26 December 2014

வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவரின் வருத்தம்!


நன்றி மறக்காத டாக்டர் ?

                      ''டாக்டர் அறையிலே  நிறைய பேர் போட்டோவை  மாட்டிவச்சிருக்காரே ,ஏன்  ?''
                ''டாக்டர்கிட்டே காசையும் கொடுத்து ,உயிரையும் தியாகம்  செய்தவங்களாச்சே அவங்க ! ''





சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

மந்திரி செருப்படி வாங்கியதில் தவறே இல்லை !

            '' பொதுமக்கள்கிட்டே  மந்திரி என்ன சொன்னார்னு 

...இப்படி அவர் மேலே செருப்பை எறியுறாங்க ?''
             
             ''இப்போது வாழைத் 'தார் 'விடும் சீசன் 

ஆரம்பித்து விட்டதால் விரைவில் ரோடுகள் 

போடப்படும்னு சொன்னாராம் !''





இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....


அந்த மந்திரி வாழைப் பழ சோம்பேறியா இருப்பான் போலிருக்கே!!
ReplyDelete

Replies


  1. எதையும் புரிந்து கொள்வதிலும் வாழை மட்டைதான் !
    நன்றி
  2. தோல்வியை தழுவிய வருத்தப் படாத வாலிபர் சங்கம் ?

                ''வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை தலைவர் ஏன் கலைச்சுட்டார் ?''
                     
  3.                                        ''அவர் ஆக்சிடென்ட்ஆகி  ஆறுமாசமா  
  4. ஆஸ்பத்திரியில் கிடந்தப்போ ,எவனுமே அவரை வந்து 
  5. பார்க்கலையாம் !''
  6.                                            
  7. 2012ம் இதே நாளில் ,ஜோக்காளியில்........
  8. குண்டம்மா தடை சட்டம் வருமா ?


                        ''மை  லார்ட் !என் கட்சிக்காரர்  பெண்மணி என்பதால் குண்டர் தடை சட்டத்தின்  கீழ் அவரை கைது செய்தது செல்லாது என அறிவிக்க கோருகிறேன் ''


  9. தேர்தல் ..தொடக்கமும் ,முடிவும் !


    மனுத் தாக்கலில் தொடங்கி 
  10. மனுசத் தாக்குதலில்  முடிவது !














23 comments:

  1. 01. எல்லாம் கருணைக்கொலையா ?

    02. இவணையெல்லாம் வாழைத்தாருலயில பாடை கட்டனும்.

    03. இருந்தாலும் இது மோசம்தானே..

    04. இதுக்கு சட்டதுல இடம் இருக்கா ?

    05. ஹைக்கூ ஸூப்பரு...

    தமிழ் மண இணைப்புடன் ஒரு குத்து.

    ReplyDelete
    Replies
    1. 1.தேடிவந்து உயிரைக் கொடுத்தால் ,இந்த பெயரா :)
      2.அதாவது பெட்ரோல்லே குளிப்பாட்டி ?:)
      3.தலைவருக்கே இந்த கதியா :)
      4,இடத்தை உண்டாக்கணும் :)
      5.தலைப்பு ஒரு வரி ,மேட்டர் இரண்டு வரி ...இதெல்லாம் ஹைக்கூ ஆகுமா :)

      Delete
  2. வணக்கம்
    ஆகா..ஆகா... சிறப்பாக உள்ளது... வைத்திய சாலை விடயத்தை இப்பதான் புரிந்து கொண்டேன்.... பகிர்வுக்கு நன்றி த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பிரபலம் ஆகாதவர்களின் போட்டோக்கள் மாட்டியிருக்கிற ஆஸ்பத்திரிகளில் இனிமேல் நுழையவே யோசிக்கணும் ,சரியா :)

      Delete
  3. Replies
    1. இரண்டாம் நன்றி !

