைக் கெடுக்கும் விதமாய் ...
    அந்த  பிறப்புச் சான்றிதழ் பொய்யானது ,விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளோம் என்கிறார்கள் உயர் அதிகாரிகள் ...
    ஒபாமா ,பான் கீ மூன் ,ஏஞ்சலினா ஜோலி ,சன்னி லியோன் ,ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் அநேகமாய் மதுரையில் பிறந்து இருக்கும் விபரம் விசாரணையில் வெளியாகும் என்று நம்பலாம் ...
    சோனியா காந்தி பெயரில் பிறப்புச்  சான்றிதழ் வழங்கப் பட்டிருப்பின் ...
    அவரும் இந்தியப் பிரஜை என்ற அடிப்படையில் ...
    அடுத்த பிரதமருக்கான வேட்பாளர் ஆக அறிவிக்கப் படக்கூடும் ...
    நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்து இருக்கும் தகவல் இது !
  3. இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....
  4.              சன்னி லியோன் பிறந்ததும் மதுரையில் தானா ? 
                தேவையில்லாத கேள்வி!

                 சன்னி லியோன் எங்கு பி;றந்தார் என்பது முக்கியமல்ல;; எப்படி                       பிறந்தாரோ அப்படி இருக்கிறாரா என்பது தான் முக்கியம்...!





    Replies



    1. அப்படி அவர் இருக்கிறனாலேதானே உலகப் புகழ் பெற்று இருக்கிறார் !
      நன்றி

    2. சென்ற  2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
    3. வங்கி கணக்குமா கரெண்ட் கட் ?


                       ''அவர் கொடுத்த செக் எல்லாம் பணம் இல்லாமே திரும்ப வருதே ,ஏன்?''
                   ''அவர் பேங்க் கரண்ட் அக்கௌன்ட் ,கரண்ட்கட்  அக்கௌன்ட்ஆகி இருக்கும் !''

    4. கணவன் ,மனைவிகள் கற்பூர வாசனை அறியாதவர்களா?




      கழுதைகள் உதைக்கும் காரணம் புரிந்தது ...
      கணவனோ,மனைவியோ 
      'கழுதைக்கு வாழ்க்கைப் பட்டாச்சு 'என்றபோது !


























22 comments:

  1. ''வெறும் கையோட வந்து சாப்பிடுறதும் இல்லாம ,புது செருப்பு காலோட போறதே - கையையும் காலையும் சேர்த்து சொன்ன விதம் அருமை. அருமை..
    எல்லா டீச்சரைப் பார்த்தாலும் கோழி ஞாபகம் தானே வரணும், அதென்ன அழகான டீச்சரை மட்டும்?
    நீங்க மதுரை தானே - அதனால தான் இந்த குளறுபடி எல்லாம் நடக்குதாம். எப்படின்னு கேக்கிறீங்களா? வேலை நேரத்தில் உங்களோட (மொக்க) பதிவுகளை எல்லாம் படிக்கிறதுனால தானாம்.
    உங்களோட சொந்த அனுபவக் கவிதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. கையையும் காலையும் வச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியலே ,அதான் அவர் அப்படி செய்யுறார் :)
      அதுக்காக அழகான டீச்சரைப் பார்த்தா மயில் ஞாபகம் வரணுமா :)
      என் பதிவு உலகம் பூரா தெரியுதே ,வேறெங்கேயும் இந்த கொடுமை நடக்கிற மாதிரி தெரியலியே :)
      இப்படி நொந்த அனுபவம் எல்லோருக்கும் இருப்பதுதானே :)
      நன்றி

      Delete
  2. ''வெறும் கையோட வந்து சாப்பிடுறதும் இல்லாம ,புது செருப்பு காலோட போறதே அவர் வழக்கமாம்!'' என்றவாறு பிழைப்பு நடத்துவோரும் இருக்கத்தான் செய்கின்றனர்!
    சிறந்த நகைச்சுவைப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. சாப்பிடுவதைக் கூட போகட்டும் என்று விட்டு விடலாம் ,திருடுவதை எப்படி பொறுத்துக்க முடியும் :)
      நன்றி

      Delete
  3. என்ன இது...? மதுரைக்கு வந்த சோதனை...?

    ReplyDelete
    Replies
    1. நாளை சரித்திரம் ,இது சன்னி லியோன் பிறந்த மண் சொல்ல வேண்டாமா ,அதுக்குதான் :)
      நன்றி

      Delete


  4. இன்று :

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/12/Intellect-Part-1.html

    ReplyDelete
    Replies
    1. எது அறிவு என்பதை படித்து புரிந்து கொண்டேன் ஜி :)
      நன்றி

      Delete
  5. 01. புது செருப்பு சுட்டதா

    02. சேவல் கோழியை பார்ப்பதில் தப்பில்லையே...

    03. இதுகூட ஒருவகையில நல்லதுதான் நம்மூரு நடிகைகள் பெர்த் சர்டிபிகேட் வாங்கிகிறலாமே 16 வயசுனு..

    04. இதுக்குத்தான் சேவிங்க் அக்கவுண்ட்ல பணம் போடுறாங்களோ...

    05. இது''களு''ம் ''கழு''தைகள்தானோ...

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. 1.தோல் செருப்பென்றாலும் சுட்டது என்றால் சுடத்தானே செய்யும் :)
      2.அதுக்காக வயசு வித்தியாசம் வேண்டாமா :)
      3.இல்லை என்றாலும் அவர்கள் வயது என்றும் பதினாறுதானே :)
      4.ஆனால் ,குங்குமம் சுமக்கும் கழுதைகள் :)
      நன்றி

      Delete
  6. சிரித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. சிரிப்பை ரசித்தேன் :)
      நன்றி

      Delete
  7. Replies
    1. மிகவும் மகிழ்ந்தேன் :)
      நன்றி

      Delete
  8. வணக்கம்
    எல்லாம் கைவந்த கலைகள்.. மாற்ற முடியாது... அருமையாக உள்ளது இரசித்தேன் த.ம4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கை வந்த கலை மட்டுமா ,காலுக்கு தேவையானதை போடும் கலையும்கூட:)
      நன்றி

      Delete
  9. அருமை அண்ணா! ஒரு டவுட் ? ஒருவேளை முட்டைப்போட்டது ஆம்பள ஆசிரியரா இருந்தா பசங்களுக்கு என்ன ஞாபகம் வரும் ?

    ReplyDelete
    Replies
    1. கழுதை ஞாபகம் வரலாம் ,படிக்க லாயக்கு இல்லையென்று 'உதைத்து ' வகுப்புக்கு வெளியே தள்ளினாரே :)
      நன்றி

      Delete
  10. புதுச் செருப்புக்கு ஆசைப்பட்டு ஓசிச் சாப்பாடும் பறிபோனதே!!!

    ReplyDelete
    Replies
    1. சாப்பாட்டின் அருமை ,' பசி 'க்கு தெரியுது ..அவருக்கு தெரியலியே :)
      நன்றி

      Delete
  11. வெறும் கையோட வந்து செருப்பு காலோட போறவருக்கு இந்த அவமானம் தேவைதான்! அனைத்தும் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அந்த மனுஷனுக்கு ஏது தன்மானம் ,இந்த மடம் இல்லேன்னா அடுத்த மடம்னு போய்கிட்டே இருக்காரே :)
      நன்றி

      Delete