      Delete
  4. நகைப்பு
    தம கூடுதல் ஒன்று

    ReplyDelete
    Replies
    1. நகைப்புக்கும் ,ஒன்றுக்கும் இரட்டை நன்றி :)

      Delete
  5. ஹா... ஹா... இவரல்லவோ டாக்டர்...!

    ReplyDelete
    Replies
    1. வாழ வைத்த தெய்வங்களை மறக்காத டாக்டர் :)

      Delete
  6. அருமைக்கு முதல் நன்றி !

    ReplyDelete
  7. ஆஹா....சீக்கிரமே முழு வைத்தியர் ஆயிடுவார்னு சொல்லுங்க....

    அடடா.... இவரல்லவோ நன்மந்திரி!

    ஓஹோ.... தன் கொள்கை தன்னைச்சுடும் கேஸா!!

    நல்லவேளை குண்டருக்கு அப்படியே பெண்பால் எடுக்காமல் போனீர்களே!!

    ஆம், உண்மை! உண்மை!!

    ReplyDelete
    Replies
    1. ஆயிரம் போட்டோ இருந்தாலே 'அறை' வைத்தியன் தானே ஆகமுடியும் :)

      அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் இவர்தலை உருளப் போவது நிச்சயம் :)

      வருத்தம் இதற்கும் பட வில்லை என்றால் எப்படி :)

      ஆடவர் ,பெண்டிர் என்பதனாலா :)

      உண்மையன்றி வேறில்லைதான்:)

      Delete
  8. அதனால் தான் அகிம்சையை கொலைசெய்துவிட்டு பல எடத்துல காந்தி படம் மாட்றாங்க போல:((
    ரெண்டாவது ஜோக் மந்திரிதான் மூணாவது ஜோக் ல வர பேசன்ட். அவரை அலேக்கா தூக்கிட்டுபோய் அந்த first ஜோக் ஆஸ்பத்திரில விட்டீங்கன்ன அந்த கடைசி தேர்தல் பஞ்ச் குறைய சான்ஸ் இருக்குல்ல:))) ஏதாவது புரிஞ்சதா பாஸ்,,,,ஏன்னா நானே மைல்டா கன்பீஸ் ஆகிட்டேன்....அவ்வவ்வ்வ்வ்

    ReplyDelete
    Replies
    1. போறப் போக்கைப் பார்த்தால் கோட்சே படம் மாட்டச் சொல்வாங்க போலிருக்கே :)

      இன்னிக்கு ராத்திரி பூரா யோசிச்சாதான் ஏதோ கொஞ்சம் புரியும் போலிருக்கு :)

      Delete
  9. Replies
    1. வ வா சங்கத்தை தலைவர் கலைச்சதும் அருமைதானே :)

      Delete
  10. எல்லாமே சி(ரி)றப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இதை நீங்கள் சொல்லி இருக்கும் விதமும் சிறப்பு :)

      Delete
  11. அனைத்தையும் ரசித்தேன். வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் குண்டம்மாவை ரசித்தேன்.
    த.ம.9

    ReplyDelete
    Replies
    1. வருத்தப் பட வேண்டிய விசயத்திற்கு வருத்தப் பட்டுதானேஆகணும் :)

      Delete
  12. சங்கம் சிறப்பான பணியைத்தானே செய்துள்ளது ! எதற்கு கலைத்தார் ? பெயர்லயே வருத்தப்படாத னு வச்சிட்டு , எனக்கு அடிபட்டப்போ வருத்தப்படலைனு வருத்தப்படற அவருலாம்ம வருத்தப்படாத வாலிபர் சங்கத்தோட தலைவர்னு நினைக்கறப்போ வருத்தமா இருக்கு அண்ணா !

    தம

    ReplyDelete
    Replies
    1. வயிற்று வலி தனக்கு வந்தாதான் தெரியும் என்பார்கள் ,தலைவர் அதை இப்போதான் உணர்ந்தார் போலிருக்கு :)

      Delete